வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

டமிலன் என்றொரு அடிமை

மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.இதனை உணராதாலேயே இன்று வரை தமிழன் அடிமையாக வாழ்ந்து வருகிறான் அவன் அடிமை என்பதற்கான அடையாளம் அவன் பேசும் மொழியிலேயே உள்ளது.ஆங்கிலத்தைத் தனியாகவோ, தமிழுடன் கலந்தோ அவன் பேசும் போது அவன் அடிமை என்று தன்னை அறிவித்துக் கொள்கிறான்.இதில் என்ன கொடுமை என்றால் இந்த அடிமை தமிழ்பேசும் அன்பர்களை இழிவாக நோக்குகிறது....

கவிஞர் தணிகைச் செல்வன் தமிழனின் நிலை பற்றிக் கூறும்போது,

மொழியை விடவும்
மேலானது
மொழி உணர்வு

எனவே
தமிழை விடவும்
தலையாயது
தமிழுணர்வு

மொழி உணர்வு
இறந்த தேசத்தில்
மொழியும் இறந்துபடும்

தமிழுணர்வு
இழக்கும் நாட்டில்
மிஞ்சுவது
தமிழின் சவமே

மொழி உணர்வைக்
கழித்துவிட்டு
மிச்ச உணர்வுகளை
ஊட்டுவது
பிணத்துக்கு ஏற்றும்
ஊசி மருந்துகளே

மொழி உரிமை
மறுக்கப்பட்ட மக்கள்
இன அடிமைகளாவது
இயல்பு

தமிழுரிமை பறிகொடுத்த
மக்களைத்
தளைப்படுத்துவது
எளிது

மொழி உணர்வின்
மறுபக்கம்
இன உணர்வு

இன உணர்வின்
இடப்பாகம்
மொழி உணர்வு

இன உணர்வற்ற
மொழி உணர்வு
காய்க்காத பூ
மொழி உணர்வற்ற
இன உணர்வு
காம்பிழந்த பூ

இரு உணர்வமற்ற
தமிழன் காகிதப்பூ
............
என்பர்.

காலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது.அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான்.

கிபி3 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய மணிப்பிரவாளம் தமிழனைப் பெரும்பாடுபடுத்தியது. தமிழுடன் வடமொழியைக் கலந்து பேசுவதை அக்காலத் தமிழன் பெருமையாகக் கருதினான்.
சான்றாக,
“கந்யகா யோக்யனாகிய பர்த்தா ஸஹஸ்ர கூடஜின பவனத்தையடைதலும் சம்பகவிகாசமும் கோகில கோலாஹலமும் தடாகபூர்ணமும் தக்கத குமுத விகாசமும் மதுகர சஞ்சாரமும் கோபுரக வாகட விகடனமுமாகிய அதிசயங்களுள வாகுமென்று ஆதேசித்தனர்”(சீனிவாசர்-வரலாற்றறிஞர்(Tamil studies . p-229)

• அன்றைய தமிழனுக்கும் இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான். Thamizh என்று அழைக்க மறுக்கிறான்.
• செந்தமிழில் முனைவர் பட்டம் முடித்தவர் கூட தம் பெயருக்கு முன்னால் டாக்டர் என்றே இட்டுக்கொள்ள விரும்புகிறார்.
• படிப்பறிவில்லாத கிராமத்துப் பாட்டிகூட இன்று “ட்ரெயின் ஏறி ஸ்டேசன் போய் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்ட்டு அங்கிருந்து போன் பன்றேன்னு சொல்லுது.
• இவ்வளவு ஏன் நம் ஊரிலுள்ள குப்பைத் தொட்டிகள் கூட “யூஸ் மீ” என்று தானே ஆங்கிலம் பேசுகின்றன.

தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.
போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?

பிறமொழியைக் கற்று வை.
உன் தாய் மொழி மீது பற்று வை”

என்பது ஏன் இவனுக்குப் புரியாமல்ப் போகிறது.


இங்கு ஸ்போக்கன் இங்லீஸ் சொல்லித் தரப்படும் என்னும் விளம்பரப் பலகைகளைக் காணும்போது, எதிர்காலத்தில் இங்கு தமிழ் சொல்லித்தரப்படும்” என்னும் பலகை வைக்கும் நிலை வருமோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.


இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் என்னும் மொழியைத் தொலைத்து டமிலனாக, தமிங்கிலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அடிமை எதிர்காலத்தலைமுறையை உருவாக்கினால் எப்படி இருக்கும். எதிர்காலத்தலைமுறையும் “டமில்”த்தலைமுறையாகவே உருவாகும்...............
என்று மாறும் இந்நிலை?????????????????

23 கருத்துகள்:

  1. தமிழனுக்கு சவுக்கடி இந்த பதிவு...எல்லாம் இங்கு சுழ்நிலை மனிதர்களாக வாழவேண்டிய காட்டாயத்தில் இருப்பதால் இங்கு இலக்கு இலக்கங்களுக்கே....
    “பிறமொழியைக் கற்று வை.
    உன் தாய் மொழி மீது பற்று வை”
    இதை யார் பின் தொடர்வார்.....

    தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.
    போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?
    எத்தனை கோவம் எத்தனை துடிப்பு இந்த வார்த்தையில்..........
    தாயை தாய் என அழைக்க சொல்லிதரும் அவலம் நம்மில் மட்டுமா? ஏன் இப்படி?
    இதுவரை தங்கள் பதிவில் கண்டது தகவல் இம்முறை கண்டது தாகம் வேகம் கோவம் ருத்திரம்....வெகு அருமை......

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அழகாகவும் ஆக்ரோசமாகவும் எழுதியிருக்கிறீர்கள் ஐயா. இதன் பிரதிகளை தொலைக்காட்சி நிறுவனர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் அனுப்புங்கள். மெல்லத் தமிழைச் சாகப்பண்ணும் விசம்கள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன உணர்வற்ற
    மொழி உணர்வு
    காய்க்காத பூ
    மொழி உணர்வற்ற
    இன உணர்வு
    காம்பிழந்த பூ

    உண்மை தான்

    பதிலளிநீக்கு
  4. அருமையான உயர்பான கவிதை...

    கருத்துரைக்கு நன்றி சரவணன்...

    பதிலளிநீக்கு
  5. இன உணர்வற்ற
    மொழி உணர்வு
    காய்க்காத பூ
    மொழி உணர்வற்ற
    இன உணர்வு
    காம்பிழந்த பூ

    உண்மை தான்/

    கருத்துரைக்கு நன்றி சக்தி..!

    பதிலளிநீக்கு
  6. Hello Sir,
    I need your help on a tamil name. Could you please give me your email id or phone number please.

    Thanks.

    பதிலளிநீக்கு
  7. என் மனசில நெனச்சத நீங்களும் பதிவு பண்ணதுக்கு மிகவும் நன்றி அய்யா.. கமல்ஹாசன் தசாவதராம் படத்தில சொன்னது மாதிரி தமிழ நம்ம வாழ வெக்க மாட்டோம் வேற யாரவது வந்து வாழ வெப்பாங்க..

    பதிலளிநீக்கு
  8. Hello Sir,
    I need your help on a tamil name. Could you please give me your email id or phone number please.

    Thanks/

    கூகுளில் தமிழ்ப்பெயர்கள் என்று அடித்தால் நிறைய இணைய முகவரிகள் கிடைக்கின்றன நண்பரே....ஷ

    மேலும் விவரங்களுக்கு...

    gunathamizh@gmail.com

    தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  9. என் மனசில நெனச்சத நீங்களும் பதிவு பண்ணதுக்கு மிகவும் நன்றி அய்யா.. கமல்ஹாசன் தசாவதராம் படத்தில சொன்னது மாதிரி தமிழ நம்ம வாழ வெக்க மாட்டோம் வேற யாரவது வந்து வாழ வெப்பாங்க../

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரு...

    பதிலளிநீக்கு
  10. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் குணா...

    பதிலளிநீக்கு
  11. தமிழ்மணம் விருது பெற்றதற்கு வாழ்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பிரியமுடன்...வசந்த் said...

    வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் குணா...

    நன்றி வசந்த்..

    பதிலளிநீக்கு
  13. திகழ் said...

    வெற்றிக்கு வாழ்த்துகள்..


    நன்றி திகழ்..

    பதிலளிநீக்கு
  14. குலவுசனப்பிரியன் said...

    தமிழ்மணம் விருது பெற்றதற்கு வாழ்துக்கள்.


    நன்றி பிரியன்..

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் தல‌

    தமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு

    பதிலளிநீக்கு
  16. தமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்.

    இது கருத்துக்குக் கிடைத்த வெற்றி. இனியேனும் தாய் மொழி உணர்வு சிறக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  17. தமிழ்மணத்தின் தங்கப் பதக்கத்தை வென்றமைக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. Blogger அபுஅஃப்ஸர் said...

    வாழ்த்துக்கள் தல‌

    தமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு.

    நன்றி அபு.

    பதிலளிநீக்கு
  20. UthamaPuthra said...

    தமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்.

    இது கருத்துக்குக் கிடைத்த வெற்றி. இனியேனும் தாய் மொழி உணர்வு சிறக்கும் என்று நம்புவோம்.


    வாழ்த்துக்களுக்கு நன்றி உத்தமதாரா.
    கருத்துக்களே வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.
    உணர்வுகளை வலுப்படுத்த இது போன்ற எழுத்துக்கள் தேவைப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  21. தமிழ்மண விருது - முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். தங்கள் தமிழ் உணர்வின் முன் நான் தலை வணங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு