வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 9 ஏப்ரல், 2009

சிந்தனையாளர்.பெர்னாட்ஷா.

பத்திரிக்கையாளர் ஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷாவைப் பார்த்து, தங்களை எல்லோம் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்களே ஏன்? தாங்கள் மட்டும் தான் சிந்திக்கின்றீர்களா? மக்கள் யாரும் சிந்திக்கவில்லையா? என்று கேள்வி கேட்டாராம்,

அதற்குப் பெர்னாட்ஷா,
எல்லோரும் சிந்திக்கிறார்கள்.... ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் சிந்திக்கிறார்கள். நான் வாரத்துக்கு இருமுறை சிந்திக்கிறேன். அதனால் தான் என்னைச் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்கள்.என்று விடையளித்தாராம்.

எவ்வளவு சரியான விடை. ஆம் மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு என்பதாலோ என்னவோ,மனித சிந்தனைகள் செக்கு மாடுபோல ஒன்றையே தான் சிந்தித்தவாறு இருக்கிறது.பணம் பணம் பணம் என அதை மட்டுமே மையமிட்டதாக மனித சிந்தனை அமைந்துவிடுவதால் மனிதம் செத்துவிடுகிறது. வேறு எதையும் அவனால் சிந்திக்க இயலவில்லை ஆண்டுக்கு ஒரு முறையோ,இரு முறையோ தான் தாம் செய்வது சரியா? தவறா? எனபதைக்கூட சிந்திக்க முடிகிறது.
தான்,தன் குடும்பம், தன் தலைமுறை என உண்டதையே உண்டு கண்டதையே கண்டு பேசியதையே பேசி..........
புதிதாகச் சிந்திக்க வேறு களம் இன்றி வாழ்ந்து மடியும் மானிடர்களை எவ்வாறு சிந்தனையாளர் என அழைப்பது..? என்ற பெர்னாட்ஷாவின் கேள்வி மிகவும் சரியாகவே எனக்குப் படுகிறது.

6 கருத்துகள்:

  1. என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை எனும் தேடல் தொடங்கும்
    உண்மையான கருத்து பணம் பணம் பணம் இது தேவைக்கு தேடபோய் தன்னையே தொலைத்து இயந்திரமாகி கொண்டு இருக்கிறான் மனிதன் தன்னை யோசிக்கவே நேரம் இன்றி அடுத்தவனை விழ்த்தி வெற்றி காணவே தன்னை தொலைத்து தேடுகிறான் செல்வம்....மனிதம் மறந்து போனது மானுடம் இறந்து போனது..... நல்லவேளை அறிஞர் இன்று இல்லை....இருந்த் இருந்தால் அவரை சிந்திக்கவே விட்டு இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்....ஒரு நல்ல கருத்தை சொல்லி என்னை ஒரு நொடி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. மனிதன் சிந்திந்துக் கொண்டேதான் இருக்கிறான்.. ஆனால், அவன் நல்ல விஷயங்களை சிந்திக்கின்றானா என்பதுதானே கேள்வி.. வாழ்க்கையே இன்று வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. வியாக்கியானம் பேசுபவர்களும் வசதி படைத்தவனைக் கண்டால் வெறுமனே இருக்கின்றனர். பணம் படைத்தவன் சொற்கள்தான் இன்று அதிகமாக அம்பலம் ஏறுகின்றன! நல்ல விஷயத்தை சிந்தித்து செயல்பட்டால் சில்லரை தேராது என்று இன்று கூட எங்கள் ஊர் 'வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு' வந்த ஒரு சகோதரர் கூற கேட்டேன்.. அவர் கூற்றிலும் உண்மை இருக்கிறதே என்ன செய்ய?

    தமிழரசி கூற்றைப்போல், இன்று பெர்னாட் ஷா இருந்திருந்தால்..! அதுசரி.. சில சமயம்.. ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் அரசியல்வாதிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்..

    பின் குறிப்பு: அதற்காக பெர்னாட் ஷாவையோ.. உங்கள் கருத்தையோ நான் குறை கூறுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்! நானும் நல்ல விஷயங்களையே சிந்திக்க முயற்சிக்கிறேன்.. ரொம்ப 'காஸ்ட்லி'யாக இருக்கிறதே! என்ன செய்ய?!

    பதிலளிநீக்கு
  3. சென்ஷி said...

    :-))

    நல்லாயிருக்குது.
    கருத்துரைக்கு நன்றி சென்ஷி..

    பதிலளிநீக்கு
  4. தமிழரசி said...

    என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை எனும் தேடல் தொடங்கும்
    உண்மையான கருத்து பணம் பணம் பணம் இது தேவைக்கு தேடபோய் தன்னையே தொலைத்து இயந்திரமாகி கொண்டு இருக்கிறான் மனிதன் தன்னை யோசிக்கவே நேரம் இன்றி அடுத்தவனை விழ்த்தி வெற்றி காணவே தன்னை தொலைத்து தேடுகிறான் செல்வம்....மனிதம் மறந்து போனது மானுடம் இறந்து போனது..... நல்லவேளை அறிஞர் இன்று இல்லை....இருந்த் இருந்தால் அவரை சிந்திக்கவே விட்டு இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்....ஒரு நல்ல கருத்தை சொல்லி என்னை ஒரு நொடி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..

    கருத்துரைக்கு நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு
  5. என்று கேள்வி கேட்க தொடங்குகிறோமோ அப்போது தானே விடை எனும் தேடல் தொடங்கும்
    உண்மையான கருத்து பணம் பணம் பணம் இது தேவைக்கு தேடபோய் தன்னையே தொலைத்து இயந்திரமாகி கொண்டு இருக்கிறான் மனிதன் தன்னை யோசிக்கவே நேரம் இன்றி அடுத்தவனை விழ்த்தி வெற்றி காணவே தன்னை தொலைத்து தேடுகிறான் செல்வம்....மனிதம் மறந்து போனது மானுடம் இறந்து போனது..... நல்லவேளை அறிஞர் இன்று இல்லை....இருந்த் இருந்தால் அவரை சிந்திக்கவே விட்டு இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்....ஒரு நல்ல கருத்தை சொல்லி என்னை ஒரு நொடி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி..

    13 April 2009 23:03
    Delete
    Blogger கிருஷ்ணா said...

    மனிதன் சிந்திந்துக் கொண்டேதான் இருக்கிறான்.. ஆனால், அவன் நல்ல விஷயங்களை சிந்திக்கின்றானா என்பதுதானே கேள்வி.. வாழ்க்கையே இன்று வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. வியாக்கியானம் பேசுபவர்களும் வசதி படைத்தவனைக் கண்டால் வெறுமனே இருக்கின்றனர். பணம் படைத்தவன் சொற்கள்தான் இன்று அதிகமாக அம்பலம் ஏறுகின்றன! நல்ல விஷயத்தை சிந்தித்து செயல்பட்டால் சில்லரை தேராது என்று இன்று கூட எங்கள் ஊர் 'வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு' வந்த ஒரு சகோதரர் கூற கேட்டேன்.. அவர் கூற்றிலும் உண்மை இருக்கிறதே என்ன செய்ய?

    தமிழரசி கூற்றைப்போல், இன்று பெர்னாட் ஷா இருந்திருந்தால்..! அதுசரி.. சில சமயம்.. ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் அரசியல்வாதிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்..

    பின் குறிப்பு: அதற்காக பெர்னாட் ஷாவையோ.. உங்கள் கருத்தையோ நான் குறை கூறுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்! நானும் நல்ல விஷயங்களையே சிந்திக்க முயற்சிக்கிறேன்.. ரொம்ப 'காஸ்ட்லி'யாக இருக்கிறதே! என்ன செய்ய?!

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு