வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 27 ஜனவரி, 2010

தமிழாய்வும் அறிவியலும்.




தமிழ் என்றால் திருக்குறளும், சிலம்பும், இராமாயணம், மகாபாரதம் என்றே பலர் நினைத்துவருகின்றனர். தமிழ் மாணவர்களும், ஆய்வாளர்களும் இது போன்ற சிந்தனை கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகவுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிற்குள் பல துறைகள் அடங்கியுள்ளன. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் 25 தமிழ்த்துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

கீழே 37 துறைகள் குறிப்பிட்டிருக்கிறேன். இத்துறைகள் ஒவ்வொன்றும் தம்முள்ளே பல உட்கூறுகளைக் கொண்ட ஆய்வுக்களங்களாகத் திகழ்கின்றன.இத்துறைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரித்தால் 200க்கும் மேற்பட்ட தமிழாய்வுத் துறைகளை இனம் காணமுடியும்.
ஆய்வாளர்கள் சிறுகதை, புதினம், சிற்றிலக்கியம் என்றே தம் ஆய்வுகளை முடித்துக்கொள்கின்றனர்.
• தமிழாய்வுத் துறைகள் எத்தனை இருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.
• செய்த ஆய்வுத் தலைப்புகளையே மீண்டும் மீண்டும் செய்வதால் யாது பயன்?
ஆய்வு என்பது வாழ்வியலுக்குப் பயன்படவேண்டும். இலக்கியங்களை ஆய்வு செய்தாலும் அறிவியல் நோக்கோடு வாழ்வியலுக்குப் பயன்படுமாறு செய்தல் வேண்டும்.
• கவிஞர். வைரமுத்து இன்றைய நிலையை,

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.
என்றுரைக்கிறார்.

• தமிழ் படித்தால் வாத்தியார் வேலைக்குப் போகலாம் என்பது மட்டும் தமிழர்களிடம் ஆழப்பதிந்திருக்கிறது.
“வழக்கில் சொல்வதுண்டு,

“வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“

அதன் உண்மையான பொருள்,

“வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“

என்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.
நன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்.

திருடனின் போக்குக் கற்றவனே போலீசு வேலைக்குப் போக முடியும்.

வேலையில் எந்தவிதத்திலும் உயர்வு தாழ்வில்லை. மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
• தமிழ்த்துறை சார்ந்தோர் தமிழ்த்துறைகள் பலவற்றையும் அறிந்து தம் ஆய்வை மேலும் எதிர்கால நோக்கோடு, வாழ்க்கைக்குப் பயன்தரும் விதத்தில் செய்ய வேண்டும். இத்துறைகளிலெல்லாம் பணிவாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் அறிவியல்

• பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை.
• தம் தாய்மொழியாயே சிந்தித்து இவ்வறிவைப் பெற்றனர். எல்லா அறிவியல்த் துறைகளும் தமிழ் மொழி வழியே இருத்தல் நம் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
• அறிவியலுக்கு மொழி தடையா?
• 500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?
• ஆய்வுகள் வாழ்வியலுக்கும் அறிவியலுக்கும் முன்னுரிமை தருதல் வேண்டும்.
• ஆய்வுத்திட்டங்களுள் அறிவியலுக்கும், வாழ்வியலுக்கும் முன்னுரிமையளிக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.


தமிழ்த்துறைகள்
.


² இலக்கியம் (சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்திஇலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல் திரட்டு, இக்கால இலக்கியம்)
² இலக்கணம் ( எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல்)
² வரலாறு (இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, மொழி வரலாறு, தமிழக வரலாறு, இந்திய வரலாறு)
² கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்த் துறை.
² சுவடியியல். (அரிய கையெழுத்துச் சுவடித் துறை)
² மொழியியல்.
² மானிடவியல்.
² அகராதியியல்.
² சொற்பிறப்பியல்.
² நுண்கலைகள். ( கோயில் கலை.கட்டிடக்கலை, ஒவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, நடனக்கலை)
² மொழிபெயர்ப்பியல்.
² ஒப்பியல்.
² தொன்மவியல்.
² சித்தரியல்
² சைவ சித்தாந்தக் கொள்கைகள்.
² காந்தியக் கொள்கைகள்.
² பெரியாரியக் கொள்கைகள்.
² நேரு கொள்கைகள்
² வள்ளுவக் கொள்கைகள்.
² கலைச் சொல்லாக்கம்.
² இதழியல்.
² தகவல் தொடர்பியல் ( வானொலி, தொலைக்காட்சி, இணையம்)
² அயலகத் தமிழ்த்துறை.
² சமூக அறிவியல்த் துறை.
² கல்வியியல்த் துறை ( மாணவர் உளவியல், கல்வி உளவியல்)
² தத்துவவியல்த் துறை.
² பழங்குடி மக்கள் வாழ்வியல்.
² நாட்டுப்புறவியல்த் துறை.( நாட்டார் வழக்காற்றியல்)
² தொல்லறிவியல்.
² தொழில் மற்றும் நிலஅறிவியல்.
² கணிப்பொறி அறிவியல்த் துறை.
² சுற்றுச் சூழல், மூலிகை அறிவியல்த் துறை.
² திறனாய்வியல்த் துறை.
² பதிப்பியல்த் துறை.
² சோதிடத் துறை.
உளவியல்த் துறை



தமிழில் இத்தனை துறைகள் இருக்கின்றன. இவையன்றி அறிவியலைத் தமிழ் மொழி வழி அணுகும் போது இன்னும் பல புதிய துறைகள் உருவாகும் வாய்ப்பிருக்கின்றனது. இதனை

அரசு,
தமிழ் வழி கற்கும் மாணவர்கள்,
தமிழ் மொழியைக் கற்கும் மாணவர்கள்,
பெற்றோர்,
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர்,


என யாவரும் உணரல் வேண்டும்.

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உவே. சாமிநாதையர் அன்று வடமொழியையோ வேறு துறையையே தேர்ந்தெடுத்திருந்தால் நாம் இன்று பெருமைபேசும் சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்காது.

அவர் தேர்ந்தெடுத்தது பதிப்பியல்த்துறை. அவரையும் அவரது பணியையும் யாரும் மறக்க முடியாது. அதுபோல,

தமிழுக்குத் தொண்டு செய்வோம்!
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்!

29 கருத்துகள்:

  1. நல்ல தகவலுக்கு நன்றி. தமிழில் கற்பதற்கு இத்தனை துறைகள் இருக்கின்றன. கற்பதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  2. இல்லை நண்பரே...
    அவர்களெல்லாம் தமிங்கிலர்களாக மாறிப்போனார்கள்!

    பதிலளிநீக்கு
  3. “வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
    போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“

    அதன் உண்மையான பொருள்,

    “வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
    திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“

    என்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.
    நன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்......

    ..........இப்படித்தான் நிறைய விஷயங்கள் தமிழில் மருவி வேறு பொருளை தரும் விதமாக நடை முறையில் இருக்கிறது.
    தமிழ் துறைகளை பற்றிய உங்கள் தகவல் தொகுப்புக்கு நன்றி...........

    பதிலளிநீக்கு
  4. தமிழன் தன் இனத்திற்கு சொந்தமானை அறிவையும், ஆற்றலையும், அறிவியலையும் அறியாமலே ”சீமை சரக்கிற்கு” அடிமையாகிக்கொண்டிருக்கிறான். அனைத்து நிலைகளிலும் தமிழனை மீட்டெடுப்பது மானமுள்ள தமிழனின் கடமையாகும்.

    தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. Chitra said...

    “வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
    போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“

    அதன் உண்மையான பொருள்,

    “வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
    திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“

    என்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.
    நன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்......

    ..........இப்படித்தான் நிறைய விஷயங்கள் தமிழில் மருவி வேறு பொருளை தரும் விதமாக நடை முறையில் இருக்கிறது.
    தமிழ் துறைகளை பற்றிய உங்கள் தகவல் தொகுப்புக்கு நன்றி...........

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  6. சீ.பிரபாகரன் said...

    தமிழன் தன் இனத்திற்கு சொந்தமானை அறிவையும், ஆற்றலையும், அறிவியலையும் அறியாமலே ”சீமை சரக்கிற்கு” அடிமையாகிக்கொண்டிருக்கிறான். அனைத்து நிலைகளிலும் தமிழனை மீட்டெடுப்பது மானமுள்ள தமிழனின் கடமையாகும்.

    தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.



    ஆம் நண்பரே..
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அக்பர்.

    பதிலளிநீக்கு
  8. //நல்ல தகவலுக்கு நன்றி. தமிழில் கற்பதற்கு இத்தனை துறைகள் இருக்கின்றன. கற்பதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் இருக்கிறார்களா?//

    தமிழர்கள் இருக்கிறார்கள் தலைவரே..நம்மை போன்றவர்கள் கற்றாலே போது. நல்ல தகவல் தல..நன்றி

    பதிலளிநீக்கு
  9. //2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?//

    நியாயமான கேள்வி, கண்டிப்பாக முடியும்.

    பதிலளிநீக்கு
  10. Blogger புலவன் புலிகேசி said...

    //நல்ல தகவலுக்கு நன்றி. தமிழில் கற்பதற்கு இத்தனை துறைகள் இருக்கின்றன. கற்பதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் இருக்கிறார்களா?//

    தமிழர்கள் இருக்கிறார்கள் தலைவரே..நம்மை போன்றவர்கள் கற்றாலே போது. நல்ல தகவல் தல..நன்றி.



    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. "பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை"
    நிச்சியமாக முன்னோர்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களை நாம் இன்னும் இந்த அறிவியல் உலகத்தில் தெரிந்துகொள்ளவில்லை

    "500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?"
    இந்த வேகமான உலகத்தில் 500 ஆண்டுகளே உள்ள மொழி அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறதே என்ன செய்ய?
    "மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை"
    நமக்கு பாதுகாக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நம் தாய்மொழி தமிழை அடுத்த சந்ததியினருக்கு அழிந்து விடாமல் கொண்டு செல்லலாம்.


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  12. ஆம்... இன்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் வெளிநாட்டுகாரர்களுக்கு இது தெரியவில்லை. திருவள்ளுவரின் சில குறள்களின் மூலம் பூமி உருண்டை என்றும் அது சுழல்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது... இது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. நம்மவர்கள் அனைத்துக் கலை மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.. நடுவில் ஏதோ சிக்கல் நிகழ்திருக்கிறது... என்னவென்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம் இன்றைய மனநிலை மற்றும் ஆற்றல் நம் முன்னோரைப் போன்று இல்லை.. என்னவென்று தெரியவில்லை.. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. நன்றி...

    பதிலளிநீக்கு
  13. ஆஹா அருமயான பதிவு ! இதுவரை தெரியாத பல விசயங்களை இங்கு தெரிந்துகொண்டேன் . அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  14. சைவகொத்துப்பரோட்டா said...

    //2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?//

    நியாயமான கேள்வி, கண்டிப்பாக முடியும்.


    கருத்துரைக்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  15. Blogger அன்புடன் மலிக்கா said...

    மிக அருமையான பயனுள்ள தொகுப்பு.


    நன்றி மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  16. ஜிஎஸ்ஆர் said...

    "பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை"
    நிச்சியமாக முன்னோர்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களை நாம் இன்னும் இந்த அறிவியல் உலகத்தில் தெரிந்துகொள்ளவில்லை

    "500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?"
    இந்த வேகமான உலகத்தில் 500 ஆண்டுகளே உள்ள மொழி அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறதே என்ன செய்ய?
    "மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை"
    நமக்கு பாதுகாக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நம் தாய்மொழி தமிழை அடுத்த சந்ததியினருக்கு அழிந்து விடாமல் கொண்டு செல்லலாம்.


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்.


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஞானசேகர்.

    பதிலளிநீக்கு
  17. Blogger Dr. சாரதி said...

    மிகவும் பயனுள்ள பதிவு


    கருத்துரைக்கு நன்றி டாக்டர்.

    பதிலளிநீக்கு
  18. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    ஆம்... இன்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் வெளிநாட்டுகாரர்களுக்கு இது தெரியவில்லை. திருவள்ளுவரின் சில குறள்களின் மூலம் பூமி உருண்டை என்றும் அது சுழல்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது... இது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. நம்மவர்கள் அனைத்துக் கலை மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.. நடுவில் ஏதோ சிக்கல் நிகழ்திருக்கிறது... என்னவென்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம் இன்றைய மனநிலை மற்றும் ஆற்றல் நம் முன்னோரைப் போன்று இல்லை.. என்னவென்று தெரியவில்லை.. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. நன்றி...



    ஆம் நண்பரே சரியாகச் சொன்னீர்கள் நம் மொழியை நாம் தொலைத்தோம் அது தான் நமக்கு ஏற்பட்ட பெரும் சிக்கலாகும்.

    பதிலளிநீக்கு
  19. வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

    ஆஹா அருமயான பதிவு ! இதுவரை தெரியாத பல விசயங்களை இங்கு தெரிந்துகொண்டேன் . அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றிகள்.



    மகிழ்ச்சி சங்கர்.

    பதிலளிநீக்கு
  20. உங்களின் படைப்புகளை தற்போதுதான் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.. அனைத்தும் உபயோகமான படைப்புகள்..உங்கள் பணிசிறக்க விழைகிறேன் ..

    பதிலளிநீக்கு
  21. எப்பூடி முடியுதுங்க.. தமிழைத் தமிழாய் தமிழுக்குத் தமிழாய் தமிழ் தமிழாய் வருதே... மிகவும் நன்று
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. Sivaji Sankar said...

    உங்களின் படைப்புகளை தற்போதுதான் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.. அனைத்தும் உபயோகமான படைப்புகள்..உங்கள் பணிசிறக்க விழைகிறேன் ..


    நன்றி சிவாஜி சங்கர்.

    பதிலளிநீக்கு
  23. றமேஸ்-Ramesh said...

    எப்பூடி முடியுதுங்க.. தமிழைத் தமிழாய் தமிழுக்குத் தமிழாய் தமிழ் தமிழாய் வருதே... மிகவும் நன்று
    வாழ்த்துக்கள்.


    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  24. தங்கள் தகவல் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் தங்களின் படைபுக்களை அவ்வபோதுதான் படிப்பேன் இனி அடிக்கடி படிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்

    பதிலளிநீக்கு