
அதியனுக்கும் ஔவையாருக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும். இவர்கள் பற்றி வழங்கப்படும் செவிமரபுக் கதை ஒன்று,
ஒருமுறை ஔவையார் அதியனிடம் பாடல் பாடி பரிசில் பெறச்சென்றார். ஔவை மீது அதியன் கொண்ட அன்பாலும், தமிழ்ப்பற்றாலும் ஔவைக்கு உடனடியாகப் பரிசில் தராது காலம் தாழ்த்தினான். பரிசில் கொடுத்துவிட்டால் ஔவை தன்னை நீங்கி வேறிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமே அதியனின் காலம் தாழ்த்தலுக்கான காரணமாகும். ஔவையோ அதியனின் காலம் தாழ்த்தலைத் தாங்க இயலாதவறாக எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என வேறிடம் செல்ல எண்ணியபோது, அதியன் ஔவையின் விருப்பப்படி நிறைய செல்வங்கைளத் தந்து அனுப்பி வைத்தானாம். ஔவை சென்றபோது தன் வீரர்களைக் கள்வர்கள் போல அனுப்பி ஔவையிடம் கொடுத்த செல்வத்தை கைப்பற்றச் செய்தானாம்.
அப்படியாவது ஔவை தன்னிடம் மீண்டும் வந்துவிடுவார் என்ற அதியனின் எண்ணமே இந்தச் செயலுக்குக் காரணமாகும். அதியனின் இந்தச் செயலுக்குள் மறைந்திருப்பது ஔவை மீது அதியன் கொண்ட அன்பும் தமிழ்ப்பற்றும் தான்.
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராது நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல்…
“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“
பாடல்- புறநானூறு-206.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.
இப்பாடலின் பொருள்.
வாயிற் காப்போனே! வாயிற் காப்போனே!
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே!
தலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா?
இல்லை என் தரத்தை அறியமாட்டானா?
அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே!
ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.
மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எ்பபடி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.
என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறுகிறார்.
பாடல் உணர்த்தும் உட்பொருள்.
காட்டில் மரங்களுக்குக் குறைவில்லை. அதுபோல உலகத்தில் புரவலர்களுக்கும் குறைவில்லை.
எத்திசை சென்றாலும் சோறுகிடைக்கும்!
பாடல் உணர்த்தும் வாழ்வியல் அறம்.
¯ பசியை விட மானம் பெரிது.
¯ தச்சர் பெற்ற சிறுவர்களின் கலைத்திறனே அவர்கள் வாழ்வின் முதலீடு. அவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை! அதுபோல கல்வியென்னும் பெருஞ்செல்வத்தை முதலீடாகக் கொண்டவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை.
¯ நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.
¯ யாரை நம்பியும் யாரும் இல்லை.
¯ கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.
வாழ்வியல் நுட்பம்
வாழ்வில் வெற்றிபெற்றவர்களின் கடந்த காலத்தைத்திருப்பிப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்குப் பக்கத்தில் அவர்களின் சுதந்திர உணர்வு இருக்கும்.
யாருக்கோ கட்டுப்பட்டு நம் திறமைகளை வெளிபடுத்தாமல்,
நம் திறமையை உணராதவர்களின் கீழ் வாழும் வாழ்க்கை,
வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பது போன்றது.
வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பர்களால் வாழ்வில் சாதிக்கமுடியாது!
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.
பசி வந்தபோதும் மானத்தை இழக்காத மாண்புடையவர்களே சிறந்த சாதனையாளர்களாவர்.
என்னும் பல்வேறு வாழ்வியல் நுடபங்களையும் உணர்த்துவதாக இப்பாடல் அமைகிறது.
வாழ்வியல் நுட்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும், அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல வாழ்வியல் பாடம்.
ReplyDeleteதமிழின் அழகே அழகு. அதுவும் உங்களால் விளக்கப்படும் பொழுது மேலும் சிறப்பு பெறுகிறது.
ReplyDeleteதொடரட்டும் உமது பணி.
Blogger சசிகுமார் said...
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சசி.
ஆகா.. என்ன பயனுள்ள தகவல்.. நன்றிகள் பல.. ஓட்டுகள் போட்டாச்சு..
ReplyDeleteஉங்கள் நற்பணி தொடர்க..
நன்றி..
Blogger Chitra said...
ReplyDeleteவாழ்வியல் நுட்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும், அருமை. பகிர்வுக்கு நன்றி.
கருத்துரைக்கு நன்றி சித்ரா.
Blogger சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteநல்ல வாழ்வியல் பாடம்.
கருத்துரைக்கு நன்றி நண்பரே.
Blogger ஜீவன்சிவம் said...
ReplyDeleteதமிழின் அழகே அழகு. அதுவும் உங்களால் விளக்கப்படும் பொழுது மேலும் சிறப்பு பெறுகிறது.
தொடரட்டும் உமது பணி.
நன்றி சிவம்.
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDeleteஆகா.. என்ன பயனுள்ள தகவல்.. நன்றிகள் பல.. ஓட்டுகள் போட்டாச்சு..
உங்கள் நற்பணி தொடர்க..
நன்றி..
கருத்துரைக்கு நன்றி நண்பரே.
நல்ல அறிமுகம். நிறைய எழுதுங்கள். நீங்கள் இதையெல்லாம் புத்தகமாகப் போடும்போது சித்தனும் ஒன்று வாங்குவான்.
ReplyDelete//"தன்அறி யலன்கோல்?//
கொல் என்றிருக்கவேண்டுமோ?
//அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,//
புகழும் என்றிருக்கவேண்டுமோ?
iniya tamil paruga ungal valaippoo.
ReplyDeletevazhthukkal nanparey.
ஒள்வையை காக்க வைத்ஹ்ட விடயம் இப்போதுதான் தெரியும் நண்பா...விளக்கங்களுக்கு நன்றி..
ReplyDeleteதமிழின் சிறப்பு நட்பால் மேலும் மேன்மையடைகிறது இங்கு....
ReplyDelete//வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பர்களால் வாழ்வில் சாதிக்கமுடியாது!//
ReplyDeleteசரியா சொன்னீங்க குணசீலன்
Blogger அக்கினிச் சித்தன் said...
ReplyDeleteநல்ல அறிமுகம். நிறைய எழுதுங்கள். நீங்கள் இதையெல்லாம் புத்தகமாகப் போடும்போது சித்தனும் ஒன்று வாங்குவான்.
//"தன்அறி யலன்கோல்?//
கொல் என்றிருக்கவேண்டுமோ?
//அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,//
புகழும் என்றிருக்கவேண்டுமோ?
ஆம் நண்பரே..
மாற்றிவிட்டேன்.
அறிவுறுத்தலுக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Blogger சே.குமார் said...
ReplyDeleteiniya tamil paruga ungal valaippoo.
vazhthukkal nanparey.
நன்றி நண்பரே.
Blogger சே.குமார் said...
ReplyDeleteiniya tamil paruga ungal valaippoo.
vazhthukkal nanparey.
நன்றி நண்பரே.
Blogger புலவன் புலிகேசி said...
ReplyDeleteஒள்வையை காக்க வைத்ஹ்ட விடயம் இப்போதுதான் தெரியும் நண்பா...விளக்கங்களுக்கு நன்றி..
மகிழ்ச்சி நண்பரே.
Blogger தமிழரசி said...
ReplyDeleteதமிழின் சிறப்பு நட்பால் மேலும் மேன்மையடைகிறது இங்கு..
வருகைக்கு நன்றி தமிழ்.
{{{{{{{{{ அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராது நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல்…
ReplyDelete“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“}}}}}}}}}}}
இப்பாடலின் பொருள்.
இன்று அறிந்துகொண்டேன் மிகவும் நன்றி !
அருமையான விளக்கம்.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteதங்களின் இடுகைகளை
மின்னஞ்சலில் பெற்று
படித்து வருகிறேன்.
மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் நாலடியார் ,
இரட்டைபுலவர்கள்
போன்ற சிற்றிலக்கியங்களையும்
எங்களுக்கு அறிமுகம்
செய்தால்,மிக்க
மகிழ்ச்சி அடைவோம்.
அன்புடன்
மதி
@டக்கால்டி
ReplyDeleteநன்றி நண்பா.
@mathileo
ReplyDeleteமகிழ்ச்சி நண்பா.
தொடர்ந்து வெளியிடுகிறேன்..
ஐயா! மிக்க நன்றி.
ReplyDeleteசங்க கால ஔவை வயது முதிர்ந்தவராக காட்டும் படம் இங்கு பொருத்தமா?
ReplyDeleteவிடயம் சிறப்பு நன்றி. ஐயா