வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.


○ நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று


ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,

“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் என்றான்.


○ நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்புதான்.


○ மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை…
அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது..!


○ நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
“மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்.

○ நேற்றைகளின் கடன்களை அடைக்க நாளைகளிடம் நாம் கடன் வாங்குகிறோம்!

24 கருத்துகள்:

  1. //நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
    நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
    “மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்.//

    Nice :-)

    பதிலளிநீக்கு
  2. மிக அழகான கருத்துக்கள்.

    இன்னும் ஒன்று......

    "ஒருவேளை
    சிப்பிக்குக்
    கடல் தரும் விளக்கம்
    முத்தாக இருக்கலாம்!
    ஒருவேளை
    நிலக்கரிக்குக்
    காலம் தரும் விளக்கம்
    வைரம் ஆக இருக்கலாம்."


    உண்மைதானே!
    இன்று துன்பப்படும் ஒருவருக்கு காலம் தன் பதிலை வெற்றியாக தரலாமல்லவா?

    நல்ல கவிதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. @Karthick Chidambaram வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி காரத்திக் சிதம்பரம்.

    பதிலளிநீக்கு
  4. @உமா தங்களின் வருகைக்கும் ஆழ்ந்த பார்வைக்கும் நன்றி உமா.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொன்றும் அருமையான முத்து. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆழமான கருத்துக்கள்.. நன்றி

    பதிலளிநீக்கு
  7. //நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்புதான்//

    எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை. நினைவுகளோடு வாழப் பழகியவர்களுக்கே இது சாத்தியம்.
    கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவு கூர்வதால், இதுவும் அவரோடு மனதளவில் ஒரு சந்திப்புத்தான்.

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. எல்லாமே நல்ல சிந்தனைப் பொன்மொழிகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
    நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
    “மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்//

    சூப்பர் நண்பா

    பதிலளிநீக்கு
  11. நேற்றைகளின் கடன்களை அடைக்க நாளைகளிடம் நாம் கடன் வாங்குகிறோம். அப்ப இன்று?

    பதிலளிநீக்கு
  12. @பாலமுருகன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  13. @ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஒவ்வொரு இன்றைகளும் நேற்றைகளின் கடனோடு தொடங்கி கடனோடே முடிகின்றது அதனால் நிகழ்காலத்தில் வாழ்வது குறைவு தான் நண்பரே.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் உங்கள் தமிழ் அழகு.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் உங்கள் தமிழ் அழகு.

    பதிலளிநீக்கு
  16. பணி சிறக்க வாழ்த்துக்கள் தூரிகை கபிலன்

    பதிலளிநீக்கு