வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 ஜூலை, 2010

தூண்டில்




² தூண்டிலில் தொங்கிக்கொண்டிருக்கிறது

மீனின் சாவும்!

மனிதனின் வாழ்வும்!



² தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த பொன்மொழி.

“நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால்…
அதை இங்கே செய்ய வேண்டாம். இரத்த சேமிப்பு வங்கியில் செய்யுங்கள்”


² உன் குரலில் ஒலி அளவை உயர்த்துவதைவிட
உன் சொல்லின் ஆழத்தைக் கூட்டுவதே சிறந்தது!



² மனிதனால் முடியாதது எதுவுமில்லை.
ஆனால்..
மனிதனால் முடியாதது…….
மனிதனாக இருப்பது தான்!


² குறை இல்லாத மனிதனும் இல்லை
குறை இல்லாதவன் மனிதனும் இல்லை -அதை
குறைக்க முடியாதவன் மனிதனும் இல்லை!



² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை
நீயும் சிரிக்க வை!

உன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை!



² உலகம் உன்னை அறிமுகம் செய்யும் முன்னர்
உலகத்துக்கு உன்னை நீயே அறிமுகம் செய்து கொள்!
-சச்சின்.


² உன் மீது பாசம் வைக்கும்
இதயத்தை நேசி!

உன்னைக் கோபப்படுத்தும் இதயத்தை
அதிகமாக நேசி!

-அன்னை தெரசா.
(நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக...)

24 கருத்துகள்:

  1. //² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை
    நீயும் சிரிக்க வை!

    உன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை!//

    மிகவும் பிடித்த நல்ல சிந்தனை
    அனைத்துமே நல்ல சிந்தனைகள் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய 250 வது இடுகைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. //.. நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக. ..//

    நன்றி முனைவரே..
    சில படித்தவை, சில புதியவை (எனக்குங்க..)

    பதிலளிநீக்கு
  4. @சந்ரு தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சந்ரு.

    நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பக்கமா வந்திருக்கீங்க மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  5. அருமைங்க மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் அருமையாக இருக்குங்க

    பதிலளிநீக்கு
  7. //தூண்டிலில் தொங்கிக்கொண்டிருக்கிறது
    மீனின் சாவும்!
    மனிதனின் வாழ்வும்!//


    'தூண்டில்' Arumai MUNAIVAREY.

    பதிலளிநீக்கு
  8. //முனைவர்.இரா.குணசீலன் said...

    @சந்ரு தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சந்ரு.

    நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பக்கமா வந்திருக்கீங்க மகிழ்ச்சி!!//

    உங்கள் இடுகைகள் அனைத்தையும் வாசித்து வருகின்றேன். ஆனால் சில காரணங்களினால் எவருக்கும் இப்போது நான் பின்நூட்டமிடுவதில்லை இடுகைகள் அனைத்தையும் வாசிப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  9. முதல் இரண்டு பொன்மொழிகளும் நிறையப் பிடிச்சிருக்கு குணா.

    பதிலளிநீக்கு
  10. @VELU.G முதல் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றி வேலு.

    பதிலளிநீக்கு
  11. @சந்ரு ஓ அப்படியா தாங்கள் தொர்ந்து படிக்கிறீர்கள் என்பதை எண்ணி மகிழ்வாகவுள்ளது நண்பரே..

    பதிலளிநீக்கு
  12. நெடுஞ்சாலை வாக்கியம் சூப்பர் நண்பா

    பதிலளிநீக்கு
  13. சிந்திக்க வைக்கும் வரிகள்.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. மிக அருமை பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. @Thomas Ruban வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. அனைத்ஹ்டும் அருமை... அந்த "சிரிப்பு" பொன்மொழி, மனதை கவர்ந்தது.... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அனைதது தகவல்களும் அருமையாக இருக்கு சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு