வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

எதிர்பாராத பதில்கள்.




○ பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியிடம்….

இந்தியக் காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருவது எனக்குப் பெரும் வருத்தமாகவுள்ளது என்றார்.

அதற்கு, காந்தி….

“உண்மைதான். உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. விலங்குகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போதுதான் எனக்கு இன்னும் வருத்தமாகவுள்ளது“ என்றார்.




○ அலெக்சாண்டரின் குரு அரிஸ்டாட்டில். அலெக்சாண்டர் வெற்றிமேல் வெற்றியாகக் குவித்துக்கொண்டிருந்ததை அவ்வப்போது தன் குருவுக்குத் தெரிவித்துவந்தார்.

அலெக்சாண்டரிடம் அரிஸ்டாட்டில் சொன்னார்..

அலெக்சாண்டர் நாடுபிடிப்பது உனது இலக்கு!
அந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பிடிப்பது எனது இலக்கு!

எனவே நீ பிடிக்கும் நாடுகளின் அறிஞர்கள் எழுதிய ஏடுகளை நான் படிக்க ஏற்பாடு செய்..

என்றார்.



○ சர்ச்சிலின் 80 வது வயது நிறைவுக்காக நடந்த விருந்தில் நிழற்படம் எடுக்கவந்த இளைஞன் சர்ச்சிலிடம்,

ஐயா உங்களது 100 வது ஆண்டு நிறைவுவிழாவிற்கும் நான் தான் நிழற்படம் எடுக்கவேண்டும் என விரும்புகிறேன்.. என்றான்.

உடனே சர்ச்சில்…………

“நண்பா கவலையை விடு…
உன்னைப் பார்த்தால் நல்ல உடல்நலம் உள்ளவனாகத் தான் தெரிகிறாய். அந்த வாய்ப்பு உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று சொன்னார்.




○ எம்பிடேகல் என்பவர் ஒரு தத்துவஞானி. அவரைச் சந்தித்த இளைஞன்……...

நான் பெரிய அறிவாளிகளுடன் பேசிப் பழகிப் பழகி பெரிய அறிவாளியாகிவிட்டேன் என்று சொன்னான்.

அதற்கு அந்த ஞானி………..


“நானும் தான் பெரிய பெரிய பணக்காரர்களுடன் பேசிப் பழகிவருகிறேன் ஆனால் என்னால் பணக்காரனாகமுடியவில்லையே“ என்று சொன்னார்.




○ பிரபல குத்துச்சண்டை வீரர் ஜோலூயியிடம் ஒருவர்…

நீங்கள் இதுவரை சந்தித்த சண்டைகளிலேயே உங்களை அதிகமாக சிரமப்படுத்தியவர் யார்? என்று கேட்டார்..

அதற்கு அந்த குத்துச்சண்டை வீரர்……..

“வருமான வரி அதிகாரி“ என்று அமைதியாகச் சொன்னார்.

10 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பதிலும்,அவரவர்களின் தன்மைக்கும்,சிந்தனைக்கும் ஏற்ப தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

    நல்ல பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  2. காந்தி கூறிய பதில் சூப்பர் நண்பா, அருமையான தொகுப்பு மிகவும் ரசித்தேன் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான தொகுப்பு மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வாசிக்க சுவாரஸ்யமாய் இருக்கு.
    அறிவாளிகளின் பதில்கள் நகைச்சுவையாக இருந்தாலும் பொருள் பொதிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய காலகட்டத்தில் நாடு காடாக மாறிவிடடது. அனைத்து விலங்குகளும் நாட்டுக்கு வந்துவிட்டது. நல்ல தகவல்.
    வாழ் கவளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விஷயங்கள், பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான். உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. விலங்குகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போதுதான் எனக்கு இன்னும் வருத்தமாகவுள்ளது//
    காந்தி சரியாதா சொல்லி இருக்கார் குணா

    பதிலளிநீக்கு