வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 21 மே, 2011

மனிதன் மாறிவிட்டான்.

பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் இயற்றிய மனிதன் மாறிவிட்டான்.. என்ற பாடல் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் விருப்பமான பாடலாகும்.

ஒவ்வொரு முறையும் மனிதனின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் போதும்.. எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இது.

போலச் செய்தல் தான் மனிதனை இந்த அளவுக்கு வளரச் செய்திருக்கிறது.
இதனை கவிஞர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்..

பறவை - விமானம்
எதிரொலி - வானொலி
மீன் - படகு..

மனிதன் - கணினி!!!!!!!



இப்படி எல்லாமே மனிதனின் ஒப்புநோக்குச் சிந்தனைகள் தான்.



'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்


மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்..
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை


மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

9 கருத்துகள்:

  1. பதிவு உங்கள் பாணியில் நச்.

    பதிலளிநீக்கு
  2. அசத்தல் பதிவு நண்பா..
    இனி தொடர்ந்து வருகிறேன் ..

    பதிலளிநீக்கு
  3. மனிதன் மாறி மனிதம் தொலைந்துகொண்டிருக்கும் காலம் இது.நாகரீகத்தின் பெயரால் அழிவுகள் !

    பதிலளிநீக்கு
  4. @ஹேமா உண்மைதான் ஹேமா..
    விஞ்ஞானம் வளர வளர மனிதாபிமானம் மண்ணுக்குள் தான் சென்று கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அர்த்தமுள்ள அழகான பாடல் வரிகள். அருமையான இசை அமைப்பு.
    எனக்கும் மிகவும் பிடித்த காதில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் இது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
    நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
    ஜாதியும் பேதமும் கூறுவான் அது
    வேதன் விதியென்றோதுவான்

    என‌க்கும் ரொம்ப‌ பிடித்த‌மான‌ பாட‌ல் இது. ம‌னித‌ன் மாறிவிட்டான்; ம‌றுப‌டி ம‌ர‌த்தில் ஏறி விட்டான்:(

    பதிலளிநீக்கு
  7. பாடல் வரிகளுக்கான படங்களை தொகுத்தவிதம் அருமையாக உள்ளது நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு