வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 2 ஜூன், 2011

துகில் விரித்தன்ன வெயில்.

சங்கஇலக்கியப் பாடல்களை முழுமையாகப் படிக்க முயன்று பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன். ஆம் அப்பாடல்களில் உள்ள அழகியல் கூறுகள் ஒவ்வொன்றும் என்னை அடுத்த அடிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்திருக்கின்றன.

ராமனின் அழகை,

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
என்பார் கம்பர்.

அப்படி சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றையும் காணும்போது அகவாழ்வியலையும், புறவாழ்வியலையும் கண்டு மெய்சிலிர்த்து நின்றிருக்கிறேன். அப்படி நான் வியந்த உவமைகளைக் காட்சிப்படுத்தலாம் என நினைக்கிறேன். முன்பே சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் என்ற தலைப்பில் 27 புலவர்களைக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன். இனி “சங்க இலக்கியத்தில் உவமைகள்“ என்ற உட்தலைப்பில் தொடர்ச்சியாக சங்கப்புலவர்களின் உவமைநயத்தை காட்சிப்படுத்தவுள்ளேன்.

இதோ முதலாவதாக..

“துகில் விரித்தன்ன வெயில்“


வெண்மையான ஆடையை விரித்தது போன்ற வெயில் என்பது இதன் பொருள்.


(வெயிலைப் பார்த்து இப்படி நமக்கு என்றாவது தோன்றியிருக்கிறதா??)

4 கருத்துகள்:

  1. //“துகில் விரித்தன்ன வெயில்“

    வெண்மையான ஆடையை விரித்தது போன்ற வெயில் என்பது இதன் பொருள்.//

    ஆஹா, அருமையான கற்பனை தான்!

    //(வெயிலைப் பார்த்து இப்படி நமக்கு என்றாவது தோன்றியிருக்கிறதா??)//

    வெய்யிலைப்பார்த்தால் குடை, கூலிங் க்ளாஸ், சர்பத், ஜூஸ், இளநீர், நொங்கு, மிராண்டா, வெள்ளரிப்பிஞ்சு, 7 UP,AC Room, Fan, Ice Water இவைதான் ஞாபகம் வருகிறது. அடிக்கும் வெய்யிலில் கற்பனைகள் காய்ந்து, மண்டை வரண்டுவிடுகிறதே!

    ந்ல்ல பதிவு, பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. உண்மையின் வெயிலை வெண்துகிலெனச் சொன்னது புதுமையாகவே இருக்கிறது.
    நினைத்துப்பார்த்தால் சொல்லலாம் என்பது போலவும் !

    பதிலளிநீக்கு
  3. @வை.கோபாலகிருஷ்ணன் தாங்கள் சொல்வது உண்மைதான் ஐயா கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு