வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

வாழ்க்கைப் புதிர்!!


கடவுள் உண்டா இல்லையா?
பேய் உண்டா இல்லையா?
மறுபிறவி உண்டா இல்லையா?
விதி என்பது எது?
தலையெழுத்து நம் தலையில் எங்கு உள்ளது?
நிம்மதி எங்கு உள்ளது?
மகிழ்ச்சியின் திறவுகோல் எது?
வாழ்க்கை எங்கு தொடங்குகிறது?
வாழ்க்கை எங்கு முடிகிறது?
நிலையான பொருள் எது?
அறிவு என்பது யாது?
பொருள் மட்டும் தான் வாழ்க்கையா?
நம்மால் நிகழ்காலத்தில் மட்டும் ஏன் வாழ்முடியவில்லை?
மழலையின் மொழி எது?
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?
இரத்தத்தில் கலந்த சாதியை எப்படிப் பிரித்தெடுப்பது?
இப்படிப் பல புதிர்களுக்கான பதிலை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு மாணவனிடம் கேட்டேன்..
உனக்குப் புதிரான ஒன்று சொல் என்று..
அவன் சொன்னான்..

ஐயா தேர்வில் கேட்கப்படும் “வினாத்தாள்“ தான் புதிரானது! என்றான்.

நான் சொன்னேன் நீ படிக்காமல் இருக்கும வரை அப்படித்தான் இருக்கும் என்று..

எனக்கும் நீண்ண்ண்ண்ட காலமாகவே ஒரு புதிருக்கான பதில் தெரியவில்லை..
தமிங்கிலம் பேசும் இன்றைய மக்களுக்கு தாய்மொழி எது?
என்பது தான் எனக்குப் புரியவில்லை???


எல்லாம் புரிந்துவிட்டால் நாம் ஒவ்வொருவருமே கடவுளராகிப்போவோமே..
அடுத்தநொடி என்ன நடக்கும் என்பதை அறியாத ஒவ்வொரு மணித்துளிகளுமே எதிர்பார்ப்பு நிறைந்தது தான்! இந்த எதிர்பார்ப்பிலும், கிடைக்கும் அனுபவத்திலும் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பது என் அனுபவம்.

ஒரு இணையதளம் நாம் எப்போது இறந்துபோவோம் என்று கூறுகிறது.

ஆம் கிளியும், எலியும் சோதிடம் சொன்ன காலம் போய் இன்று கணினிகள் வந்துவிட்டன சோதிடம் சொல்ல..

இப்படி வாழ்கையில் புரியாத புதிர்கள் எண்ணற்றவை உள்ளன.
இதனைப் புரிந்துகொள்ளவே ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர்கள், நம்மை மூளைச் சலவை செய்து தன் பொருட் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்கள்.
நினைவுக்கு வந்த நறுக்கு..

“உன் கையில் ஓடுகிறது
சோதிடனின் தனரேகை!“


சரி சங்ககாலத் தலைவி ஒருத்தி கூறும் வாழ்க்கைப் புதிரைப் பார்ப்போம்..

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே

நற்றிணை 314 பாலை - முப்பேர் நாகனார்
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

கள்ளிச் செடியின் மொழி.
கையில் நொடிப்பது போன் ஒலியுடன் காய்களைத் தெறிக்கிறது கள்ளிச் செடி!

புறாக்களின் காதல்.
அக்கள்ளிச் செடியில் கிளைகளில் தனியே அமர்ந்த புறாக்கள் தம் துணையை அன்போடு அழைக்கும்.

பாலையின் வெம்மை.
இத்தகைய கொடிய வெம்மை நிறைந்தது பாலை நிலம்.

தலைவனுக்குப் புரியாத புதிர்.

இக்கொடிய பாலை வழியே சென்ற தலைவனுக்கு,

“ஒருகாலத்தில் முதுமையடைந்தோர்
மறுபடியும் அழிந்த இளமையை எய்துவது இல்லை!“
அதே போல்,
“வாழ்நாளின் அளவு இவ்வளவு
என்பதை அறிந்தவரும் இல்லை!“
என்னும் வாழ்க்கைப் புதிருக்கான பதில் தெரியவில்லை!

தலைவனின் தவறான பதில்.
வாழ்க்கைப் புதிருக்கான பதில் தெரியாததால் தலைவன் “உன்னைப் பிரியேன்“ என்று தலைவியிடம் சொல்லி அதை நிறைவேற்ற முடியாது பிரிந்தவனாகவும், அதனால் பொய் சொல்லியவனாகவும் போய்விட்டான்!

தலைவியின் வாழ்த்து.

இத்தகு பொய்சொல்லியவனாக இருந்தாலும் அவன் ஏதும் தீங்கு நேராது வாழவேண்டும் என வாழ்த்துகிறாள் தலைவி.

பாடல் வழியே.
1. கைநொடிப்பது போன்று கள்ளிக் காய் வெடிக்கும் என்ற உவமை, புலவரின் உற்றுநோக்கலுக்குத் கத்க சான்றாகவுள்ளது.
2. பாலையின் வெம்மையிலும் புறாக்களின் காதல், தலைவனுக்கு தலைவியின் நினைவை வரவழைப்பதாகத் திகழ்கிறது.
3. தொலைந்த இளமை மீண்டும் வராது, நாம் வாழும் நாள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது என்ற வாழ்க்கையின் புதிரை யாவரும் உணர அழகாக உரைக்கிறார் புலவர் முப்பேர் நாகனார்.

39 கருத்துகள்:

  1. நம் வாழ்க்கை தான் எத்தனை புதிரானது... நாளையை விடுங்கள், அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கூட தெரியாத ஒரு புதிர் தானே நம் வாழ்க்கை.

    சங்ககாலப் பாடலுடன் இதை எளிய விதத்தில் எழுதியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தநொடி என்ன நடக்கும் என்பது தெரியாததால் தான் நாம் மனிதர்களாக இருக்கிறோம்......தெரிந்து இருந்தால் கடவுளாகி இருப்போம்.

      நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் முனைவரே,
    அடுத்த நிமிடம் நடப்பது என்னவென்று தெரிந்துவிட்டால்
    வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யம் இருக்காது.
    எதிர்பார்ப்பில் வாழ்வதே நன்று....
    விளக்கம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. இறப்பை சொல்லும் இணையம் சூப்பர். அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி

    பதிலளிநீக்கு
  4. //தொலைந்த இளமை மீண்டும் வராது, நாம் வாழும் நாள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது //

    அருமையான பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  5. முதலில் விடையற்ற கேள்விகளாக எழுப்பி
    பின் மாணவனிடம் அதற்கான விடைதேடி
    அவனவன் அளவில்தான் விடையும் என விளக்கி
    முடிவில் விடையற்ற புதிரே வாழ்க்கை என
    மிக அழகான பாடல் ஒன்றை விளக்கிப் போகும்
    இந்தப் பதிவு அருமையிலும் அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர்ந்து தர வேண்டுகிறோம்

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கை புதிரை
    வகுத்தது நன்று
    யாக்கை அழியும்
    நாளது என்று
    கேட்டதை எடுத்து
    கேள்வியும் தொடுத்து
    காட்டினீர் இங்கே
    கவின்பெற நன்கே

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர்கள், நம்மை மூளைச் சலவை செய்து தன் பொருட் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்கள்.


    ..... மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  8. எதிர்பார்ப்பிலும், கிடைக்கும் அனுபவத்திலும் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது

    பதிலளிநீக்கு
  9. வாழ்க்கையே ஒரு புதிர்தான்!
    அருமை!

    பதிலளிநீக்கு
  10. சரியாகச் சொன்னீர்கள் முனைவரே...
    அடுத்த நடப்பது என்னவென்று தெரிந்துவிட்டால்...?
    கடந்த வாரம் இதை வைத்து கவிதை எழுதினேன்...இன்னும் பதியவில்லை..இன்று உங்கள் கட்டுரையாய்...

    பதிலளிநீக்கு
  11. மனதைக்கவர்ந்த பதிவு.நன்று

    பதிலளிநீக்கு
  12. உண்மை தான் மாணவர்களுக்கு வினா தாள் தானே கவலை தரும் விஷயம்

    பதிலளிநீக்கு
  13. இப்படி வாழ்கையில் புரியாத புதிர்கள் எண்ணற்றவை உள்ளன.
    இதனைப் புரிந்துகொள்ளவே ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
    நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர்கள், நம்மை மூளைச் சலவை செய்து தன் பொருட் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்கள்.
    நினைவுக்கு வந்த நறுக்கு..

    அருமையான கருத்து பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  14. இப்படி வாழ்கையில் புரியாத புதிர்கள் எண்ணற்றவை உள்ளன.
    இதனைப் புரிந்துகொள்ளவே ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
    நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர்கள், நம்மை மூளைச் சலவை செய்து தன் பொருட் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்கள்.
    நினைவுக்கு வந்த நறுக்கு..

    அருமையான கருத்து பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  15. மாப்ள அருமையான பதிவு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  17. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  18. தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி காந்தி.

    பதிலளிநீக்கு
  19. தங்கள் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் தெளிவான புரிதலும் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.

    நன்றி ரமணி ஐயா.

    பதிலளிநீக்கு
  20. தங்கள் கவிதை வாழ்த்துக்கு நனி நன்றி புலவரே.

    பதிலளிநீக்கு
  21. மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  22. கருத்துரைக்கு நன்றிகள் சென்னைப் பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  23. ஓ அப்படியா..
    மகிழ்ச்சி

    கருத்துரைக்கு நன்றி ரெவரி.

    பதிலளிநீக்கு
  24. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்.

    பதிலளிநீக்கு
  25. //அடுத்தநொடி என்ன நடக்கும் என்பதை அறியாத ஒவ்வொரு மணித்துளிகளுமே எதிர்பார்ப்பு நிறைந்தது தான்! இந்த எதிர்பார்ப்பிலும், கிடைக்கும் அனுபவத்திலும் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பது என் அனுபவம்.//

    நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர்கள், நம்மை மூளைச் சலவை செய்து தன் பொருட் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்கள்.
    நினைவுக்கு வந்த நறுக்கு..

    “உன் கையில் ஓடுகிறது
    சோதிடனின் தனரேகை!“ //

    மிகவும் அருமையான வரிகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு