வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இரவலர் வாரா வைகல்!



இல்வாழ்வுக்குப் பொருள் அடிப்படையானது.
பொருள் நாம் இருக்கும் இடம் தேடி வாராது.
பொருள் இருக்கும் இடம் நாடி நாம் தான் செல்லவேண்டும்.
பொருளுக்காக இன்றும் பல ஆடவர்கள் தம் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளுக்குச் செல்வது இயல்பாகத்தான் உள்ளது.

அவ்வாறு செல்வோர் தம் குடும்பத்தைப் பிரிந்து செல்லவும், செல்லாமல் இருக்கவும் என்ன காரணம் சொல்கிறார்கள்..?

பிரிந்து செல்வோர்..
  • பொருளின்றி வாழமுடியாது. ஆடம்பரமாக வாழவோ, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்துவாழவோ பொருள் தேவை.
  • வேறு நாடுகளுக்குச் சென்றால் நம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்...

பிரிந்து செல்லாமல் இருப்போர்..

  • என்னதான் பணம் சம்பாதிச்சாலும் நினைத்தவுடன் குடும்பத்தைப் பார்க்கமுடியாதே!
  • பொருள் தேட வெளிநாடு சென்று வந்தால் இளமை தொலைந்துவிடுமே அதை எங்கு தேடுவது?..

இதோ ஒரு அகப்பாடல்...

தலைவன் பொருள் தேடத் தன்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று அஞ்சுகிறாள் தலைவி. அதனை உணர்ந்து அவளை ஆற்றுப்படுத்துகிறான் தலைவன்.

பாடல் இதோ..

“மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே“

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் பிரிவச்சம் உரைத்தது

குறுந்தொகை -137
பாலை பாடிய பெருங்கடுங்கோ

(தலைவன் தலைவியைப் பிரிய அஞ்சுதலும்
தலைவி தலைவன் பிரிவுக்கு அஞ்சுதலும் “பிரிவச்சம்“ எனப்படும்.)

தலைவியிடம் சொல்கிறான் தலைவன்..

மென்மையான இயல்புடைய அரிவையே..
உன் நல்ல உள்ளம் தனித்து வருந்த உன்னை நீங்கிச் செல்வேனா?
அவ்வாறு சென்றால் உயிர்வாழ்வேனா?
அப்படி உயிர் வாழ்ந்தால்....

“நீண்ட நாட்களுக்கு என்னைத் தேடி இரவலர் வாராமல் போகட்டும்.
நான் இரவலர்க்குத் தானம் செய்ய முடியாது தவிர்த்து வருந்தும் நிலையை அடைவேனாகுக!“ என்று சூளுரைக்கிறான்.

தமிழ்ச் சொல் அறிவோம்.
  1. அரிவை பெண்களின் பருவங்களில் ஒன்று
  2. அகம் உள்ளம்
  3. வைகல் நாள்
  4. தகவு  - தகுதி
  5. செலவு செல்லுதல்
  6. புலம்ப தனித்து வருந்த
  7. துறந்து நீங்கி

பாடல் வழியே.

  1. பிரிவச்சம் என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
  2. இரவலர்க்கு ஈதல் இல்லறக் கடமைகளுள் ஒன்றாகவும், அவ்வாறு இரவலர் வாராமல் இருத்தலும், அவர்க்கு கொடுக்காத நிலையும் இழுக்காகவும் இவ்வகப்பாடல் அறிவுறுத்திச் செல்கிறது.
  3. இன்றைய வாழ்க்கையோடு இந்த சங்கப்பாடலை ஒப்பிட்டு நோக்கும்போது...
  இன்றைய வாழ்க்கையானது பெரும்பங்கு சுயநலம் நிறைந்ததாக மாறிப்போனதையும்...
   சங்ககால வாழ்க்கை சுயநலத்திலும் பெரும்பங்கு பொதுநலம் கலந்திருந்தமையையும் உணரமுடிகிறது.

28 கருத்துகள்:

  1. இன்றைய வாழ்க்கையானது பெரும்பங்கு சுயநலம் நிறைந்ததாக மாறிப்போனதையும்...
    சங்ககால வாழ்க்கை சுயநலத்திலும் பெரும்பங்கு பொதுநலம் கலந்திருந்தமையையும் உணரமுடிகிறது./

    அற்புதமான பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் அதிக சம்பளம் கிடைக்கிறது என்று போவது போல் தெரியவில்லை... இங்கு நன்றாக சம்பாதித்து கொண்டு இருந்த பெயிண்ட் அடிப்பவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று; விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டார்... இங்கே வேலை செய்தால் கிடைப்பதை விட அங்கு ஒன்றும் அதிகம் கிடைக்கவில்லை... [வரவு செலவு கணக்கை கூட்டி பார்த்தால்...] முக்கியமாக அக்கம் பக்கம் உள்ள மக்களிடம் பாரின் போறேன் என்று பீலா விடுவதற்கா என்றும் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  3. ///என்னதான் பணம் சம்பாதிச்சாலும் நினைத்தவுடன் குடும்பத்தைப் பார்க்கமுடியாதே!///


    பாடல் சூப்பர் நண்பா

    உண்மைதான் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. சங்ககால வாழ்வில் சுயநலத்திலும் பொதுநலம் பரும்பாலும் இருந்தது உண்மைதான்!
    இன்றைக்கு ஆங்கில மொழியாக்கம் செய்யவில்லையா?

    பதிலளிநீக்கு
  5. இன்றைய வாழ்க்கையில் சுயநலம் மட்டுமே இல்லை முனைவரே, தாய் தந்தை மனைவி மக்கள அனைவரும் சந்தோசமாக இருக்கனுமென்பதற்க்காக தான் நாங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டியுள்ளது.

    ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் விளக்கம் தெரிந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. சங்கக்காலத்திலும் பொருள் ஈட்ட ஆண்கள் வெளியே பயணித்ததுண்டு.. ஆனால் மனதில் என்றும் இல்லாளை எப்போது பார்ப்போம் நம் மகவை எப்போது கொஞ்சுவோம் என்று இருப்பார்.

    இன்று நிலை கொஞ்சம் வேறுப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்வோர் சொல்லும் காரணம் எத்தனையோ உள்ளது.....

    குடும்பத்தை காக்க ஏழ்மையை விரட்ட பிள்ளைகளின் நல்ல படிப்புக்காக மனைவியின் பொருளாசை பேராசை அதிக பணம் அதிக நகை படோபமாக வாழ தாய் தந்தையரை நல்லபடி வைத்துக்கொள்ள நம் நாட்டில் நம் படிப்புக்கு கிடைக்காத அந்தஸ்தும் பணமும் வெளிநாட்டில் அதிகமாக கிடைப்பது இப்படி எத்தனையோ காரணங்கள்.....


    ஆனால் இத்தனை காரணங்களுக்காக இழப்பது என்னவென்று அறியவில்லையா இல்லை அறிந்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையா அல்லது தன்னை பலி கொடுத்து தன் குடும்பத்தை காக்கவைக்கும் முயற்சியா?

    பிரிவின் கொடுமை மனைவியின் ஏக்கம் பிள்ளைகளின் ஆதங்கம் தாய் தந்தையரின் கடைசி மூச்சு நிற்குமுன் மகனின் தாய்மடி தேடும் அவசியம் இது எல்லாமும் இழக்கும் நிலை....

    அக்காலத்தில் கணவன் மனமுருகி சொன்ன வரிகளாக இங்கே படைத்த விதம் மிக மிக அருமை குணசீலா...

    ““நீண்ட நாட்களுக்கு என்னைத் தேடி இரவலர் வாராமல் போகட்டும்.
    நான் இரவலர்க்குத் தானம் செய்ய முடியாது தவிர்த்து வருந்தும் நிலையை அடைவேனாகுக!“ என்று சூளுரைக்கிறான்.”

    உண்மையே....

    அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும் குணசீலா...

    பதிலளிநீக்கு
  7. அன்பு முனைவரே
    தங்களை தங்களின் இந்தப் பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு
    மனம் மகிழ்கிறேன்.
    இணைப்பு

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_25.html

    அன்பன்
    மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  8. என்னதான் பணம் சம்பாதிச்சாலும் நினைத்தவுடன் குடும்பத்தைப் பார்க்கமுடியாதே!

    பாடல் அருமை.. நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. அருமை முனவரே

    இக்காலத்தில் பொதுநலமும் சுயநலம் கருதியே நடக்கிறது அக்காலத்தில் சுயநலத்திலும் பொதுநலம் இருந்தது, நம் முன்னாள் முதல் மந்திரி கலைஞர் ஒரு முறை பேசியதை கேட்க நேர்ந்தது அதில் ஏனைய விஷயங்கள் இருந்தாலும் பொது நலத்தில் சுயநலம் என்பதற்க்கு ஒரு உவமை தந்தார் “தடாகத்தில் பாசியை உண்ணும் மீண் போல்” என்று மிகவும் ரசித்தேன் அந்த உவமையை

    தங்களின் விளக்கமும் தமிழின் வார்த்தைகளை வெளியிட்டு கொஞ்சம் சொல்லி கொடுத்தும் அருமை முனைவரே மிக்க நன்றி

    ஜேகே

    பதிலளிநீக்கு
  10. பொது நலம் இன்றி பணம் தேடும் பழக்கம். வழக்கமாகிப் போனதை அருமையா சொல்லியிருக்கிங்க. . .

    பதிலளிநீக்கு
  11. பாடல் அருமை.. நல்ல விளக்கம்...
    வாழ்த்துக்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  12. நான் எழுதிய இரண்டும் (இதற்கும் முன்னதற்கும்)
    என்ன ஆயிற்று முனைவரே! அனுமதி்குப்பின்
    வெளிவரும் என்றும் வந்தே...

    பதிலளிநீக்கு
  13. அர்த்தம் பொதிந்த பாடல். பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  14. மகிழ்ச்சி இராஜேஷ்வரி
    இருக்கலாம் சூர்ய ஜீவா
    மகிழ்சி சதீஷ்

    நன்றி இராஜா பெருமகிழ்ச்சி அடைந்தேன்
    உண்மைதான் கோகுல்
    நன்றி காந்தி

    பதிலளிநீக்கு
  15. தங்கள் ஆழ்ந்த புரிதலுக்கும்
    நீண்ட கருத்துரைக்கும்

    நன்றிகள் மஞ்சு.

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சி மகேந்திரன்
    நன்றி சசி
    நன்றி ஸ்டாலின்
    நன்றி இராஜா
    நன்றி இராஜா
    நன்றி விக்கி
    நன்றி ஜே.கே

    பதிலளிநீக்கு
  17. நன்றி பிரணவன்
    நன்றி குமார்

    புலவரே தங்கள் கருத்துரைகள் யாவையும் வெளியிட்டுவிட்டேனே...தங்கள் கருத்துரைகளை நான் என்றுமே மட்டுறுத்துவதில்லை.. வருகைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  18. உங்கள் பதிவுகளை தமிழாசிரியர் ஒருவரிடன் காட்டினேன், மிகவும் பெருமிதம் கொண்டார். உங்கள் பதிவுகளை அவரையும் எழுத தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன். பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  19. கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பாரதி..

    தமிழ்த்துறை சார்ந்தோர் இன்னும் இணையப் பரப்புக்கு வரவேண்டும் என்பதே என் ஆவல்..

    பதிலளிநீக்கு