வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 1 அக்டோபர், 2011

சிரிப்பும் சிந்தனையும்.



நண்பர்களே...
எனக்கு வந்த குறுந்தகவல்களில் நான் விரும்பிப்படித்த, சிரித்த, சிந்தித்த தகவல்கள் சில உங்களுக்காக..

காதல்
ஒரு எறும்பு ஒரு யானையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாம்...
ஒரே நாளில் யானை இறந்துவிட்டதாம்..
எறும்பு அழுது புலம்பியதாம்..
“ஒரு நாள் காதலித்துக்காக என் ஆயுள் முழுவதும் குழி தோண்டவைத்துவிட்டாயே!“ என்று.

வாய்ப்பு
திருமண விழாக்களில் மணமகனை காரிலோ, குதிரையிலோ வைத்து அழைத்துச் செல்கிறார்களே அது ஏன் தெரியுமா..?
மண மகன் தப்பித்துச் செல்லத் தரும் இறுதி வாய்ப்பாம் அது!

கனவு
கனவு பெரியாதாக இருக்கும்போது
உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்கவேண்டும்!  
-          -கலாம்.

சோம்பல்
உன் சோம்பலை நீ தூக்கி எறிந்தால்
உன் சாம்பல் கூட சாதனை பேசும்!
-          -கலாம்.

நடத்தை
உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்
உங்கள் நடத்தைதான் அந்த இடத்தை நீங்கள்
தக்கவைத்துக்கொள்ளத் துணைநிற்கும்!

சிரிப்பு
உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை
நீயும் சிரிக்க வை!
உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை!

பிறப்பும் இறப்பும்
நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா?
இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்!
நீ சாதனைபுரிய வேண்டுமா?
இன்றோடு நீ இறந்துபோவாய் என எண்ணிக்கொள்!

காரணங்கள்
நம் வாழ்வில் நாம் அழுவதற்காக 100 காரணங்கள் உள்ளன!
நாம் சிரிக்க 1000 காரணங்கள் உள்ளன!

வாழ்க்கை
வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது!
நாம் இறந்தபின் நம்மைய யாரும் மறக்க்க்கூடாது!

கடிகாரம்
இலக்கில்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது!
ஓடாத கடிகாரம் கூட ஒருநாளில் இரண்டுமுறை சரியாக நேரம் காட்டும்!

38 கருத்துகள்:

  1. சிரிக்கவும் முடிந்தது; சிந்திக்கவும் தூண்டியது!

    பதிலளிநீக்கு
  2. அருமை முனைவரே !!! அதிலும் கடிகாரம் கலக்கல் !!!!

    பதிலளிநீக்கு
  3. அருமை முனைவரே !!! அதிலும் கடிகாரம் கலக்கல் !!!!

    பதிலளிநீக்கு
  4. அருமை முனைவரே !!! அதிலும் கடிகாரம் கலக்கல் !!!!

    பதிலளிநீக்கு
  5. ரசிக்க வைத்த சிந்திக்கவைத்த பகிர்வு குணசீலா...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

    பதிலளிநீக்கு
  6. ""இலக்கில்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது!
    ஓடாத கடிகாரம் கூட ஒருநாளில் இரண்டுமுறை சரியாக நேரம் காட்டும்!.....""

    வாழ்க்கை பயணத்திற்கு நிச்சயம் இலக்கு வேண்டும்... அழகா சொல்லபட்டிருக்கு
    - மௌனமலர் ( சின்னதூறல்)

    பதிலளிநீக்கு
  7. கலர் கலரான கருத்துக்கள்

    பின்னுறீங்க ............

    பதிலளிநீக்கு
  8. //வாய்ப்பு

    திருமண விழாக்களில் மணமகனை காரிலோ, குதிரையிலோ வைத்து அழைத்துச் செல்கிறார்களே அது ஏன் தெரியுமா..?
    மண மகன் தப்பித்துச் செல்லத் தரும் இறுதி வாய்ப்பாம் அது//

    இத்தன நாட்களாய் இது எனக்குத் தெரியாதே. இனிமேல் பெண்வீட்டுக்காரர்கள் யாரும் மணமகன் அழைப்பே வைக்கக்கூடாதுன்னு ஜெ மேடம்கிட்ட சொல்லி தமிழ்நாட்டில் தடை போடச் சொல்லிடுவோம்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல குறுஞ்செய்திகள் முனைவரே.... அதிலும் கடிகாரம், யானை-எறும்பு கல்யாணம் இரண்டையுமே அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. நன்றாக சிரிக்கவும் முடிந்தது
    தீவீரமாக சிந்திக்கவும் வைத்தது
    அருமையான பதிவு
    தொடர்ந்து தர வேண்டுகிறேன்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  11. beautiful , and publisher by k7 airticles very fast one r two days i am wait 4 k7 fan.........,

    பதிலளிநீக்கு
  12. ரசிக்கவைத்த பதிவு தல...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. மாப்பிள்ளை ஊர்வலக் காரணம் படித்து வாய்விட்டுச் சிரித்தேன். சிரிப்போடு சிந்திக்கவும் வைத்ததற்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  14. முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வணக்கம்!!உங்களைப் போன்றவர்கள் என் பதிவினைப் படித்து கருத்துரை வழங்கும்போது உண்மையிலேயே சந்தோசமாக உள்ளது. நான் வலைப்பதிவிற்கு புதிது. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.நன்றி நண்பரே!!

    பதிலளிநீக்கு
  15. அனைத்து சிந்தனைகளும் முத்து முத்தாக மனதை சிந்திக்க வைக்கும் அற்புத வரிகள்...
    பிடித்த வரிகள் எதுவென தேர்ந்தெடுக்க முடியவில்லை...
    இறுதியாய் இருக்கும் கடிகாரத்தின் வரிகள் அழகோ அழகு..
    உண்மையாகவே நான் அதை இப்போ யோசித்துப்பார்த்தேன்..
    எல்லாமே அர்த்தங்கள் நிறைந்ததாய் இருக்கிறது..
    குட்டிக்கதையும் சுப்பர்...

    உங்களின் பகிர்வுக்கு எனது நன்றிகளும் அன்புடன் பாராட்டுக்களும் உறவே..

    பதிலளிநீக்கு
  16. சோம்பல்
    உன் சோம்பலை நீ தூக்கி எறிந்தால்
    உன் சாம்பல் கூட சாதனை பேசும்!
    - -கலாம்.//

    உண்மையில் சோர்ந்து கிடந்த என்னை தூண்டிவிட்ட வரிகள் முனைவரே நன்றி

    பதிலளிநீக்கு
  17. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  18. வருகைக்கும் கருத்துரைக்கும்..
    நன்றி சசி
    மகிழ்ச்சி கருன்
    நன்றி சூர்யஜீவா
    நன்றி தென்றல்

    பதிலளிநீக்கு
  19. மகிழ்ச்சி கத்தார் சீனு
    நன்றி மஞ்சு
    நன்றி சின்னத்தூறல்
    நன்றி ஸ்டாலின்

    பதிலளிநீக்கு
  20. கருத்துரைக்கு நன்றிகள் கடம்பவனக்குயில்
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  21. நன்றி இரத்தினவேல் ஐயா
    மகிழ்ச்சி திருமதி ஸ்ரீதர்
    தருகிறேன் இரமணி ஐயா
    நன்றி நிசாமுதீன்

    பதிலளிநீக்கு
  22. மகிழ்ச்சி இராஜா
    விரைவில் தருகிறேன் நாகா
    மகிழ்ச்சி சௌந்தர்
    நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  23. நன்றி சென்னைப் பித்தன் ஐயா
    மகிழ்ச்சி விச்சு
    நன்றிகள் விடிவெள்ளி
    நன்றி மாயஉலகம்

    தங்கள் முதல்வருகைக்கு நன்றிகள் செல்வன்.

    பதிலளிநீக்கு
  24. கனவு பெரியாதாக இருக்கும்போது
    உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்கவேண்டும்!
    - -கலாம்.
    what a beautiful thought

    பதிலளிநீக்கு