வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 7 செப்டம்பர், 2011

உங்கள் பெயரின் பொருள்??


அன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகைப்படும். 

 1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது. (மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது) 2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது. (காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை) 

  சில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள். குளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்) காரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர். ஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால். சேலம் – சைலம், மலை ஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி. இடைபாடி – இடையர்பாடி “தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது. 

கங்காரு பெயர்க்காரணம். கங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்.. புதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று.. அதற்கு அந்த பழங்குடி மக்கள் “கங்காரு“ என்றார்களாம். கங்காரு என்றால் அவர்கள் மொழியில் “தெரியாது“ என்று பொருள். இன்று வரை நாம் நமக்கும் தெரியாது தெரியாது என்று தான் அழைத்து வருகிறோம். இப்படி பெயர் வைப்பதில் பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. 

 நான் என் மாணவர்களை முதல் வகுப்பில் சந்திக்கும்போதே கேட்கும் முதல்கேள்வி.. உங்கள் பெயர் என்ன? அதன் பொருள் என்ன? என்பதே.. என்னால் முடிந்தவரை அவர்களின் பெயர்களுக்கான காரணத்தையும் அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறேன். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ என்று பெருமிதத்துடன் சொல்லும் பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. பெயரிட்டு அழைக்கும் மரபு காலகாலமாகவே நமக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும் காரணம் கருதியே பெயரிட்டு வந்திருக்கிறோம். 

மனிதர்களுக்கான பெயரிடும் மரபு. 

1. குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை என நிலம் சார்ந்து ஆண்களும் பெண்களும் பெயரிடப்பட்டனர். 
2. அரசமரபு சார்ந்த பொதுவான பெயர்களே யாவருக்கும் வழங்கப்பட்டன. 
3. தொழில் சார்ந்த பெயர்களாலும், அப்பெயர்களோடும் சேர்த்து பெயர்கள் வழங்கப்பட்டன. (கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்)
4. சாதிகளின் அடையாளமாகப் பெயர்கள் வழங்கப்பட்டன. 
5. மதத்தின் அடையாளமாகப் பெயர்கள் வழங்கப்பட்டன. 
6. மொழியின் அடையாளமாகவும், இனத்தின் அடையாளமாகவும் பெயரிடப்பட்டன. 
7. பண்பாட்டின் குறியீடாக பெயர்கள் உருமாறின.
8. தேசத் தலைவர்களின் மீது கொண்ட மதிப்பால் அவர்களின் பெயரிட்டு அழைத்தனர்.
9. கடவுளரின் பெயர்களை இட்டுக்கொண்டனர். 
10. தாத்தா, பாட்டியின் பெயர்களை இடும் மரபும் வந்தது. 

இன்றைய சூழலில் பெயரிடுதல்

 1. நாட்டுக்காக உழைக்கும் திரைப்பட நடிகை, நடிகர்களின் பெயர்களை விரும்பி வைத்துக்கொள்கின்றர்.
2. சோதிடம், எண்ணியல் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பல்வேறு மொழிகளில் பொருளே இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டுக் கொள்கின்றனர்.
3. அப்பா பெயரில் ஓரெழுத்து, அம்மா பெயரில் ஓரெழுத்து தாத்தா பெயரில் ஓரெழுத்து என்று இட்டுக்கொள்ளும் பெயரிகளில் எவ்வாறு பொருள் கண்டறிவது என்று தலையே சுற்றுகிறது. 
4. பாரதி, சூர்யா போன்ற பெயர்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடில்லாமல் இட்டுக்கொள்கிறார்கள். 
5. ன் என்ற இறுதிச் சொல் இவன் ஆண் என்பதையும் ள் என்ற இறுதிச் சொல் இவள் பெண் என்பதையும் ஒருகாலத்தில் காட்டியது... இன்று..? இன்று பலருக்குத் தம் பெயரின் பொருள் என்ன என்பதே தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொள்வதில் அவர்களுக்கும் அந்த அளவுக்கு ஆர்வம் கொள்வதில்லை. 

நகைச்சுவை..

ஒரு வீட்டில கணவனுக்கும் மனைவிக்கும் பெயர் வைப்பதில் பெரிய சண்டை தன் அப்பா பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று கணவனும், தன் அப்பா பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று மனைவியும் விவாதம் செய்துகொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு வந்த மூன்றாவது நபர், கணவனிடம் கேட்டார்... உங்க அப்பா பெயர் என்ன? கணவன் சொன்னார் – வெங்கட்ராமன். அவர் மனவியிடம் கேட்டார்... உங்க அப்பா பெயர் என்ன? மனைவி சொன்னார்- கிருஷ்ணன் இப்போது அந்த மூன்றாம் நபர் அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டார். “வெங்கட்ராம கோபலகிருஷ்ணன் என்று. கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய குழப்பம். வெங்கட்ராமன் என்னோட அப்பா கிருஷ்ணன் உன்னோட அப்பா கோபாலன் யாருன்னு அந்த மூன்றாவது நபர்கிட்டே கேட்டாராம் கணவர். அதற்கு அந்த நபர் சொன்னாராம்... அது என்னோட அப்பா பெயர் என்று!! இப்படி நம் பெயருக்குப் பின் இருக்கும் பொருள் என்ன என்றுதான் தெரிந்துகொள்வோமே.. 

அன்பான உறவுகளே.. 

 உங்கள் பெயர்களையும், அதற்கான பொருள் என்ன என்பதையும் நீங்கள் அறிந்த வரை சொல்லுங்கள்.. தெரியாவிட்டால் மறுமொழியில் தெரிவியுங்கள். என்னால் முடிந்தவரை நான்சொல்கிறேன். 

நம் பெயர்கள் எந்த அளவுக்கு நம்மொழியின், இனத்தின், பண்பாட்டின் அடையாளத்தோடும், அடையாளமின்றியும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம். முதலாவதாக என்பெயருக்கான காணரத்தைச் சொல்கிறேன் குணம் - நல்லபண்பு சீலன் - ஒழுக்கம் நான் குழந்தையாக இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தேனாம். அப்போது குணசீலன் என்றொரு மருத்துவர் என்னைக் காப்பாற்றினாராம். அதனால் அவரின் நினைவாக எனக்கு குணசீலன் என்று பெயர் வைத்து விட்டார்களாம். 473 சங்கப்புலவர்களின் பெயர்கள் தங்கள் பார்வைக்காக. சரி உங்கள் பெயருக்கான பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்..

213 கருத்துகள்:

  1. சசி - இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல், மழை

    தமிழ்ப் பெயர்தான் நண்பரே.

    நிலவுக்கு வேறு பெயர்களும் உண்டு..

    சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து, மதி

    பதிலளிநீக்கு

  2. அஸ்வதிகா என்றால் குதிரைகளை உடையவள் மற்றும் தூய்மையானவள் என்று பொருள்

    பதிலளிநீக்கு
  3. குமரேசன் பெயர்அ ர்த்தம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  4. எனது பெயர் திவாகர் என்றால் ஒளிதருபவன் கதிரவன் என்று பொருள், தமிழில் முதல் நிகண்டு திவாகரம் அதை எழுதியவர் திவாகர முனிவர், இப்பெயர் பழந்தமிழ் பெயரே...
    பிரசன்னா அர்த்தம் என்றால் உதயம் (அ) திருமாலின் பெயர்..

    திவாகர் பிரசன்னா என்றால் சூரியனைப் போல் பிரகாசிப்பவன், சூரிய உதயம் என்று அர்தம் கொள்ளலாம்...

    வேறு அர்த்தம் இருந்தால் பகிரவும்

    பதிலளிநீக்கு
  5. கௌரி சங்கர், தனமஹாலட்சுமி பெயர்களின் அர்த்தம் கூறவும்

    பதிலளிநீக்கு
  6. கௌரி சங்கர், தனமஹாலட்சுமி இவ்விரு பெயர்களின் அர்த்தங்கள் சொல்லவும்

    பதிலளிநீக்கு
  7. பால்பாண்டி பெயரின் அர்த்தம் ?? முனைவரே

    பதிலளிநீக்கு
  8. என்னது குழந்தைக்கு கவிமித்ரா / கவியாழினி என்று பெயர் வைக்கலாம் என்னுகிறேன் ...பொருள் என்னவென்று கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  9. யாத்ரன் என்ற பெயரின் பொருள்

    பதிலளிநீக்கு
  10. கவியாழினி பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  11. யுகன் என்ற பெயரின் அர்த்தம் ?

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகளுக்கு முகில் வேனில் என்று வைத்தேன். நவில், எழில், பொழில், கவின் என்று பல மூன்றெழுத்துப் பெயர்கள் இருக்கின்றன

    பதிலளிநீக்கு