வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 15 அக்டோபர், 2011

2020ஆம் ஆண்டு அறிவியல் கதை!



ம் அச்சத்துக்குப் பிறந்தவர்கள் இருவர்?

ஒருவர் கடவுள்!
இன்னொருவர் எமன்!

ம் தன்னம்பிக்கைக்குப் பிறந்தவர்கள் இருவர்?

ஒருவர் அறிவியல்!
இன்னொருவர் பகுத்தறிவு!

நம் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளும் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அறிவியல், ஆன்மீகம் என்னும் இரண்டையும் இணைக்கும் கதை ஒன்று...

மன் தன் எம தூதர்களான நோய்க்கிருமிகளிடம்..
ஒரு ஊரில் 100 பேரின் உயிரைப் பறித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்..

நோய்கிருமிகளும் எப்போதும் போல யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து ஊருக்குள் வர முயற்சித்தன.ஆனால் வரமுடியவில்லை. ஏனென்றால் அறிவியலாளர்கள் தம் ஊரைச் சுற்றி பாதுகாப்புத் திரையை உருவாக்கியிருந்தார்கள். வெளியே கிருமிகள் வந்திருக்கின்றன என்பதை நுண்ணோக்கி வழியே அறிந்த விஞ்ஞானிகள் இணையவழியே தொடர்புகொண்டு 

நீங்கள் யார்? என்ன வேலையாக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
கிருமிகள் சொல்லின....

ஐயா அறிவியலாளர்களே.. நாங்களெல்லாம் எம தூதர்கள்.. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவே எமன் எங்களை அனுப்பிவைத்தார்.. இதோ எமனின் கட்டளைச் சான்றிதழ் என்று காட்டின..
இன்று இந்த ஊரில் 100 பேரின் உயிரைப் பறித்து வரவேண்டும். இதுவே அவரின் கட்டளை... நீங்கள் ஒத்துழைத்தால் 100 பேரை மட்டும் கொண்டு செல்வோம்.. தடுத்தால் எமனின் கோபத்துக்கு உள்ளாவீர்கள்.. பிறகு அவர் இயற்கைச் சீற்றங்களை உருவாக்கிப் பேரழிவை ஏற்படுத்துவார்.. எப்படி வசதி? என்று கேட்டன..

வேறு வழியில்லாமல் அறிவியலாளர்களும்.. கிருமிகளை ஊருக்குள் அனுமதித்தனர். ஆனால் 100 பேரைத் தவிர வேறு யாரையும் கொல்லக்கூடாது என்று அனுப்பிவைத்தனர்.
சென்ற வேலை முடிந்து திரும்பி வந்த கிருமிகளிடம் எத்தனை பேரின் உயிரைப் பறித்தீர்கள் என்று கேட்டனர் அறிவியலாளர்கள்..
கிருமிகள் சொல்லின... 1000 பேர் என்று..
திகைத்துப் போன அறிவியலாளர்கள்..
ஏன் இப்படிச் செய்தீர்கள் 100பேரின் உயிரை மட்டும்தானே பறிக்கச் சென்றீர்கள்?
ஏன் இப்படி 1000 பேரின் உயிரைப் பறித்தீர்கள்? என்று கேட்டனர்.

கிருமிகள் சொல்லின...


100 பேரின் உயிரைப் பறிக்கத்தான் வந்தோம். அதற்காக ஆயிரம்பேரின் உடலில் தங்கினோம். நூறுபேரின் உயிரை மட்டுமே அழிப்பது எங்கள் 
நோக்கம்! ஆனால் நமக்கு நோய் தாக்கிவிட்டதே என்ற அச்சத்திலேயே 
பலரும் இறந்துபோய்விட்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது..??

அஞ்சி அஞ்சி வாழ்வோர் வாழ்வதை விட இப்படிச் செத்துப்போவதே மேல்!
உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறோம் என்றன கிருமிகள்..
என்ன என்று உற்றுக் கேட்டனர் அறிவியலாளர்கள்..


கிருமிகள் சொல்லின...


“நீங்கள் எப்போது இறக்கப் போகிறீர்கள் என்பதை முடிவெடுப்பவர் எமன் என்றோ, விதி என்றோதான் நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்...
உண்மை என்னவென்றால்...


உங்கள் இறப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் மனம் எப்போது பலவீனப்பட்டுப் போகிறதோ அப்போதுதான் உடலும் நோய்வாய்ப்பட்டுப் போகிறது. உங்கள் மனம் சொல்லித்தான் எமன் உங்களைத் தேடி எங்களை அனுப்புகிறான்!!

நாங்கள் வரும்போது 100 பேர்தான் இறப்பதற்கு முன்பதிவு செய்திருந்தார்கள். நாங்கள் வந்து திரும்பும் முன்னர் மீதி 900பேர் முன்பதிவு செய்துவிட்டார்கள்“ என்றன கிருமிகள்.


போங்கப்பா போய் இதற்குக் காரணம் என்ன என்று சோதனைச் சாலையில் கண்டுபிடிங்க...
எங்களுக்குத் தெரிந்தவரை உங்களோட அச்சம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறோம் என்று சொல்லிச் சென்றன.


தொடர்புடைய இடுகைகள்







54 கருத்துகள்:

  1. நோய் கிருமிகளை எதிர்க்கும் குணம் நம் உடலில் சாதாரணமாகவே இருக்கும், அறிவியல் முன்னேற்றம் நோய் கிருமிகள் அழிப்பானை கண்டுபிடித்தது, சிலரின் சுயநல லாபம் பயத்தை தூண்டி விட்டு விற்ப்பனையை அதிகரித்தது... நம் தன்னம்பிக்கை வெளியில் இருந்து தற்காப்பு கிடைக்கும் பொழுது உள்ளுக்குள் ஏன் தயாரிக்க வேண்டும் என்று நிறுத்திக் கொள்கிறது... ஆகையால் நோய் கிருமிகள் இந்த பாதுகாப்பு கிடைக்காத சமயங்களில் உள்ளே நுழைந்து பிரச்சினையை கிளப்புகின்றன..
    அதனால் தான் பாரதி புதிய ஆத்திசூடியில் ஒளடதம் தவிர் என்று கூறினான்..
    அதன் பொருள் தேவை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ளாதே என்பது தான்

    பதிலளிநீக்கு
  2. //
    அஞ்சி அஞ்சி வாழ்வோர் வாழ்வதை விட இப்படிச் செத்துப்போவதே மேல்!
    //

    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  3. தன்னம்பிக்கைக்கு பிறந்தவர்கள்.. நல்ல சிந்தனை.,

    பதிலளிநீக்கு
  4. சிந்தனையை தூண்டும் விதமான கதை, அருமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
    மன நடுக்கம் அது மிகக் கொடுமை!
    எனச் சொல்லியிருக்கார் கவிஞர் ந.முத்துகுமார்...

    அதையே கதை வடிவில் அழகாக சொல்லியிருக்கார் நம்ம முனைவர்.இரா.குணசீலன்..

    நீங்கள் சொன்னது உண்மைதான் முனைவரே!

    பதிலளிநீக்கு
  6. குணா,

    மனோபலமே சிறந்த மருந்து என்பதை உணர்த்தும் கதை பகிர்வு அருமை.

    எந்த விசயத்தையும் கதையுடன் புணைந்து சொல்வதும், கேட்பதும் நம் பண்பாடுகளில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கதை.எனக்குத் தெரிந்து ஐசியு வில் உள்ள நோயாளிகளின் மரணம் “அய்யய்யோ நம்மள இங்க படுக்கவச்சுடாங்களே,இனி நம் கதை முடிந்தது”என்ற பயம்தான் முக்கிய காரணம்.உடல் நிலையும் மன நிலையும் சரியாக இருக்கும் பட்சத்தில் உயிருடன் வெளிவருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  8. கமெண்ட் பாக்சை அடுத்து சப்ஸ்கிரைப் பை ஈமெயில் னு ஒரு ஆப்சன் இருக்குமே.அதை கிளிக்கினால் பின்வரும் கமெண்ட்ஸ்கள் நம் மெயிலுக்கு வருமே அந்த ஆப்சனை காணும்.

    பதிலளிநீக்கு
  9. மனதை பற்றிய சிந்தனை...

    அருமையான பதிவு... நல்ல தெளிவான கதை...

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  10. கதையும் கைவரப் பெற்ற முனைவரே!தாங்கள்
    எதையும் எழுதக் கைவரப் பெற்றவர்
    என்பதற்கு இது ஒரு சான்று!
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
    அஞ்சாத பொருளில்லை அவனியிலே

    நல்ல கருத்தை கதையாக்கிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  14. தன்னம்பிக்கையில் விளைந்த இரண்டுமே
    நம்மை முன்னேற்றச் செய்தது என்பது
    மறுக்க முடியாத உண்மை. ஆனாலும்
    வாழ்வில் பயமிருந்தால் தான் புரியும் செயல்களில்
    ஒழுக்கம் இருக்கும். ஆக பயத்தால் விளைந்தவை
    நம்மை நெறிப்படுத்துகின்றன.

    நெறிப்படுத்தல் இருந்தாலும், தன்னம்பிக்கையை
    செயல்வடிவில் கொண்டுவர மனோபலம்
    மிகமிக அவசியம் எனபதை அருமையாய்
    உணர்த்தி இருக்கிறீர்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  15. தன்னம்பிக்கைக்கு பிறந்தவர்கள்.. நல்ல சிந்தனை.,

    பதிலளிநீக்கு
  16. கடுமையான நோயிருந்தும் உடல்வேதனைகளைத் தாங்கி மனவலிமையோடு வாழ்பவர்களை எண்ணி வியக்கும் அதே வேளையில் சின்னதாய் அடிபட்டாலும், ஊரைக்கூட்டுபவர்களையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவர்களைப் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  17. செம சூப்பரான கற்பனை...ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. இறப்பு ஏற்படுமோ என்கிற பயம் தான் இறப்பிற்கும் ஒரு காரணமாக இருக்கிறது. நல்ல தகவல்!

    பதிலளிநீக்கு
  19. அஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தின் வாயிலாகவே கூறியுள்ளீர்கள்! மனோதிடம் மனிதனின் சர்வ வல்லமை படைத்த ஒரு முதன்மை மருந்து. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  20. எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள் மற்றும் கதைகள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

    பதிலளிநீக்கு
  21. जो डर गया
    वो मर गया

    பயமே மரணம்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான கதை
    சுட்டு சாகிற பறவையை விட
    துப்பாக்கிச் சப்தம் கேட்டு சாகிற
    பறவைகளுமிக மிக அதிகம்
    என்பதை மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 14

    பதிலளிநீக்கு
  23. அச்சம் தவிர் என்பதை அசத்தலாக கதையாக சொல்லி கலக்கிவிட்டீர்கள் முனைவரே! வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  24. @suryajeeva தங்கள் ஆழ்ந்த அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  25. @சத்ரியன் நம் பண்பாடுகளை மறக்கலாமா..
    அதான் கதை சொல்லும் முயற்சி.

    பதிலளிநீக்கு
  26. @thirumathi bs sridhar மறுமொழிப் பெட்டியின் கீழ் இந்த வசதி உள்ளதே...

    பதிலளிநீக்கு
  27. @மகேந்திரன் வாழ்வியல் தேடல் குறித்த புரிதலுடன் கூடய மறுமொழிகளுக்கு நன்றிகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  28. @நெல்லி. மூர்த்தி அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

    மனோ திடமே மாமருந்து..

    பதிலளிநீக்கு
  29. @jiff0777 தங்கள் வருகைக்கும் அறிமுகத்துக்கும் நன்றிகள் நண்பா.

    பதிலளிநீக்கு