வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்துக்கு வாங்க

தமிழ் வலையுலகம் என்வாழ்வில் இன்னொரு உலகம் போன்றது. இவ்வுலகத்தோடு எனக்கான தொடர்பு 5 ஆண்டுகள் தான் ஆனாலும்.
100 ஆண்டுகள் வாழ்ந்து சம்பாதிக்கவேண்டிய தமிழ் உறவுகளைப் பெற்றுத்தந்திருக்கிறது இந்த வலையுலகம்.

“நினைத்துப் பார்த்தல் கூட ஒருவிதமான சந்திப்புதான்” அந்த வகையில் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காவிட்டாலும் வலைப்பதிவு என்னும் ஊடகவழியே நினைத்துப் பார்த்தல் ஒரு இனிமையான அனுபவமாகும்.


எழுத்துக்களாலும், கருத்துக்களாலும் அறிமுகமான ஒவ்வொரு தமிழ் உறவுகளும்...
ஒரே குடும்பத்தில் பிறந்தவர்போல, 
ஒரே பள்ளியில் படித்தவர்போல பேசிப்பழகியமை வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. 

தமிழ் வலையுலகம் எந்த இலக்கு நோக்கிச் செல்கிறது..?
தமிழ்ப் பதிவர்களின் நிறைகள்? குறைகள்?தேவைகள்?

என பதிவர்கள் தம்மைத் தாமே மதிப்பீடு செய்துகொள்ளும் களமாக இந்தக்கூட்டம் அமையும் என நம்புகிறேன். இந்தமுறை இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

அன்பான தமிழ் உறவுகளே..

உங்களையும் இக்கூட்டத்துக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..


ஈரோடு வலைப்பதிவர் சங்கமம்-2011 

 18.12.2001 ஞாயிறன்று, 

ஈரோடு, பெருந்துறை சாலை, 

பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், 

காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு 

நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு
 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்து விழாக்குழுவினருக்குத் துணைநிற்போம்.



தொடர்புடைய இடுகைகள்



18 கருத்துகள்:

  1. வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனதற்காக வருந்துகிறேன் முனைவரே..
    இப்போது அபுதாபியில் இருக்கிறேன்..
    சந்திப்பு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் முனைவர் அவர்களே..

    பதிவர் சந்திப்பு சிறப்பாய் அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    நிச்சயமாய் வருகின்றேன்

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  3. சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  4. 100 ஆண்டுகள் வாழ்ந்து சம்பாதிக்கவேண்டிய தமிழ் உறவுகளைப் பெற்றுத்தந்திருக்கிறது இந்த வலையுலகம்.//

    உண்மைதான் ..
    உணர்ந்து அருமையாய் தந்த பகிர்வுகள்..
    வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் பதிவர் சந்திப்புக்கு..

    பதிலளிநீக்கு
  5. முனைவரே!
    ஈரோடு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்! மேலும், என் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள
    வலைப் பதிவாளர்களுக்கு ஓரு பாதுகாப்பு வேண்டாமா என்ற
    கட்டுரையைப் பற்றி விவாதிக்க அங்கு தாங்கள் தக்க முயற்சி செய்ய
    வேண்டுகிறேன்
    சமீபத்தில் தான் மருத்து மனையிலிருந்து வீடு திரும்பிய
    என்னால் வர இயலாத நிலை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்
    கொள்கிறேன்
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. பதிவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியும் பயனும் தரும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன். சந்திப்பின் விவரங்களைப் பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சந்திப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்... நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. சங்கமத்தை பதிவர்கள் சங்கமாக மாற்ற முன்முயற்சி எடுங்கள்... சங்கம் அமைப்பதில் என்றும் ஈரோடு என்றும் முன்னணியில் தான்... வாழ்த்துக்களுடன் கோரிக்கையாக

    பதிலளிநீக்கு
  9. சங்கமம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. @புலவர் சா இராமாநுசம்தங்கள் அறிவுறுத்தல் குறித்து சிந்திக்கவேண்டிய காலகட்டம் தான் இது புலவரே

    பதிலளிநீக்கு