வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

தற்கொலை செய்த அலை..




கடல் அலை வந்து கரையில் கற்கள் மீது மோதி நுரை கக்கிச் செல்லும் போது என் மனது சொல்கிறது...





காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?

என்று..

கடலையும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் என் மனது கால இயந்திரமேறி சங்ககாலத்துக்குச் சென்றுவிடுகிறது.
கல்பொரு சிறுநுரையார் என்றொரு புலவர் சங்ககாலத்தில் இருந்தாரே என்று.. 

14 கருத்துகள்:

  1. கடல் நுரையைப் பற்றி வித்யாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  2. சமுத்திர அலைகளின் ரசனையினூடே சங்ககாலப்பாடல் நினைவுக்கு வருவது தமிழின் பெருமையன்றோ? பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    கல்பொரு சிறுநுரையார் பற்றி அறிய இயலவில்லை. சாளரம் திறக்கமறுக்கிறதே...

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் மீண்டும் பிறக்கும் அலையும் நுரையும்.. அழ்கான கற்பனை.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு