வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 9 ஏப்ரல், 2012

உண்டு உறங்கமட்டுமல்ல வீடு...

கண்ணில் பட்டு மனதைத் தொட்ட நிழற்படம் இது..


  • நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் மதிப்புமிக்க சொத்து நல்லநூல்களாகும்.
  • உடலுக்கு உணவுபோல,சிந்தனை வளத்துக்கு நல்ல நூல்கள் தேவை.
  • ஒவ்வொரு நூல்களும் அந்த ஆசிரியரின் வாழ்நாள் அனுபங்களாகும். அதனால் அந்த நூலை நாம் படிக்கும்போது அவரின் வாழ்நாளையும் சேர்த்து நாம் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.
  • என்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. அது குழந்தையைக் கையில் வைத்துக் கொஞ்சுவதுபோல சுகமானது.
  • புத்தகம் என்ற சொல்லே புத்தி+அகம் என்ற ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியது.
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் 
என்பார்கள். நானறிந்தவரை அதன் பொருளே வேறு..
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் 
என்றுதான் இருந்திருக்கவேண்டும்..

கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்
என்பதும் கூட
நல்ல நூல்களைக் 
கண்டு அதைக் (நல்ல நூல்களை)கற்றவன் பண்டிதனாவான் 
என்றுதான் இருந்திருக்கவேண்டும்.

இப்பச் சொல்லுங்க உண்டு உறங்க மட்டுமா வீடு..

கொஞ்சம் நல்ல நூல்களையும் படிக்கலாமே
அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லலாமே...

தொடர்புடைய இடுகை




11 கருத்துகள்:

  1. மயக்குகின்ற வாசனை எதுவென்றால் புத்தக வாசனைதான்..புதிய புத்தகத்தின் நறுமணம் புத்தம் புது பூக்களுக்குக் கூட இல்லை. நல்ல பதிவு.நல்ல புகைப்படம்

    பதிலளிநீக்கு
  2. படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்
    எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்.../

    உண்மை தான்...

    பதிலளிநீக்கு
  3. ''..கண்டு அதைக் (நல்ல நூல்களை)கற்றவன் பண்டிதனாவான் ...''
    உணவின்றி வாழலாம். நூல் இன்றி வாழ முடியாது. மிக நல்ல இடுகை. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.(முகநூலால் வந்தேன்.)

    பதிலளிநீக்கு
  4. என்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. /////

    உண்மைதான் நல்ல அருமையான பதிவு நண்பா


    நூல்களை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம்

    பதிலளிநீக்கு
  5. என்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. அது குழந்தையைக் கையில் வைத்துக் கொஞ்சுவதுபோல சுகமானது.

    -மிகமிகச் சரியான வரிகள். நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் கருத்துக்களை வரிக்கு வரி ஆமோதித்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. புத்தகம் என்ற சொல்லே புத்தி+அகம் என்ற ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியது.// பல சிறந்த கருத்துக்களை விளக்குவதாய் அமைந்த பதிவு அருமை .படம் அழகு .

    பதிலளிநீக்கு
  7. நன்மை பயக்கும் படைப்பு முனைவரே!

    பதிலளிநீக்கு