வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 8 செப்டம்பர், 2012

பொகுட்டுவிழி




மழை - நீர்க்குமிழி - முயல் இம்மூன்றையும் எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் படித்தபிறகு...

மீண்டும் எப்போது இவற்றைக் காண்போம் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

பாடல் இதோ...
நீருள் பட்ட மாரிப் பேர்உறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ஊர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்

புறநானூறு -333 -1-4

மேகத்தின் பெருமழையால்,
நீருள் தோன்றிய குமிழியைப் போல,
உருண்டு திரண்டு விழித்தலையுடைய கண்களையும்,
கரிய பிடரியையுடைய தலையையும்,
பெரிய காதுகளையும், உடைய முயல், ஊருக்கு உள்ளே சிறிய  புதர்களில் துள்ளிவிளையாடும்.

என்ன ஒரு ஒப்பீடு மழையால் ஏற்பட்ட நீர்க்குமிழிகளைப்போல முயலின் கண்கள் இருக்கும் என்ற புலவரின் சிந்தனை பாராட்டத்தக்கதாகவுள்ளது.

18 கருத்துகள்:

  1. அந்தப் புலவருக்கு என்ன ஒரு கற்பனை..அருமை! பாடலுக்கும் பொருளுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அழகான முயல்... அழகான ஒப்பீடு! தொடருங்கள் முனைவரே!

    பதிலளிநீக்கு
  3. 'பொகுட்டு விழி' என்ன அழகான சொல்... புறநானூறு குறித்து ஒரு பதிவை எழுத நேற்றே நினைத்தேன். தம்பி முந்தி விட்டீர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலை நான் எழுதக் காரணமான சொல் பொகுட்டுவிழி என்ற சொல்தான் அன்பரே..

      வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

      நீக்கு
  4. இயற்கையை ஆழ்ந்தூன்றிக் கவனித்ததோடு அல்லாமல் மழைத்துளியையும் முயலின் குண்டுக்கண்ணையும் அழகாய் ஒப்புமைப்படுத்தி அழகாய்ப் பாடல் புனைந்த புலவரின் திறனை வியக்கிறேன். சங்க இலக்கியங்கள் பற்றிய அருமையானப் பகிர்வுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  5. புறநானூற்று பகிர்வு சிறப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
    நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


    பதிலளிநீக்கு
  6. இது போன்ற பதிவின் மூலம் புறநானூறு பாடலை நாங்கள் படிக்கச் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி! நல்ல உவமை உள்ள கவிதை...

    என் வலைபதிவில் "ஒரு தாயின் பிராத்தனை".....

    பதிலளிநீக்கு
  7. மழைத்துளிக்கும் முயலின் கண்ணுக்கும்அழகான ஒப்பீடு.அழகான படங்களும் !

    பதிலளிநீக்கு
  8. பொகுட்டு விழி என்ற சொல்லே எவ்வளவு அழகாக உள்ளது

    பதிலளிநீக்கு