உலக அழிவு (காணொளி)
உலகம் அழியப்போகுதாமே?
உண்மையா? பொய்யா?
என்ற கேள்வி உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கலாம்.
அவசர அவசரமாகச் செல்லும் மக்கள் கூட ஒரு மணித்துளியாவது நின்று உலகம் அழிந்தாலும் அழிந்துபோகுமோ என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படிப்பட்ட செய்திகள் பலமுறை சொல்லப்பட்டிருந்தாலும், இந்தமுறை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டி சொல்லப்படும் செய்தி பலவீனமானவர்களை மேலும் பலவீனப்படுத்துவதாக உள்ளது.
காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல மாயன் நாட்காட்டி சொல்லும் செய்தியோடு இந்து, கிறுத்துவர், இசுலாமியர் நம்பிக்கைகளும் ஒத்துப்போகின்றன.
எப்படி வரும் அழிவு?
நிலநடுக்கம், புயல், கடல்கோள்(சுனாமி), எரிகற்கள் என ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்,
உலகம் அழிந்தால் அழியட்டும்
எல்லோம்  சாகும்போது நாமும் செத்தால் பரவாயில்லை
வலிக்காம சாகனும்
அடக்கொடுமையே நான் இன்னும் வாழவே ஆரம்பிக்கலையே
இனிமேலா அழியனும் இப்பவே அழிந்துகொண்டுதானே இருக்கு
என்னோட வாழ்க்கையெல்லாம் கல்விச்சாலையிலேயே போயிடுச்சே
நாம் விரும்பியா இங்கு வந்தோம்?
போகவேண்டிய நேரம் வந்தால் போகவேண்டியதுதானே?
எதுவுமே தெரியாமல் தொடங்கிய இந்த வாழ்க்கை
எல்லாம் தெரிந்தபோது முடிந்துபோகிறது..

என்று பலர் புலம்பிக்கொண்டிருக்க..

அதெல்லாம் பொய் உலகமாவது அழிவதாவது?
இதுபோல எத்தனை கதைகளைக் கேட்டிருக்கோம் உலகம் அழியாதுங்க.. வழக்கமா ஏற்படுவதுபோல ஆங்காங்கே சில இயற்கைச் சீற்றங்கள் வரலாம் அவ்வளவுதான். என்றும் சிலர் நம்பிக்கை மொழிகள் பேசுகிறார்கள்.

அவசரமாக அலைபேசி அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசுகிறேன்.
ஒரு மாணவர் கேட்கிறார்.. ஐயா 21.12.12 அன்று கல்லூரி விடுமுறையா? என்று.
இவ்வாறு பலவீனமான பலரைப் பார்க்கும்போது 21.12.12 அன்று சிறு சத்தம் கேட்டால்கூட இவர்களெல்லாம் இறந்துபோய்விடுவார்களோ என்று தோன்றுகிறது.

உலகம் அழிகிறதோ, இல்லையோ..
செக்குமாடுபோல வழக்கமான வாழ்க்கை வாழ்ந்துவந்தவர்களும்
இப்படியொரு பேச்சுவந்தபிறகாவது சிந்திப்பார்களா?
நாம் உலகம் அழியும்போது நாம் எதையுமே எடுத்துச்செல்லமுடியாது என்று..
உலக அழிவு குறித்த பலரின் கவலைகளையும் சொன்ன எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
ஏனென்றால் துன்பங்களை நினைத்துத் துன்பப்படுவது இரண்டுமுறை துன்பப்படுவதற்குச் சமமானது. அதனால் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பையும் கொண்டாடுவோம். உலகம் அழியாது என்று நம்புவோம்.

Comments

 1. பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பையும் கொண்டாடுவோம். உலகம் அழியாது என்று நம்புவோம்.

  நம்பிக்கைதானே வாழ்க்கை !

  ReplyDelete
  Replies
  1. நம்புவோம் இராஜராஜேஸ்வரி. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

   Delete
 2. இப்பவே பயமாருக்கே!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் பயமா இருக்கா.. அதெல்லாம் நடக்காது நண்பா..

   Delete
 3. இவ்வாறு பலவீனமான பலரைப் பார்க்கும்போது 21.12.12 அன்று சிறு சத்தம் கேட்டால்கூட இவர்களெல்லாம் இறந்துபோய்விடுவார்களோ என்று தோன்றுகிறது.


  முற்றிலும் மறுக்க முடியாத உண்மை இதுதான் .இந்தக் கேள்விகளை அதிகம் கேட்டுத் தவிப்பவர்கள் குழந்தைகள்தான் மிகவும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது பிஞ்சு உள்ளங்களின் தவிப்பைப் பார்க்கும்போது .மிக்க நன்றி தங்கள்
  பகிர்வுக்கு !.....

  ReplyDelete
  Replies
  1. நேர்மறையாகவே எண்ணுவோம் நல்லதே நடக்கும். தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்பாளடியாள்.

   Delete
 4. 22ஆம் தேதி அவசியம் பதிவு ஒன்று
  போடவேண்டும் என எண்ணியுள்ளேன்
  அஞ்சி அஞ்சி சாவோருக்கு
  அஞ்சாத அச்சமூட்டாத பொருள்
  உலகினில் இருக்கிறாதா என்ன ?
  சுவாரஸ்யமான பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் அன்பரே.

   Delete
 5. அச்சப்படுத்தும் பரபரப்பான வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இயற்கை சீற்றங்களால் அவ்வபோது சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இயற்கையை மனிதர்கள் அழித்து கொண்டு உலக அழிவை பற்றி பேசுகிறார்கள்.இயற்கையை காத்து உலகை காக்க மனிதர்கள் முற்பட வேண்டும்.

  பச்சை புடவை, மஞ்சள் புடவை வதந்திகளை போல நேற்றும் 12/12/12 அன்று அமாவாசை வந்ததால் ஆண் பிள்ளைகளுக்கு ஆகாது என்று விளக்கு ஏற்றி இருக்கிறார்கள். இப்படி யார்தான் கிளப்பறாங்களோ தெரியலை.எண்ணெய் வியாபாரியோ?


  உலகம் அழிவது பற்றி நினைப்பதில்லை.ஆனாலும் எனக்கு சில வினோதமான கனவுகள் வந்திருக்கு. எரி கற்கள், வெள்ளம் என்று எந்த தொழில் நுட்பமும் இல்லாமல் பிரமாண்டமான காட்சிகளை பார்த்திருக்கிறேன் . மறு நாள் அந்த கனவை நினைத்து சிரித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா.. நேற்று கூட மாணவர்களெல்லாம் மதியம் இரண்டுமணிக்கு பரபரப்பாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்டால் சூரியனைச்சுற்றி இன்னொரு ஒளி வட்டம் தெரிகிறது என்றார்கள் நானும் பார்த்தேன் அப்படியெதுவும் தெரியவில்லை..

   பயந்தவனுக்கு இருளா தெரிவெதெல்லாம் பேய்தான் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு

   Delete
 6. ஆமாம் உளாகம் அழியுமுன் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை பேசுங்கள் நேர்மையாய் வாழுங்கள்,இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்கள் என்று ஏன் சொல்ல கூடாது

  ReplyDelete
  Replies
  1. நன்றாகச் சொன்னீர்கள் கவிஞரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

   Delete
 7. நாம் எப்பொழுதும் போல் இருப்போம்.எதுவேண்டுமானாலும் நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த உலகை இரசிக்கும் இரசிகனாக இருப்போம் இறுதிவரை.
   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முரளி.

   Delete
 8. எப்பவோ ஒருநாள் அழியத்தானே போறோம்! அதற்காகக் கவலைப்படுது தேவையற்றது!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி புலவரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

   Delete
 9. அச்சம் என்பது மடமையடா என்ற பாடலே நினைவுக்கு வருகிறது நல்ல பகிர்வுங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சசிகலா

   Delete

Post a Comment