வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 ஜனவரி, 2013

உங்கள் பள்ளிக்கால நிழற்படம்!


அன்பு நண்பர்களே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் உலவியபோது உங்கள் பள்ளிக்கால நிழற்படத்தைக் காணவேண்டுமா? என்றொரு அறிவிப்பு

நானும் ஆர்வத்தில் ஆமாம் என்று அந்த முகவரிக்குச் சென்றேன்.

எந்த நாடு?
எந்த ஊர்?
எந்த பள்ளி?
எந்த ஆண்டு?

எனப் பல வினாக்களைச் சரியாக நிறைவு செய்தேன். தேடுதல் முடிவுகளும் வந்தன.

நீங்கள் கொடுத்த தகவலின் படி தங்களுக்கு இரண்டு நிழற்படங்கள் வந்துள்ளன.

ஒன்று குழுபடம், இன்னொன்று தனிநபர் நிழற்படம் என்று அறிவிப்பு வந்தது.

மிக ஆவலோடு பார்த்தேன்.

நிழற்படங்களைப் பார்த்தவுடன் சிரிப்புதான் வந்தது.?

உங்கள் நிழற்படங்களைப் பார்த்து உங்களுக்கு அழுகை வந்தால் கோபம் வந்தால் இந்த இணைய முகவரியை உங்கள் நண்பரிடம் கொடுத்து உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் சொன்னர்கள்.

அந்த இணையதள முகவரி இன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணில் பட்டது.

நீங்களும் சிரிக்கவேண்டும் என்பதற்காக அந்த முகவரியைப் பரிந்துரைசெய்கிறேன்.

3 கருத்துகள்:

  1. இது போல் நிறைய இருக்கிறது.. முற்பிறவியில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பன போன்ற காமெடி எல்லாம்...

    பதிலளிநீக்கு
  2. முன்பே நானும் பார்த்திருக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு