வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 மே, 2013

தமிழ்த்தாயின் கோரிக்கை

இன்று தமிழுக்கு எத்தனை எத்தனை  சோதனைகள்!
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி
அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழுக்குத் தடை
என ஒவ்வொரு நாளும் புதுப்புது சோதனைகள்!

இருந்தாலும் என் மனம் சொல்கிறது இதனால் தமிழுக்கு எதுவும் தளர்வு ஏற்பட்டுவிடாது என்று..

காரணம்..
இத்தனை ஆண்டுகளாக தமிழ் மீது ஏற்பட்ட பண்பாட்டுத்தாக்கங்கள், மொழித்தாக்கங்கள்.. அத்தனையையும் கடந்து இன்றும் தமிழ் இணையத்துக்கு வந்திருக்கிறது. என்றால் அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. இன்றும் பிறமொழி கலவாமல் தமிழ்பேசுவோர் எழுதுவோர் நிறையவே இருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் வருவதற்கு முன்பிருந்தே தமிழ் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த கல்விநிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் தமிழில் சிறந்த இலக்கிய, இலக்கணச் செல்வங்கள் தோன்றியிருக்கின்றன. அதனால் தமிழ்ப்பற்றாளர்கள் மனம் தளராமல் தாய்மொழியான தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகளை ஆராயவேண்டும்.

பள்ளி சென்றுதான் ஒரு மொழியைக் கற்கவேண்டும் என்பதில்லை. கல்விநிறுவனங்கள் மொத்தமாகத் தமிழைப் புறக்கணித்தாலும் இணையவழியே தமிழ்மொழியைப் வளர்க்கமுடியும்.

கண் சரியாகத் தெரியாதவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலில் கண்ணாடி அணியலாம். கண் நன்றாகத் தெரிபவர்கள் ஏன் கண்ணாடி அணியவேண்டும?

ஆங்கிலம் என்பது கண்ணாடி என்பதை நாம் உணரவேண்டும்.

ஆங்கிலம் வயிற்றுக்காக, தமிழ் வாழ்க்கைக்காக என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழ் நமது தாய்மொழியாக அமைந்தது ஒரு இயற்கையான நிகழ்வுதான். என்றாலும் அதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம். இந்தச் சூழலில் பாரதியாரின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..


 
தமிழ்த்தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்..

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
      மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
      ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
      காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
      தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
      நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
      நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
      சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
      காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
      யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
      சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
      ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
      கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
      பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
      மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
      சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
      இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும்-இன்று
      சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
      ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

தொடர்புடைய இடுகைகள்

23 கருத்துகள்:

  1. /// ஆங்கிலம் வயிற்றுக்காக, தமிழ் வாழ்க்கைக்காக என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ///

    அருமை...

    மகாகவி வரிகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் தனபாலன்.

      நீக்கு
  2. முனைவரே தங்கள் பதிவில் கூறியுள்ள அனைத்தும் உண்மை! உண்மை! தமிழை அழிக்க யாராலும் முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் புலவரே.

      நீக்கு
  3. ஆங்கிலம் என்பது கண்ணாடி என்பதை நாம் உணரவேண்டும்.

    ஆங்கிலம் வயிற்றுக்காக, தமிழ் வாழ்க்கைக்காக என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

    உண்மைதான் நாம் கற்கும் தமிழ் எம் இனத்தின் உயிர்
    உயிரை விற்று உண்டு களிப்பதில் என்ன சுகம் !!
    அருமையான கருத்துக்கள் அடங்கிய சிறப்பான பகிர்வுக்கு
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உண்மைதான் நாம் கற்கும் தமிழ் எம் இனத்தின் உயிர்
      உயிரை விற்று உண்டு களிப்பதில் என்ன சுகம் !!

      அழகாகச் சொன்னீர்கள் நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  4. பெயரில்லா27 மே, 2013 அன்று PM 7:01

    வணக்கம் திரு முனைவர் குணசீலன் அவர்களே , தங்களுடைய கூற்று மெய் , தமிழை எவராலும் அழிக்கமுடியாது நாம் அழித்தாலோழிய . பதிவிட்டமைக்கு நன்றி சுரேந்திரன்

    பதிலளிநீக்கு
  5. ஆங்கில வழிக் கல்வியாழ் தமிழ் அழிந்து விடாது என்பது உண்மை. பாரதியின் அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் முரளிதரன்.

      நீக்கு
  6. உண்மைதான் சரியாச் சொன்னீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் கவிஞரே.

      நீக்கு
  7. // இருந்தாலும் என் மனம் சொல்கிறது இதனால் தமிழுக்கு எதுவும் தளர்வு ஏற்பட்டுவிடாது என்று.. //

    உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா.

      நீக்கு
  9. சரியாகச்சொன்னீர்கள். தமிழை இணையம் வழி வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் கவிப்பிரியன்.

      நீக்கு
  10. "ஆங்கிலம் வயிற்றுக்காக, தமிழ் வாழ்க்கைக்காக" சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் மாதேவி.

      நீக்கு
  11. நம்பிக்கை தரும் பதிவு..நன்றி..
    //புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.// உண்மைதான்..
    தமிழ்த்தாய் என்றும் சீராட்டுவாள்..

    பதிலளிநீக்கு