வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) அவர்களின் பிறந்தநாள் இன்று. சிறந்த தமிழறிஞரான இவர்,தமிழ்த்தாத்தா என அழைக்கப்பட்ட . வே. சாமிநாதையரின் ஆசிரியர் என்னும் பெருமைக்குரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர். நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.
சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்:
பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களை விட தமிழ்த்தாத்தா புகழ்பெற்றுத் திகழ்ந்தார். உ.வே.சா பெற்ற புகழ் யாவும் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களையே சேரும்.

நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்
நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும் என்பதற்க இந்த குருவும் சீடரும் நல்ல சான்றுகளாவர்.
இவரது பிறந்தநாளன்று அவரது தமிழ்ப்பணியை எண்ணிப்பார்ப்பது நம் கடமை.


3 கருத்துகள்:

  1. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பற்றி அறியத்தந்ததற்கு நன்றி முனைவரே. உலா, கோவை, கலம்பகம் எல்லாம் படித்த ஞாபகம்..என்ன என்னவென்று மறந்து போனதே :( படிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா. பிள்ளை அவர்களைப் பற்றி அறிந்தது எனக்கு மிக மிக மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு