Wednesday, April 9, 2014

உங்கள் ஊரின் பெயர் காரணம்?

ஊர்களின் பெயர்கள் காலந்தோறும் மாறிவருவது இயற்கை. படைப்யெடுப்புகளாலும், சமயத்தாக்கங்களாலும், மக்களின் பேச்சுவழக்கில் ஏற்படும் மாற்றங்களாலும் பெயர்கள் மாறிவிடும்.

ஈரோடை என்பது ஈரோடு என்றும்
குளிர் தண்டலை என்பது குளித்தலை என்றும்
ஆட்டு இடையன் பட்டி என்பது ஆட்டையாம்பட்டி என்றும்
இடையர் பாடி என்பது எடப்பாடி என்றும் இன்றும் வழக்கில் உள்ளமை காண்கிறோம்


 • கோயம்புத்தூர் என்ற பெயர் வந்ததற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள்.இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர்.அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் 
கோவன் புத்தூர் என்பது. அது மருவி கோயம்புத்தூர் என்று ஆயிற்று.
2. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.அவர்களில் மிகுந்த வலிமையான,பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் 
கோசம்புத்தூர்என்னும் இடத்தை தலைமையிடமாக

எங்கள் ஊரின் பெயர் கல்லல். கல்லாதவர்கள் இல்லாத ஊர் என்பதே கல்லல் என்று ஆனது.

1)பழனி - திருஆவினன் குடி

2)
திருசெந்தூர்திருச்சீரலைவாய்

3) திருச்செங்கோடு – திருக்கொடி மாடச் செங்குன்றூர்

4)
பழமுதிர் சோலை - பழம் உதிர் சோலை.

5)
திருத்தணி () திருத்தணிகை - செருத்தணிகை

6)
மதுரை - மாதுரையும் பேரூர்.

7)
செங்கல்பட்டு - செங்கழுநீர்ப்பட்டு!

8)
பூந்த மல்லி - பூவிருந்தன் வல்லி.

9)
ஆர்காட் - ஆருக் காடு!

10)
சோளிங்கர் - சோழ சிங்கபுரம்.

11)
சிவகங்கை - நாலுகோட்டை

12)
சிதம்பரம் - தில்லை

13)
தருமபுரி - தகடூர்

14)
ஷ்ரிவில்லிபுதுர் - நாச்சியார் கோயில்

15)
அருப்பு கோட்டை - திரு நல்லுர்

16)
எக்மோர் - எழுமூர்

17)
சிந்தாதரி பேட்டை - சின்ன தறிப் பேட்டை .

18)
கோடம்பாக்கம் - கோடலம் பாக்கம்

19)
திருவல்லிகேணி - திரு அல்லி கேணி

20)
பழவந்தாங்கல் - பல்லவன் தாங்கல்

21)
தாம்பரம் -  தர்மபுரம்

தமிழ் உறவுகளே உங்கள் ஊரின் பெயர்காரணமும், ஊரின் சிறப்பும் உங்களுக்குத் தெரியுமா? இங்கு மறுமொழியில் தெரிவியுங்கள். முடிந்தால் தமிழ்விக்கிப்பீடியாவில் பதிவு செய்யுங்கள். பதிவு செய்வது நமது கடமை.

23 comments:

 1. கல்லல் உட்பட தொகுப்பிற்கு நன்றி ஐயா...

  திண்டு போன்ற மலைக்கோட்டை கல் - திண்டுக்கல்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 2. ஈரோட்டுக்கு வெளியே ( எரோடு - சத்யமங்கலம் ) இரட்டை வாய்க்கால் எனும் இடம் உண்டு. அதனால்தான் இது இரு ஓடை,,,,ஈரோடை என ஒரு வழக்கு உண்டு.

  ருத்ரதாண்டவத்தில் பரமன் கால் பட்டு சிதறிய இரு ஓடுகள் விழுந்த இடம் ஈரோடு என்றும் சொல்லுவர் ( சிறிய ஓடு விழுந்ததால் - சித்தோடு, பேரோடு, வெள்ளோடு...இவை ஈரோட்டை சுற்றியுள்ள ஊர்கள் )

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. நிறைய ஊர்களின் பெயர் காரணங்களைத் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நத்தம் என்னும் எங்கள் ஊரின் பழைய பெயர் இகணைப்பாக்கம் என்று ஊரில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 5. நன்று சொன்னீர்
  தேனாம்பேட்டை - தெய்வநாயகம் பேட்டை
  வாரங்கல் - ஓரங்கல்
  பொள்ளாச்சி - பொழில் ஆட்சி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 6. நீங்கள் கல்லலா.. நான் பல முறை வந்துள்ளேன்... பதிவு மிகவும் அருமை ஐயா! எங்கள் ஊர் பெயர் மிரட்டுநிலை. கண்மாயின் அணை பெரிதாக (முரட்டாக) இருந்ததால் முரட்டணை ..மிரட்டணை... மிரட்டுநிலை என்றானது...

  http://pudhukaiseelan.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 7. அருமையான பதிவு
  நாளைய
  தலைமுறைக்காக
  ஊரமைந்த பொருள்
  உலகறியச் செய்ய
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 8. தசஞ்சை + ஆ+ ஊர் + தஞ்சாவூர்; புதுச்சேரி , புதுவை (சுருக்க வடிவு) ; சைலம் (வடசொல்) = மலை நாடு; திண்டு +கல் (கல்=மலை) > திண்டுக்கல் (சரியான வடிவே); நாமம் = அச்சம் தரக்கூடிய) நாமக்கல் = அச்சம் தரக்கூடிய மலை; ஆல்+காடு= ஆற்காடு; சிற்றம்பலம் >சிதம்பரம் (மருவல்) ஊர்ப் பொயர்களை ஆராய்தலில் வரலாற்றுப் பார்வையும், மொழியியல் பார்வையும் வேண்டும் - தாமரைக்கோ

  ReplyDelete
 9. தங்கள் வருகைக்கும் ஊர்ப்பெயர் விளக்கங்களுக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 10. திருவெறும்பூர் என்பது திரிபு. திருவெறும்பியூர் என்பதே சரி. எறும்பி என்றால் யானை. எறும்பியூர் ஈசனே என்றுதான் பாடினர் சைவக் குரவர். யானைகள் நிறைய வாழ்ந்த இடமாக இருக்கலாம்.

  ReplyDelete
 11. மிக அருமையான பதிவு.....பல ஊர்களின் பெயர் காரணத்தைத் தெரிந்து கொண்டேன். தங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்!!!!!

  ReplyDelete
 12. அருமை ஐயா.எனது ஊரின் பெயர் ஈரோடு.இதன் வரலாறு ஆரம்பத்தில் இரண்டு பெரிய ஓடைகள் இருந்தன.இவற்றை மக்கள் ஈரோடை ஈரோடை என்று அழைத்து பின்னர் ஈரோடு என்று மாறி போனது.மேலும் எங்கள் ஊரின் மற்றொரு பெயர் பெரியார் மாவட்டம் பிறகு தான் ஈரோடு என்று மாற்றப்பட்டது ஐயா.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பெரியார் என அறியப்படும் ராமசாமி பிறக்கும் முன்பிருந்தே ஈரோடைதான் அய்யா....

   Delete
 13. பாஸ்கரன்.முத்துApril 27, 2017 at 8:30 PM

  போலவே கவுந்தப்பாடி என்பது கோவிடந்தபாடி என்பதன் மருவு என்றே கருதுகிறேன்.

  ReplyDelete
 14. அருமை.............|o|

  ReplyDelete
 15. ஊர்களின் பழைய பெயர் வெளிப்பாட்டுக்கு நன்றி

  ReplyDelete