வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 2 ஜூன், 2014

யாழிசை போன்றது….


அன்பின் முகவரிகள் இன்று மாறிவிட்டன. இன்றைய மக்கள் தம் தகுதிக்கேற்ப பல்வேறு அறைகளோடு வீடுகளைக் கட்டுகின்றனர். தமக்கு ஒரு அறை தம் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை எனத் தந்து தம் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இன்றைய குழந்தைகளுக்கு விலையுயர்ந்த யாவும் எளிதாகவே கிடைத்துவிடுகின்றன.
இன்றைய பெற்றோர்களால் தம் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கி அன்பை காட்டமுடியவில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை.
தொலைக்காட்சி, இணைய சமூகத் தளங்களைக் கடந்து பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர் பிள்ளைகளிடமும் பேசுவதற்குக் கூட இன்று நேரம் கிடைப்பதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.


பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவை காடுகளில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழ்கின்றன. நாம் வீடுகள் என்ற பெயரில் நான்கு சுவர்களுக்குள் நம்மை சிறைப்படுத்திக்கொள்கிறோம். இதுபோதாதென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூகத் தளங்களிலும் நம்முடைய நேரத்தைத் தொலைத்துவிட்டு நம்மை நாமே தேடிக்கொண்டிருக்கிறோம். நம் வீடுகளில் நான்குபோ் இருந்தாலும் அவர்களிடம் பேசுவதைவிட உலகின் ஏதோ ஒரு நாட்டில் வாழும் முகம் தெரியாத நட்புடன் உரையாடுவதிலேயே பெருமிதம் கொள்கிறோம். 
தொலைக்காட்சிகளும், வானொலிகளும் எழுப்பும் விளம்பரக் கூச்சல்களையும் கடந்து இன்னும் சில வீடுகளில் மெல்லிய இனிய யாழிசை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அந்த வீடுகளில் இந்த தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் குறைவாகத்தான் உள்ளது.


சங்கஇலக்கியத்தில் அன்பு நிறைந்த ஒரு காட்சி..

தாயாகிய தலைவிதன்னுடைய புதல்வனை அணைத்தபடி படுத்திருக்கிறாள்..அவளை அணைத்தபடி பின்புறம் அவளின் முதுகை வருடியவாறு தலைவன்படுத்திருக்கிறான்இந்தக் காட்சியானதுபாணர்கள் இசைக்கும் யாழ்நரம்பினிடையே எழும் இசையைபோல இனிமையானதுஅதோடுநல்லபண்புடையதுமாம்.

புதல்வற் கவைஇய தாய்புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே

(ஐங்குறுநூறு-முல்லை:402)

-
பேயனார்.
பாடலின் வழியே...
இன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை போன்ற சங்க இலக்கியப் பதிவுகள், தென்றலைப் போல நம் மனதை வருடிச் செல்கின்றன..
அன்பு நிறைந்த வாழ்க்கை யாழிசையைப் போல இனிமையானது என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.


11 கருத்துகள்:

  1. அன்பின் முகவரிகள் இன்று மாறிவிட்டன.
    >>
    நிஜம்தான்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரர்
    நிச்சயமாக தொலைதொடர்பு சாதனங்கள் அன்பின் முகவரியை மாற்றி விட்டன. அன்பு என்றாலே என்னவென்று தெரியாத குழந்தைகளிடம் நாளை நாம் உயிர் இறக்கம், மனிதாபிமானம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியும். ஒரு சில இல்லங்களில் யாழின் இசை ஒலிப்பது ஆறுதல். சங்கப்பாடலும் காட்சியும் அருமை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. //இன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை போன்ற சங்க இலக்கியப் பதிவுகள், தென்றலைப் போல நம் மனதை வருடிச் செல்கின்றன..//

    உண்மைதான் முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  4. அன்பின் முகவரிகள் இன்று மாறித்தான் போய்விட்டன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  5. இலக்கியச் சுவை தந்த இனிய பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  6. உண்மையை உணர்த்தி நிற்கும் உன்னத பகிர்வு கண்டு உள்ளம்
    சிலிர்த்தது இன்று ! நாம் வாழும் இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ?????....
    இயந்திரம் போன்ற இந்த வாழ்க்கைச் சூழலில் எமக்கு மிஞ்சுவதெல்லாம்
    மன நோய் தவிர வேறொன்றும் இல்லை என்றே தான் உணரத் தோன்றுகிறது .
    அறிவியலும் விஞ்ஞானமும் அரசியலும் ஆசைகளும் முத்திப் போன
    இவ்வுலகில் அன்பு நிறைந்த இன்பமான வாழ்வை இனி எங்கு தேடியும்
    கிடையாது சகோதரா :( காலத்துக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு இதற்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க
    நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு