வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 25 டிசம்பர், 2014

கணிதப்பெண்ணுக்கு வந்த காதல் கடிதம்

கணிதமேதை இராமனுசம் அவர்களின் பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை நினைவுகொள்ளும் விதமாக கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய மாணவர்கள் கணிதத்தை மனப்பாடம் செய்துதான் படிக்கிறார்கள்!

இல்லை இல்லை புரிந்துதான் படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.

தமிழில் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது மரபாகும். அதுபோல இந்த மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை,  கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

அன்பு நண்பர்களே நான் விரும்பிய அந்தக் கவிதை இதோ உங்களின் மேலான பார்வைக்காக. இந்த கவிஞரை ஊக்குவிப்போம் வாருங்கள்..
மு.கங்கா
இளம் கணிதம் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
திருச்செங்கோடு.

கணிதமே நீ மட்டும் பெண்ணாக இருந்தால்......

அழகின் வடிவமாய் நீ ஒரு ஜியோமெட்டரி
எல்லையற்ற அன்பினால் நீ ஒரு இன்பினிட்டி
வரவு செலவுக் கணக்கிற்கு நீ ஒரு அரித்மெடிக்
வேரியபிலின் உறவுக்கு பாலமாய் நீ ஒரு பங்சன்
வாழ்வின் வெற்றிக்குத் திசைகாட்டியாய் நீ ஒரு வெக்டர்
அறிவியலைத் தத்தெடுத்து வளர்க்கும் கணிதமே
நீ மட்டும் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால்
நான் உன்னையே காதலித்து மணந்திருப்பேன்!

என் ஆசைப்படி கணிதமே நீ பெண்ணாகப் பிறந்துவிட்டாய். அதனால் உனக்காக நான் எழுதிய காதல் கடிதம் இதோ.......


உன் கூந்தலினை
ஈக்வேசனாக எழுத முயற்சித்தேன் முடியவில்லை!
உன் அழகை வருணிக்க
பார்முலாவைத் தேடினேன் கிடைக்கவில்லை!
உன் முக்கோண மூக்கினிலே ஒற்றைக்கல் மூக்குத்தி ஒளிவீசுதே!

நீ புன்னகைக்கும்போது தோன்றும் கண்ணக்குழியை
மையமாக வைத்து 6 சென்டிமீட்டர் ஆரத்தில் வரையப்பட்ட
வட்டவில்தான் உன் புருவங்களோ!

என் இதயத்துடிப்பைக் கேட்டுப்பார்
அது தீட்டா தீட்டா என்றே துடிக்கும்!

நீ யுனிக் செக்சனாக இருப்பதால்
என் போக்கசு முழுவதும் உன் மீதுதான்.

உன் விழிகள் இரண்டும் எலிப்சு
உன் பொற்பாதங்கள் இரண்டும் பாரபோலா
உன் மெல்லிடையோ கைபர்போலா

எம்டி செட்டாக இருந்த என் இதயத்தை
உன் நேச்சுரல் நம்பர்களால் நிரப்பினாய்!

உன்னை நினைத்துப் பார்க்கையில் தியரம் கொட்டுது
அதை எழுத நினைக்கையில் எண்கள் முட்டுது!

புதிரானவர்கள் என்பதால்தான் நீ பெண் பிறவி எடுத்தாயோ?
நிஜத்தில் நீ ரியலாக என்னைவிட்டுப் பிரிந்தாலும்
என் நினைவுகளில் என்றும் நீ காம்ளெக்சாக இருக்கிறாய்!

என் உணர்வுகளை வார்த்தைகளில் கூறத்தெரியவில்லை

அதனால் எண்களால் சொல்கிறேன்  143! 

18 கருத்துகள்:

  1. இந்த மாணவர் சினிமாவுக்கு பாடல் எழுத போகலாம் போலிருக்கிறதே! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. கணிதத்தை கவிதைக்குள் அடைத்த
    தங்களின் மாணவி பாராட்டிற்கு உரியவர்
    பாராட்டுவோம்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. மு. கங்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அட! மிகவும் வியக்க வைத்த கவிதை! அதுவும் எல்லாம் சொல்லி விட்டு இறுதியில் //அதனால் எண்களால் சொல்கிறேன் 143! // அருமை அருமை! ரசித்தோம்....வியப்பு அடங்க பல மணி நேரங்களாகியது! மு கங்காவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

    அன்புடனும் நட்புடனும்,

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் முனைவரே...

    பதிலளிநீக்கு
  7. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு