வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 மார்ச், 2016

அறிவுடையோரிடமும் அறியாமை இருக்கும்.



அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு. - 503


அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இருக்கும்

நாம் அறிவுடையவராக இருந்தால்,
நம் அறியாமையை அறிந்துகொள்(ல்)வோம்

3 கருத்துகள்:

  1. அறிதோறும் அறியாமை கண்டற்றே!
    அறிமடமும் சான்றோர்க்கு அணியன்றே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே..
      தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

      நீக்கு
  2. சரிதான் முனைவரே. கற்றது/அறிந்தது கைமண் அளவு. கல்லாதது/அறியாதது உலகளவாயிற்றே...

    பதிலளிநீக்கு