திங்கள், 30 மார்ச், 2009

பார்வையாளர் மதிப்பீடு


தங்கள் வலைப்பதிவினைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் பற்றிய மதிப்பீடு தங்கள் வலைப்பதிவினை மேலும் பயனுள்ளதாக ஆக்க துணைபுரியும்.வலைப்பதிவுக்கு வரும் பார்வையாளர்களைப் பற்றிப் பல இணையதளங்கள் இலவச மதிப்பீடு சேவையை வழங்கிவருகின்றன.அவற்றுள், (http://alexa.com//" ),(http://addfreestats.com//" ),
(http://www.google.com/analytics///" )
ஆகிய இத்தளங்களின் சேவை குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.
இத்தளங்களுக்குத் தங்கள் கூகுள் பயனர் கணக்கின் வாயிலாகச் சென்று ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.பின் அவர்கள் தரும் ஜாவா ஸ்கிரிப்டை தங்கள் வலைப்பதிவில் ஆட் காட்கட் பகுதியில் ஒட்டவேண்டும். பின் வழக்கம் போல தங்கள் கூகுள் கணக்குப் பகுதியில் சென்று பார்த்தால்,ஜிமெயில்,பிளாக்கர்.ஆர்குட் போல அலெக்ஸா,ஆட்பிரி,கூகுள் அனாலடிக்ஸ் என ஒரு பகுதி இருக்கும் தங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது போல அதன் உள்நுழைந்து பார்த்தால் அங்கு, தங்கள் வலைப்பதிவை எந்த குறிச்சொல் கொடுத்துப் பார்த்தார்கள்,எவ்வளவு நேரம் பார்த்தார்கள், எந்தப்பக்கத்தை பார்த்தார்கள்,அதனை எவ்வளவு நேரம் பார்த்தார்கள்,போன்ற பல தள மதிப்பீட்டு அறிக்கைகளை வரைபடங்களோடு காண இயலும்.2 கருத்துகள்: