வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, November 19, 2012

பொம்மைத் துப்பாக்கி ரூ35(நான் விஜய் இரசிகனுமல்ல, எதிரியுமல்ல)
விஜய் இரசிகர் ஒருவர் துப்பாக்கி படம் பார்த்துவிட்டு வந்து தலைகால் புரியாமல்
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்துக்கொண்டிருந்தார். படம் அப்படியிருக்கு, இப்படியிருக்கு.. அடுத்த 007 தலைவர்தான். அடுத்த ஆட்சியப் பிடிக்கப்போறது நாங்கதான் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

படம் வெளியான உடனேயே முதல்காட்சியை ரூ200 செலவுசெய்து பார்த்துவந்தேன் என்று வேறு பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். மேலும் இரண்டுநாட்களுக்குப் பிறகு ரூ35க்கு துப்பாக்கி டிவிடி வாங்கிவிட்டேன் என்று சொன்னார். நான் கேட்டேன்,
எம்பி3யா? என்று..
இல்லை திரைப்படம்தான் என்றார்.
படம் வெளியாகி இரண்டுநாள்கூட ஆகலயே அதுக்குள்ளே திருட்டுடிவிடி வந்திடுச்சா என்றேன்.
அவர்சொன்னார்...

இணையத்தில் உடனுக்குடன் பதிவேற்றிவிடுகிறார்கள். நான் திரையில் பார்த்தால்தான் முழுநிறைவு இருக்கும் என்றுதான் திரையரங்கிற்குச்சென்றேன் என்றார்.
நீங்கதான் திரையரங்கிலேயே சென்று துப்பாக்கி படம் பார்த்திட்டீங்களே பிறகு ஏன் துப்பாக்கி டிவிடி வாங்கினீங்க என்று கேட்டேன்.

அவர்சொன்னார் என்னசார் அப்படிக்கேட்டிட்டீங்க..
ஒருதடவை மட்டும் பார்க்கவேண்டிய படமா? இது திரும்பத்திரும்பப் பார்க்கனும்ல அதான் வாங்கினேன் என்றார்.
நான் கேட்டேன்..
நண்பரே..
உங்க தலைவர் படத்தில் தீவிரவாதிகளைக் கூடப் பிடிச்சிடுறாரு ஆனா அவரோட படத்தை திருட்டு டிவிடியாப் போடற கும்பல்ல ஒருத்தனக் கூடப் பிடிக்கமுடியலையே.. உங்க தளபதி கையில வைச்சிருக்கிறது பொம்மைத் துப்பாக்கிதானே என்று கேட்டேன்..

அவர் கொஞ்சம் யோசித்து..
அது அப்படியில்லசார்..
திரையரங்குவந்து படம் பார்க்கவசதியில்லாதவங்களும் இந்தப்படத்தைக் குறைஞ்ச செலவுல பார்க்கனும் என்றுதான் எங்க தலைவர் அதைக் கண்டுகாம இருக்கார்.என்றார்..
எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா..

திரைப்படம் என்பது மாய உலகம். கானல் நீர் போன்றது.
அதில் காண்பதெல்லாம உண்மை என்று எண்ணிக்கொண்டு..
விளக்கின் சுடரைநாடிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய்..
தம் பணத்தையும், பொன்னான நேரத்தையும் செலவுசெய்வதோடு சண்டையிட்டுக்கொள்கிறார்களே என்ற வருத்தத்திலேயே இவ்விடுகையைப் பதிவுசெய்கிறேன்.

18 comments:

 1. நல்லாயிருந்தது முனைவரே..சிவப்பெழுத்துகள் உண்மைதான்..ஹாஹாஹா

  ReplyDelete
 2. இவைகளை நம்பித் தான் வசூலே...!

  ரசிகர்கள் அல்ல... வெறியர்கள்...
  tm2

  ReplyDelete
 3. விஜய் ரசிகர்களே இப்படி செய்கிறார்களா????

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆமாம்..

   நேற்று பேருந்தின் படிக்கட்டில் இரு கும்பல் ஒருகுழு விஜய் இரசிகர்கள்.. இன்னொரு குழு சூர்யா இரசிகர்கள்..

   பெரிய சண்டையே நடந்தது

   அப்படித்தான் இருக்கிறார்கள் அன்பரே

   Delete
 4. சில படங்களின் டி.வி.டி.படம் வெளியாகும்போதே வந்து விடுகிறது.

  ReplyDelete
 5. அது அப்படித்தான் தனக்கென வருகிற போது/

  ReplyDelete
 6. அதுக்குதான் வழி கண்டுபிடிச்சிட்டாங்களே குணசீலன்

  1000 நகல் முதல் 3000 நகல் வரை

  விஜய்க்கு 1000 நகல்

  ரஜினிக்கு 3000 நகல்

  10 நாள் ஓடினா போதும் லாபம் பார்த்துரலாம்.

  இன்னும் நீங்க 1980 ல் இருக்கீங்க. அப்போ 40 பொட்டி ஊர் ஊராக போகும்

  காலம் மாறிடிச்சு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அன்பரே காலத்துக்கு ஏற்ப அவர்கள் மாறிவிட்டார்கள்.

   Delete
 7. பொம்மைத் துப்பாக்கியின்
  உண்மை நிலைமையைப்
  படம் பிடித்திருக்கிறீர்கள் முனைவர் ஐயா.

  ReplyDelete
 8. அண்ணா....பொம்மைத் துப்பாக்கி35 இடுகைத் தொகுப்பு எண்ணமெனும் துப்பாக்கி கொண்டு சிந்தனையெனும் பட்டாசை வெடித்தது நன்றாகவுள்ளது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அண்ணா....பொம்மைத் துப்பாக்கி35 இடுகைத் தொகுப்பு எண்ணமெனும் துப்பாக்கி கொண்டு சிந்தனையெனும் பட்டாசை வெடித்தது நன்றாகவுள்ளது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணி.

   Delete
 10. சரியான பதிவு..பொழுதுபோக்காகப் பார்த்தால் பரவாயில்லை, ஏதோ அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாக நடிகர்களை பூஜை செய்துகொண்டு..."முன்னேற வழியப் பாருங்கப்பா " என்று சொல்லும் பதிவு..
  //உங்க தலைவர் படத்தில் தீவிரவாதிகளைக் ...// அருமையான மடக்கல்!

  ReplyDelete