பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 22 ஜூன், 2026

சூழ்நிலைகள் I சான்றோர் சிந்தனை I வானொலி உரை I

வாழ்க்கை என்பது நமக்கு நடப்பவற்றில் 10 சதவீதமும், அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் 90 சதவீதமும் அடங்கியுள்ளது.,

வயது, அனுபவம், இடம், காலம், மனநிலை, சுற்றத்தார் சார்ந்து

சூழ்நிலைகளும் அதை எதிர்கொள்வோர் இயல்புகளும் மாறுகின்றன.

வாழ்க்கை  மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பார் கன்பூசியஸ்.

சவாலான சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவோர்,

மன உறுதியுடையவர்களாகவும், திட்டமிடும் பண்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். எதிர்மறையான சூழலில் பதற்றமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டு, தகுந்த முடிவுகளை எடுத்து, இலக்கை அடைவர்.

இன்பமான சூழல்களில் சிலர் நன்றியுணர்வையும், பணிவையும் வெளிப்படுத்துவர்.

துன்பமான சூழல்களில் சிலர், பொறுமை, துணிவு, விடாமுயற்சி, தன்மானம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்துவர்.

எல்லா சூழல்களும் நம் வாழ்க்கையில் நம்மை மேம்படுத்துகின்றன.

நம் அறிவைக் கூர்மைப்படுத்துகின்றன. அனுபவத்தை வழங்குகின்றன.