 |
| பாய்ச்சல் |
வேக வேகமா, உணவைக்கூட வேகாம வேகாம சாப்பிட்டு எங்கே ஓடுறோம்...
நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..
அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்.
அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்பவர்கள் இருந்தார்கள். ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்பவர்களை அட்டாவதாணி என்றும் ஒரே நேரத்தில் நூறு செயல்கள் செய்தவர்களை சதாவதாணி என்றும்
அழைத்தார்கள்.
உங்கள் வேலையை வேகமாக முடிக்க ஒரே வழி
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வது
என்றொரு பொன்மொழி உண்டு. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கு சிந்திக்கத்தகதாகவுள்ளது.
என்னுடைய அனுபவத்தில் ஒருவேலையை விரைவாக முடிக்க ஒருநேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்கிறேன்.
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் பாய்ச்சல் என்றொரு கதை நினைவுக்கு வருகிறது...
மரத்தை வெட்டி
வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும்
விறகுவெட்டிக்குப்
பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.
காட்டுக்குள்
நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப்
பறந்துபோனது.
'இந்த மரங்கொத்தியைப்
பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது
அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?' என்று கயிற்றைப்
பார்த்துக் கேட்டது கோடரி.
'மரங்கொத்தியால்
முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச்
சொல்கிறாய்?'
கயிறு
சொன்னது :-
'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை'
தொடர்புடைய இடுகை