பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
காசியானந்தன் நறுக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசியானந்தன் நறுக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 10 அக்டோபர், 2012
தமிங்கிலம் (கவிஞர் காசியானந்தன்)
Labels:
அன்றும் இன்றும்,
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 14 மார்ச், 2012
காலம் (காசியானந்தன் நறுக்குகள்)
காலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம்.
ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம்.
காலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.
காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது!
காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது!
காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!!
மேலும் சுவாசிக்க.........
Labels:
அனுபவம்,
காசியானந்தன் நறுக்குகள்,
கால நிர்வாகம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 4 ஜனவரி, 2012
லன்டன் டங்க்!
மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டும்தானா.?
ஒரு இனத்தின், பண்பாட்டின், அனுபவத்தின், அறிவின்
குறியீடல்லவா மொழி...
அறிவின் மொழி என்று எதுவும் உள்ளதா?
மொழிகளில் ஏது ஏற்றத்தாழ்வு..
சில மொழிகளைப் பேசும் போது மட்டும் சிலர் பெருமிதம் கொள்வது
ஏன்..?
சில மொழிகளைப் பேசும் போது மட்டும் மனம் வாடி தாழ்வுமனம்
கொள்வது ஏன்?
நோயல்லவா இது..
ஏன் இருமொழிகளையும் ஏமாற்றி நம்மை நாமும் ஏமாற்றிக்கொள்ளவேண்டும்..
இதோ உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிந்தனை ஒன்று..
காய்ச்சல் என்று சொல் ஜூரம் என்று சொல்லாதே
எலும்புருக்கி என்று சொல் சயரோகம்
என்று சொல்லாதே
எனத் தமிழறிவூட்டி மறைமலையடிகள் முதல்
பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் வரை உணர்ச்சியற்ற
தமிழ்மாடுகளுக்கு முறையான மேய்ச்சல் பழக்கினார்கள்.
இன்று..
தமிழ்நாட்டில் ஒருவகைக் கண்நோயை “மெட்ராஸ் ஐ“ என்கிறான். Madras
Eye என்கிறானே இவனுக்கு ஏன் London
Tongue என்பதுதான் புரியவில்லை.
நோயைக் கூடத் தமிழில் சொல்லமுடியாத நோய் தமிழனை அழித்துக்கொண்டிருக்கிறது.
இந்தநோய் உங்களுக்கு உள்ளதா?
தொடர்புடைய இடுகைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 26 டிசம்பர், 2011
மாடு
முதுகெலும்பை மறந்த மனித மந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு நினைவுக்கு வரும் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.
தொடர்புடைய இடுகை.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 13 டிசம்பர், 2011
தளிர்ப்பு
தன்னம்பிக்கை தரும்
கவிஞர் காசியானந்தன் அவர்களின் குறுங்கதை ஒன்று..
இலையுதிர் காலம்
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
உன் இலைகள் விழுந்துகொண்டே இருக்கின்றன.
உன்னைப் பார்த்தால்
அழவேண்டும்போல் இருக்கிறது... என்று..
ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது..
“நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்.”
நிமி்ர்ந்தே நின்றது மரம்.
அதுசொன்னது...
“விழுவதற்கெல்லாம்
அழுவதற்கில்லை”
Labels:
அனுபவம்,
காசியானந்தன் நறுக்குகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 7 நவம்பர், 2011
அடக்கம்.
சுதந்திர தினம்
குடியரசுதினம்
தீபாவளி
பொங்கல்
என எல்லா விழா நாட்களும் இப்போது தொலைக்காட்சிகளிலேயே கொண்டாடப்படுகின்றன.
இராசிபலன்கள், விளம்பர மூளைச்சலவைகள், பொய்யான செய்திகள், சிறப்புத் திரைப்படங்கள், பட்டிமன்றங்கள் என இவற்றுக்கே இன்றைய மக்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
அதிலும் கிரிக்கெட் என்றால் ஊரடங்கு உத்தரவு போட்டதுபோல தொலைக்காட்சிப் பெட்டிகளிலேயே மக்கள் அடக்கமாகிவிடுகின்றனர்.
வீட்டுக்கு விருந்தினர் வந்தால் கூட அவர்களிடம் பேச விளம்பர இடைவேளைகளையே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்..
தொடர் நாடகம் பார்த்தல் இதை விடக் கொடுமையானது. தமிழகத்தில் அரசு கேபிள் என்ற சட்டம் கொண்டுவந்தபோது பல தனியார் தொலைக்காட்சிகள் தடைசெய்யப்பட்டன. இச்சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எங்களால் தொடர்நாடகம் பார்க்கமுடியவில்லை என்று புகார் மனு கொடுத்த புதுமைபெண்கள் வாழும் காலம் இது...
இந்த கொடுமைகளை எண்ணும்போது கவிஞர் காசியானந்தன் அவர்களின் இந்த நறுக்கு தான் என் நினைவுக்கு வருகிறது.
தொடர்புடைய இடுகைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 2 அக்டோபர், 2011
மரங்களும் நானும் (450வது இடுகை)
நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!
மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!
கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!
வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!
மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!
மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!
நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..
தமிழ் உறவுகளே நான் வாங்கிய பட்டங்களெல்லாம் எனக்கு வேலை மட்டுமே வாங்கிக்கொடுத்தன..
இயற்கைதான் எனக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்தது..
450 வது இடுகை வெளியிடும் இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளில் வருகைதரும் அன்பு உறவுகளே “இயற்கையைப் பாதுகாப்போம்“ என்னும் சிந்தனையை முன்வைத்து..
நான் விரும்பி எழுதிய சில இயற்கை சார்ந்த இடுகைகளைத் தங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்...
3. சந்தன மரம்
7. இயற்கைக்கும் மனிதனுக்கும் 20/20
தங்கள் தொடர் வருகைக்கும்,
வாசித்தலுக்கும்,
புரிதலுக்கும்,
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும்,
ஆற்றுப்படுத்தலுக்கும்,
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!
தங்கள் தொடர் வருகைக்கும்,
வாசித்தலுக்கும்,
புரிதலுக்கும்,
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும்,
ஆற்றுப்படுத்தலுக்கும்,
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!
Labels:
450வது இடுகை,
அனுபவம்,
இயற்கை,
கவிதை,
காசியானந்தன் நறுக்குகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
சொரணை (காசியானந்தன் கதை)
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தம் கவிதைகளால் உலகத்தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராவார். இவர் கவிதைகளில் உள்ள வேகம் சற்றும் குறையாமல் கதையும் சொல்லும் திறன் கொண்டவராவார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று இன்றைய சிந்தனைக்காக...
சொரனை
நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம்
தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
“மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே – பார்... பார்... அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள் என்றது அறுகம்புல்.
நெருஞ்சி சூடானது.
“என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம்
நான் தாங்கி்க் கொள்ளவேண்டுமாக்கும்..“
நெருஞ்சிப்புல் சொன்னது..
“வதைபடுவதை விட
புதைபடுவது மேல்“
தொடர்புடைய இடுகை.
அஃறிணை பேசுகிறேன்!
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 13 ஆகஸ்ட், 2011
நாற்காலி
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 21 ஜூன், 2011
நிலவு (காசியனாந்தன் நறுக்கு)

புராணம் வேறு வரலாறு வேறு!
இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
புராண காலத்தில் வாழ்பவர்களால் வரலாறு படைக்க முடியாது என்பதை உணர்த்தும் எனக்குப்பிடித்த நறுக்கு.
ஆக்கம் - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்.
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 6 ஜூன், 2011
இருள் - காசியானந்தன் நறுக்குகள்
ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர்கள் விளக்கேற்றும் போது கவிஞரின் இந்த நறுக்கு தான் என் நினைவுக்கு வருகிறது.
இருள் நீக்கும் விளக்கின் வெளிச்சம் ஏற்றுபவர்களுக்கு மட்டும்தானா?
இருள் நீக்கும் விளக்கின் வெளிச்சம் ஏற்றுபவர்களுக்கு மட்டும்தானா?
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 17 மே, 2011
ஒரு நாட்டை வெல்ல..
ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
அந்த நாட்டின் மொழியை அழி - செருமானியப் பழமொழி.
இப்பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது.
காலந்தோறும் தமிழ்மொழியை அழிக்க நடந்த முயற்சியிலேயே தமிழன் தொலைந்துபோனான்.
தாய்மொழிதான் ஒரு மனிதனின் அடையாளம் என்பதை உணர்வோம்.
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 9 மே, 2011
மந்தை
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு இது.
அரசியல் கூட்டங்கள்
வழிபாட்டு கூடல்கள்
விளையாட்டுத் திடல்கள்
இங்கெல்லாம் மக்களின் பெரிய கூட்டத்தைக் காணும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். எவ்வளவு பெரிய கூட்டம் என்று...
நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் தகுதியிருந்தும் சிந்திக்காத...
கைதட்ட மட்டுமே தெரிந்த மக்கள் கூட்டத்தைக் காணும்போது..
கவிஞரின் இந்தக் கவிதை எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது என்பது புரிகிறது.
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 27 ஏப்ரல், 2011
தமிழ்நாட்டின் அடையாளம்.

எனக்குப் பலநேரங்களில் நாம் எங்கு இருக்கிறோம்..?
தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா..?
என்ற ஐயம் வந்துவிடும்.
அப்போதெல்லாம் என் கண்ணில் படும் “தமிழ் வாழ்க“ என்ற பெயர்ப்பலகைகள் தான் நாம் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை எனக்கு அறிவுறுத்தும்..
இப்படி எழுதி வைத்தால் தான் தமிழ் வாழுமா..?
எனது அரசுக்கு ஏன் இப்படியொரு சிந்தனை வந்தது..?
என நான் பல முறை சிந்தித்துப்பார்த்திருக்கிறேன்..!
நாம் வாழ்வது தமிழ்நாடு என்ற சிந்தனை தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு குறிப்பாக வணிகத்துறையினருக்கு வரவேண்டும் என்பதால் தான் அவர்கள் கண்ணில் அடிக்கடித் தெரியுமாறு இவ்வளவு பெரிய பலகை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிந்தனை...

பிரான்சு நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது!
செருமானிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது செருமனி தெரிகிறது!
உருசிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது உருசியா தெரிகிறது!
தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது இங்கிலாந்து அல்லவா தெரிகிறது!
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் ஒரு நிறுவனம் கோ-ஆப்-டெக்ஸ் எனத் தன் பெயரை வைத்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்துவது ஆகாதா..?
அதே கூட்டுறவு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு “வானவில்“ அழகாய் இருக்கிறது.

“ஆவின் பால்“ பாலாகவும் சுவைக்கிறது – தமிழாகவும் இனிக்கிறது.
Bakery என்பதை பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்களால் “பேக்கரி என்று எழுதினால் தமிழாகிவிடாது.
பேக்கரி என்னும் ஆங்கிலச் சொல்லை எரித்து “அடுமனை“என தனித்தமிழில் பொறித்திட வேண்டும்.
ஆங்காங்கே சில வியப்படைய வைக்கும் தமிழர்களையும் பார்க்கமுடிகிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழ் புரியாதா..?
கடைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் என்ன..?
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 23 ஏப்ரல், 2011
சாமி (நறுக்குகள்)

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் கவிதைகளுள் என்னைக் கவர்ந்த கவிதை இது.
சிந்திக்க வைத்த கவிதை.
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 16 ஏப்ரல், 2011
கொலை (நறுக்குகள்)

(கடவுளின் பெயரால் மக்கள் செய்யும் சில காரணமற்ற அல்லது காரணம் தெரியாத கண்மூடித்தனமான செயல்களைக் காணும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.)
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 26 மார்ச், 2011
தேர்தல்(நறுக்கு)

தேர்தல் வந்தால் தான் இந்த அரசியல்(வியா)வாதிகளுக்குக் குடிமக்கள் நினைவுக்கு வருகிறார்கள்...
இன்றைய அரசியல் நாடகங்களைப் பார்த்தவுடன் என் நினைவுக்குவந்த.......
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு...
மாலை
வளையல்
மூக்குத்தி
பொன்னான
எதுவுமே
இல்லை
எங்கள்
குடிசையில்
அவன்
சொல்கிறான்
இருக்கிறதாம்
எங்களிடம்
“பொன்னான
வாக்குகள்”
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
