பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
மாணவர் படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர் படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016
சுதந்திர தின சிறப்புக் கவிதை
Labels:
கவிதை,
சிறப்பு இடுகை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 17 அக்டோபர், 2015
கண்ணதாசன் ஓவியம்
Labels:
ஓவியம்,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 25 டிசம்பர், 2014
கணிதப்பெண்ணுக்கு வந்த காதல் கடிதம்
கணிதமேதை இராமனுசம்
அவர்களின் பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை நினைவுகொள்ளும் விதமாக
கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய மாணவர்கள்
கணிதத்தை மனப்பாடம் செய்துதான் படிக்கிறார்கள்!
இல்லை இல்லை புரிந்துதான்
படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு நடுவராக
இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது
என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.
தமிழில் பிள்ளைத்தமிழ்
போன்ற இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது
மரபாகும். அதுபோல இந்த மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை, கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு எந்த அளவுக்கு
ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
Labels:
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
ஆசிரியர் தின சிறப்புக் கவிதை
ஆசிரியர்களைப் போற்றுவோம்..
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!
நீ..... உன் வாழ்நாளில்
வேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்!
வேடிக்கையாகப் பேசும் ஆசிரியர்கள்
உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல
உன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..
சிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்!
எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக அல்ல!
வாழ்நாளில் நீ
எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத்தான்.
சில ஆசிரியர்கள் சொன்னதையே
மீண்டும் மீண்டும் சொல்வது நீ
தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல!
நீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்!
இந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான
ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..
கவிதையை எழுதியவர்.
வ. கீர்த்தனா
முதலாமாண்டு கணிதவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
Labels:
ஆசிரியர்தினம்.,
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 18 ஆகஸ்ட், 2014
கனவுகள் மெய்ப்பட...
பாரத மாதா!
உன் முகத்தில்
அரிதாரம் பூசப்படலாம் – இல்லை
அமிலமும் வீசப்படலாம்..
அச்சம் கொள்ளாதிரு!
உன்னுள்
போர்கள் தொடுக்கப்படலாம்
– இல்லை
பூக்களால் புன்னகைக்கப்படலாம்
பொறுமை கொண்டிரு!
முன்பொரு நாள்
முன்னோர்கள் இழைத்த
முயற்சியால்
இன்றுவரை முயலாது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!
முடங்கிய சிங்கங்களாய்....
எங்கள் கனவுகள்
என்றுமே
கசக்கி எறியப்பட்ட
காகிதங்களாய்
கண்டுகொள்ளப்படுவதில்லை
யாராலும்........
உயிரைக் கிழிக்கும்
ஓசைகளும்
எங்கள் உணா்வை
அழிக்கும் பாசைகளும்
ஒன்றா.... இரண்டா....
என் கனவுகளில்,
பாரத மாதா..
நீா் கொணா்ந்த
சுதந்திர மாலை
எங்கள் கண்ணீரின்
வெப்பத்தாலே கருகிவிட்டது!
நீர் அளித்த எம்
உயிர்த்துளி
எங்கள் உணா்வுகளின்
வலியாலே உலர்ந்துவிட்டது...
முதல்முறையாய்
நானழுதேன்
சில முகமற்ற மனிதர்களின்
முறையற்ற செயலுக்காக...
அன்று மட்டும்
என் கண்களுக்குள்
ஏனோ வியர்வை!
அம்மானுடா்கள்
அதிசயப் பிறவிகள்!
தங்கத்திலே தாரூற்றினார்கள்!
செல்வாக்குப்
பெற்ற இவ்வுலகிலே
நாங்கள் ஏனோ செல்லாக் காசுகள்!
வறுமை எம்முள்
வாழ்ந்து வயதாகிவிட்டது!
எங்கள் திறமையும்
தீர்ந்துவிட்டது!
சுதந்திர வீணையை
வாசிக்கமுடியாத
தொழுநோயாளிகள்
நாங்கள்!
திலகரே!
சுதந்திரம் எனது
பிறப்புரிமை
என்பது சும்மா!
படைப்பாக்கம்
சு.லாவண்யா
இளங்கலை வேதியியல்
இரண்டாமாண்டு.
கே.எஸ்.ஆா் மகளிர்
கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு
Labels:
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 31 ஜூலை, 2014
துளிப்பாக்கள்
வாா்த்தைகள்
உன்னுடன் பேச என் வாா்த்தைகள்
நான் நீ என சண்டைபோட்டுக்கொள்கின்றன
ஆனால் உன்னைப் பார்க்கும்போது
என் மௌனம் மட்டுமே எப்போதும் முந்திக்கொள்கிறது!
---- ---- -----
அழுகை
பிறக்கும்போதும் கலவரம்
இறக்கும்போதும் கலவரம்
இதுவே வாழ்வின் நிலவரம்!
----- --- -----
பிாிவின் வலி
மரணத்தினால் ஏற்படும் வலியைவிட
.
பிாிவினால் ஏற்படும் வலி கொடுமையானது
மரணம் ஒரு நிமிட வலியைத் தரும்
பிாிவு மரணத்தையே வலியாகத் தரும்!
----- ---- -------
படைப்பாக்கம் - இளம் கவிஞர் மு.தமிழ்மணி
வேதியியல் முதலாம் ஆண்டு
கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி
திருச்செங்கோடு
Labels:
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 19 ஜூலை, 2014
உயிருள்ள ஓவியம்
Labels:
ஓவியம்,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 6 ஏப்ரல், 2014
பிறந்தநாள் பரிசு
வாழ்த்தும் மனங்கள்
எல்லையில்லா
நுண்ணறிவால்
வளர்ந்தவரே வணக்கம்!
ஏட்டு நூலோடு
சுயசிந்தனையையும் வளரவிட்டு
உள்ளம் மகிழ்ந்தீர்…
பலமொழிகளோடு
தமிழ்மொழியும்
கற்கவேண்டியதுதான்
என்பதை உணரவைத்தீர்….
காலம் காற்றடிக்கும்
நேரத்தில் கடந்து
எல்லையற்ற அளவில்
வளரப்போகிறது என்பதைப் புரியவைத்தீர்…
ஒவ்வொரு பிறப்புக்கும்
அர்த்தமுண்டு
அதற்கும்
சில கடமைகளுண்டு
என்பதை விளங்கவைத்தீர்…
இரண்டடி குறளுக்கும்
இணையில்லாப் பொருளுண்டு
என்பதை
நிகழ்கால விளக்கத்துடன் விளக்கினீர்...
இப்படி உங்களிடம் கற்கவேண்டியது
அதிகம்தான்…
இருந்தபோதும்
காலம்தான் எங்களைக்
கடத்திச் செல்கிறதே…
இருந்தாலென்ன?
உண்மை அன்பிற்கும்
வாழ்த்தும் மனதிற்கும்தான்
வயது பொருட்டில்லையே…
அதனால்தான் குழந்தை உள்ளத்துடன்
நேச நண்பரான உம்மை
கவிதையால் அர்ச்சித்து
வாழ்த்து தொழுகிறோம்
பல்லாண்டு வாழ்க..!!!!
இப்படிக்கு
மாறாத நேசமுடன் உம் வணிகவியல் மாணவிகள்
கவிதை ஆக்கம் – இளம்கவிஞர் ர.பாரதி
தமிழறிஞர்கள் பிறந்தநாளை
மட்டுமே
நினைவு
வைத்திருக்கும்
நான்
இன்று
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
பிறந்தநாள்
என்று
அதற்கான
தரவுகளைத்தேடிக்கொண்டிருந்தேன்
இன்று
எனது
பிறந்தநாள்
என்பதை
எனக்கு நினைவுபடுத்திய
எனதருமை
மாணவச்
செல்வங்களுக்கு
மனம் நிறைந்த
நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
Labels:
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 20 பிப்ரவரி, 2014
உயர்ந்த உள்ளம்
Labels:
கதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 24 அக்டோபர், 2013
தமிழ்த் தென்றல் ஓவியம்
தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் ஓவியம்.
| ப. பூங்கொடி வணிகவியல் முதலாமாண்டு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு |
Labels:
ஓவியம்,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 20 அக்டோபர், 2013
வடலூரும் வார்தாவும்
| மு.சௌமியா வணிகவியல் முதலாமாண்டு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு |
அரசியல் இருட்டை
அகற்ற ஓர் காந்தி
சமுதாய இருட்டைச்
சாய்க்க ஓர் “சோதி“
எங்கள் சரித்திர
வானின்
சகோதர ஒளிகள்!
ஒருவரோ
மருவூரில் பிறந்தும்
மருவுதலை விலக்கித்
துறவூரில் வசித்த
தோன்றல்!
மற்றவரோ-
போர்ப்பந்தா் தனில்
பிறந்தும்
போர்வெய்யில் பொழுதுகளில்
நீர்ப்பந்தல் வேயும்
நிழல்மேகம் ஆனவர்!
உப்புவரியை எதிர்த்தார்
ஒருவர், பசித்தவரின்
உப்புவரிக்கண்ணீரை
ஒருவர் துடைத்துவைத்தார்
வள்ளலோ –
தேகதேசத்தைத்
தின்றுவந்த
பசியெனும் பழைய
பகையை எதிர்த்தே
அன்னக் கணைகளால்
அமர் புரிந்தவர்!
அண்ணலோ – தேசதேகத்தைத்
தீண்டிப் பரவிய
வெள்ளைக் குட்ட
வியாதியை விரட்ட
சத்தியாக்கிரக
சஞ்சீவி தந்தவர்
இருவரும் சமாதானத்
தூதின்
சாட்சியாய் வெண்துகில்
உடற்கொடி மரத்தில்
உடுத்தித் திரிந்தவர்
இருவரும்
சமரசம் என்பதோர்
சத்திய மந்திரம்
உச்சரிப்பதற்கென
உருவான உதடுகள்
| அ.சந்தியா வணிகவியல் முதலாமாண்டு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு |
கவிஞர் அப்துல்
ரகுமான் அவர்கள் (நேயர் விருப்பம்–வடலூரும் வார்தாவும் ) எழுதிய கவிதை பெரியார் பல்கலைக்கழக
மாணர்வகளுக்குப் பாடமாக உள்ளது. எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்தக் கவிதையை உள்வாங்கி
வரைந்துவந்த ஓவியங்கள் இவை. மாணவர்களின் புரிதலையும், அவர்களின் கலைத்திறனையும் வாழ்த்துவோம்
நண்பர்களே)
Labels:
ஓவியம்,
மனிதம்,
மாணவர் படைப்பு,
மாமனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 28 செப்டம்பர், 2013
காலத்தின் முடிவு
ர.பாரதி
மூன்றாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
எத்தனை
வேதனைகள்
என்னைப்
பெற்றெடுக்கும்போது பெற்றிருப்பாள்…
எத்தனை
பொய்கள்
என்னைச்
சாப்பிட வைக்க சொல்லியிருப்பாள்…
எத்தனை
தாலாட்டுகள்
என்னைத்
தூங்கவைக்கப் பாடியிருப்பாள்…
எத்தனை
துயரங்கள்
என்
படிப்பிற்காக அனுபவித்திருப்பாள்…
எத்தனை
சாபங்கள்
என்னை
ஏசியியோருக்கு விட்டிருப்பாள்…
எத்தனை
போரட்டங்கள்…
என்னை
நன்றாக வளர்க்கக் கடந்திருப்பாள்…
எத்தனை
அறிவுரைகள்
என்னை
நல்வழிப்படுத்த சொல்லியிருப்பாள்…
எத்தனை
வேண்டுதல்கள்
என்னை
மகிழ்ச்சிக்காக் கடவுளிடம் வேண்டியிருப்பாள்..
இத்தனையும்
எனக்காகப் பட்டவள்
இத்தனையும்
எனக்காகச் சொன்னவள்
இத்தனையும்
எனக்காகக் கேட்டவள்
இன்றோ….
ஆதரவற்று
முதியோர் இல்லத்தில்
நிம்மதியின்றி
இருக்கிறாள்..
இதுதான்
காலத்தின் முடிவாயின்
நாளை
என் பாசப்பிள்ளையால்
என்
நிலையும் இதுதானோ..??
Labels:
கவிதை,
மனிதம்,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 30 ஜூலை, 2013
மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்
Labels:
ஓவியம்,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 18 ஜூலை, 2013
மாணவர் படைப்பு
Labels:
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 11 பிப்ரவரி, 2013
மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி
சௌ.பிரியதர்சினி
அவர்கள் டாக்டர்
இராதாகிருட்டிணன் அவர்களின் ஓவியத்தை அழகாக வரைந்து வந்தார் உற்று நோக்கியபோது அதிகாரத்துக்கு ஒரு குறள் என 133 குறட்பாக்களால் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது.
“இயன்றவரை இனிய தமிழில்“
என்ற தலைப்பில்
உரையாற்றினேன். அப்போது
உரையாற்றினேன். அப்போது
நினைவுப்பரிசாக இந்த ஓவியத்தை வழங்கினார்கள். இந்த
ஓவியத்தை இயற்பியல் துறை
மூன்றாமாண்டைச் சார்ந்த
மாணவர் ஆனந்த் அவர்கள்
வரைந்தளித்தார். அவரது படைப்பாக்கத்
திறன் கண்டு வியந்துபோனேன்.
(நீங்கள் வரைந்த ஓவியத்தையோ, உங்களுக்குத் தெரிந்த இளம் படைப்பாளிகளின் ஓவியத்தையோ இந்த வலையில் வெளியிட வேண்டுமா ஓவியத்தை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக)
திறன் கண்டு வியந்துபோனேன்.
(நீங்கள் வரைந்த ஓவியத்தையோ, உங்களுக்குத் தெரிந்த இளம் படைப்பாளிகளின் ஓவியத்தையோ இந்த வலையில் வெளியிட வேண்டுமா ஓவியத்தை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக)
Labels:
அனுபவம்,
ஆசிரியர்தினம்.,
ஓவியம்,
கலை,
திருக்குறள்,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













