தமிழா!நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...
தமிழா!நீபேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்
வாழ்க்கைஇனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...
தமிழா!நீ பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
-உணர்ச்சிக் கவிஞர் .காசியானந்தன் .அவர்கள்
இக்கவிதை என்னை மிகவும் பாதித்த கவிதையாகும் .
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வியாழன், 17 ஜூலை, 2008
தமிழா!நீ பேசுவது தமிழா?
Labels:
கவிதை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 5 மே, 2008
வார்ப்பு இணையத்தில் எனது கவிதை
இனியாவது .............................
என்ற தலைப்பில் வார்ப்பு இணையதளத்தில் வந்த எனது கவிதையைப் படிக்க
http://www.vaarppu.com/padam_varikal.php?id=12
என்ற தலைப்பில் வார்ப்பு இணையதளத்தில் வந்த எனது கவிதையைப் படிக்க
http://www.vaarppu.com/padam_varikal.php?id=12
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 2 மே, 2008
இணையதளங்களை மொழி மாற்றிப் படிக்க
பிற மொழியில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை தமிழிலும் ,தமிழில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை பிற மொழியிலும் மாற்றிப் படிக்க ............
அதற்கான இணையதளம் கீழ்கண்டது
http://girgit.chitthajagat.in/
அதற்கான இணையதளம் கீழ்கண்டது
http://girgit.chitthajagat.in/
Labels:
இணையதள தொழில்நுட்பம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
தமிழின் சிறப்பு
தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள்
காணப்படுகின்ற்றான்
2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன
2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன
2500 ஆண்டாயினும் தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும், தொல்காப்பிய இலக்கணமும், இன்று படித்தாலும் பொருள் புரிகிறது.
இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.
வ.ஐ. சுப்பிரமணியம்
(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்)
தம் கல்லறையில் மேல் “இங்கே தமிழ் மாணவர் உறங்குகிறார் “ என்று கல்லில் பொறித்து வைக்குமாறு
(உயில்) எழுதி வைத்த முனைவர் ஜி.யு.போப்
கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம்
தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;
உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது.
மொழியறிஞர்
டாக்டர் கால்டுவெல்
Dr.Calwell

செவ்வாய், 22 ஏப்ரல், 2008
தாய் மொழிக்கல்வி (தமிழ்) இன்றைய நிலை
உலகம் பரவிய தமிழர்கள் ஐம்பத்தாறு நாடுகளில் வாழ்கின்றனர் .உலகெங்கும் வாழும் மனிதர்களுள் நூற்றுக்கு ஒருவர் தமிழராவர் .தமிழ் மொழியோ கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது .நாகரீகம் ,பண்பாடு என பல கூறுகளை உள்ளடக்கிய இலக்கிய செழுமை கொண்டது .செம்மொழி என்னும் தரத்தையும் பெற்றுவிட்டது .இன்னும் பல்வேறு சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழியின் இன்றைய சமூக மதிப்பீடு குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது
தாய் மொழிக் கல்வியின் தேவை
குசராத் கல்வி மாநாட்டில் காந்தியடிகள் ஆற்றிய சொற்பொழிவில் "கல்வி மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும் .தாய் மொழி தனக்குரிய இடத்தைப்பெற்றுவிட்டால் நமது மூளைக்கும் இன்னும் தேவையான அறிவைப் பெறுதற்கு வசதியாக விடுதலை கிடைக்கும் "என்றார் .
"கண்டம் பாயும் ஒரு ஏவுகணை தயாரிக்க ஆகும் பணத்தில் மூன்றரை லட்சம் ஆரம்பப் பள்ளிகள் கட்டமுடியும் ."என்று முன்னால் இந்திராகாந்தி நாடளுமன்றதிலே அறிவித்தார் .தாய்மொழி நன்கு கற்றால் அது நல்ல அடித்தளமாகிறது தாய் மொழி மூலம் ஒன்றைக் கற்பது எளிதாகிறது .
"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை "
என்பது உலகறிந்த உண்மை..
கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சி பெற்று வெளி ஒலிகளைக் கேட்கிறது .என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள் .குழந்தை வளரும் சூழல் மொழித் தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. இன்றைய குழந்தைகள் கேட்கும் ஒலிகளும் ,சூழல்களும் அவர்களுக்கு தமிழை அன்னியமாக்கிவிடுகின்றன .அவர்கள் தாய் மொழியும் தெளிவின்றி ,பிற மொழியும் புரியாமல் தவிக்கின்றனர்.
தாய் மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் என்கின்றனர் உளவியலாளர்கள் .
இன்றைய சூழலில் தாய் மொழிக் கல்வி
அறிவுச்சுடர் என்ற மாணவி தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என வருந்தி தற்கொலை செய்து கொண்டார் ."
தேனி பண்ணைப் புரத்தைச் சேர்ந்த விது என்ற மாணவன் ஆங்கிலம் தெரியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் ஆயிரத்து இருபத்துமூன்று மதிப்பெண் பெற்ற இவர் தாய் மொழியான தமிழ் வழி பயின்றதால் ஆங்கிலம் புரியவில்லை .ஐந்து பாடங்களில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.
இவையெல்லாம் இணையத்தில் கிடைத்த உண்மைச் செய்திகள்.
இதுவே இன்றைய சூழழில் தாய்மொழிக் கல்வியின் நிலை .இதனை ,
டெல்லி வழி இந்தி"
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமஸ்கிருதம்
இசையின் வழி தெலுங்கு"
என இயம்புவர் தணிகைச் செல்வன்.
இரண்டாயிரமாவது ஆண்டு இரண்டாயிரம் பள்ளிகளாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று திசையெல்லாம் காட்சியளிகின்றன .இப்பள்ளிகள் பல தலைமுறைகளாக குழந்தைகளுக்கு தாய்மொழி கற்றுக் கொடுப்பதில்லை .ஏழை குழந்தைகள் இங்கு படிக்க முடியாத அளவுக்கு கட்டணம் பெறுகின்றன.அதனால் ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி பெற இயலாமல் தவிக்கின்றனர் .அதனால் அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர் .அரசுப்பளிகள் தலைமையாசிரியர் இல்லாமலும் ,போதிய வசதி இல்லாமலும் ஆசிரியர் பற்றாக் குறையோடும் இயங்கும் நிலை உள்ளது .இது அரசுப் பள்ளிகள் தரமான கல்வி கொடுக்க முடியாத சூழலை உருவாக்குகிறது .மத்திய மாநில அரசுகள் கல்வியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் .குறிப்பாக தமிழக அரசு கல்வி நிலை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் .
தாய்மொழிகளின் தேவையை அறிந்த ஐ.நா.இரண்டாயிரமாவது ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி இருபத்து ஒன்றாம் நாளை "உலக தாய் மொழி நாளாக "அறிவித்துள்ளது.இந்த நிலையில் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டை "உலக தாய் மொழிகளின் ஆண்டாகவே"அறிவித்துள்ளது .
ஐ.நா.வின் உறுப்பு நிறுவனமான யுனச்கொவின் தலைமை இயக்குனர் ,கோய்ச்சிரோ கூறும் செய்தி அச்சமூட்டுவதாக உள்ளது.
"இப்போது பேச்சு வழக்கில் உள்ள ஏழாயிரம் மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலை முறைகளிலே காணாமல் மறைந்துவிடும்."
ஒரு இனத்தை அடையாளப்படுத்தி அதன் பண்பாடு நாகரீகம் போன்ற பல கூறுகளையும் அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வது மொழியாகும்.அதனால் தாய்மொழியின் தேவையை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.
தீர்வுகள்
தாய்மொழி வழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.தாய்மொழியான தமிழ் வழி பயில்வோருக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ்ப்படுத்த வேண்டும்.அதற்கு அறிவியல் தமிழ் எனும் துறை வளர அரசு ஊக்கமளிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் தாய்மொழி தெரிந்தவர்கள் முழுமையான கல்வி பெற இயலாத சூழலை அரசு உணரவேண்டும்.
ஆங்கிலம் தெரியாததால் தமிழ் படித்தவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டு தற்கொலை செய்து கொள்வதை அரசு அறிந்து அவர்களும் வாழ வழி செய்யவேண்டும்.
எதிர் காலத் தலை முறையினருக்காவது தாய்மொழி வழியில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரைப் பயில வகை செய்ய வேண்டும்.
தாய்மொழிக்கல்வி நல்ல அடித் தளமானால் அதன்மூலம் பல மொழிகளையும் எளிமையாக அறிந்துகொள்ளலாம் .கருத்தை தெளிவாக ,ஆழமாக, விரிவாக எடுத்தியம்ப அது உதவும்.
வணிக மயமான கல்வி நிறுவங்களை கண்டு அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்.
தாய்மொழி(தமிழ்)வழிக் கல்வி பயின்றோர் சமூகத்தில் மதிப்போடு வாழும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்பணிகளில் தாய் மொழி வழி கற்போருக்கு அரசு முன்னுரிமை தரவேண்டும் .
கல்வி கற்கும் மாணவர்களின் சுமையைக் குறைத்து ,அவர்கள் சுயமாக ,சுதந்திரமாக சிந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும் .
பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள்,பல அறிவியல்த் துறைகளையும் தாய்மொழி வழியே படிக்கவும், வினாத்தாள்களில் வினாக்கள் தமிழிலும் கேட்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.
மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலேயே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.

அன்றும் இன்றும்,
கல்வி,
சமூகம்,
தமிழாய்வுக் கட்டுரைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
மடலின் படிநிலைகள்
இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலை இயம்புவன .மனித வாழ்வில் காதல் அடிப்படையானது .காதல் நிறைவடையவிட்டால் இன்றும் காதலர் மனம் சாதலையே விரும்புகிறது .இவ்வுணர்வை இலக்கியங்கள் அகப்பொருளில் உரைக்கின்றன.அகத்துறைகளுள் ஒன்றான மடல் காதலின் முதிர்ந்த நிலையினது .அதனால் தான் இது பெருந் திணைக்கு உரியதாக உரைக்கப்படுகிறது .காதலும் சாதலும் எக்காலத்தும் யார் மாட்டும் நிகழ்வதாகும் .இந்த நிகழ்வுக்கும் மடல் என்ற அகத் துறைக்குமான தொடர்பை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது .
மடலின் இலக்கணம்
மடல் என்ற சொல் பனங்கருக்கு, பனைமடல் ஆகிய பொருள்களில் இலக்கியங்களில் பயின்று வருகின்றது .இதனை ,

"மடல்மா கூறும் இடனுமார் உண்டே" . என்பர் தொல்காப்பியர்.மேலும் காதல் பெருகிய நிலையில் காதலியைப் பெரும் கடைசி முயற்சியாக தலைவன் நாணத்தை விட்டு மடல் ஏறி ஊர் மன்றுக்கு வருவான் .இதனை ஏறியமடல் திறம் என்பர் தொல்காப்பியர் .
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)