பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
புதன், 11 செப்டம்பர், 2013
திருமண அழைப்பிதழ் மாதிரி
Labels:
திருமண அழைப்பிதழ் மாதிரிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
தற்கொலை செய்துகொ(ல்)ள்வோம்!
ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும்
தினம் தினம் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது நிலா!
ஒவ்வொரு மாலைநேரத்திலும்
கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது சூரியன்!
பெரிய பெரிய மலைகளில் ஏறி
தற்கொலைக்கு முயற்சிக்கின்றன மேகங்கள்!
பெரிய பெரிய மலைகளில் ஏறி
தற்கொலைக்கு முயற்சிக்கின்றன மேகங்கள்!
என்ன சிரிப்பு வருகிறதா?
நிலவும், சூரியனும் இவ்வாறெல்லாம் தோன்றுவது இயற்கை!
இந்தப் புரிதல் காட்சிப்பிழை என்று தோன்றுகிறதா?
அப்படித்தான் வாழ்வின் சில மணித்துளிகள் நமக்குத் தோன்றும் அச்சங்களும்,
துன்பங்களும் இவை நிலையானவை அல்ல சில மணித்துளிகளில் மாறிவிடும் காட்சிப்பிழைகளே!
சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் பயந்து
மான்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை!
பாம்புகளுக்குப் பயந்து
தவளைகள் தற்கொலை செய்துகொள்வதில்லை!
பூனைகளுக்குப் பயந்து
எலிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை!
அஃறிணை உயிரினங்கள் கூட வாழ்வதற்காகவே சாகின்றன
அஃறிணை உயிரினங்கள் எதுவும் தற்கொலை செய்துகொண்டதில்லை!
உலகம்
முழுவதும் தினமும் 3,000 பேர், ஆண்டுதோறும் சுமார் 9 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று உலக சுகாதார
நிறுவனம் தெரிவிக்கிறது. போர்களாலும், கொலைகளாலும், பயங்கரவாதத்
தாக்குதல்களாலும், விபத்துகளாலும் நிகழ்கிற மரணங்களை விடவும், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது.
தற்கொலை செய்துகொள்ள இவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
வாழ்வதற்கு இவர்களுக்கு ஒரு காரணம் கூடவா கிடைக்கவில்லை?
ஒரு தோழி சொன்னார்….
ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள்,
ஆண்களோடு சேர்த்துப் பெண்களுக்கு ஆயிரத்தியொரு பிரச்சனைகள் என்று..
அதற்கு நான் கேட்டேன்..
ஆண்களோட ஆயிரம் பிரச்சனை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று..
அதற்கு அவர் தெரியாது என்று சொன்னார்..
நான் சொன்னேன்…………..
ஆண்களின் ஆயிரம் பிரச்சனைகளும் பெண்கள் தான் என்று..
இந்த உரையாடல் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. இதில் ஒரு உண்மையும் உள்ளது.
ஒவ்வொருவருக்கும் தாம் தான் உலகிலேயே மிகவும் துன்பப்படுகிறோம், நம்மைவிட
துன்பப்படுபவர் யாருமே இல்லை என்ற எண்ணம் உண்டு. அதன் விளைவே நாம் வாழத்தகுதியற்றவர்
என்ற முடிவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். துன்பங்களே இல்லாதவர் இன்னும் பிறக்கவேயில்லை
என்பதை உணர்ந்துகொள்ளும்போது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமை நமக்கு
வந்துவிடும்.
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கொடுமையான சூழல் ஒவ்வொருவக்குமே வரும். அப்போதெல்லாம்
நாம் தற்கொலை செய்துகொள்வோம் என்ற முடிவை ஒவ்வொருவரும் எடுத்தால் இந்த உலகமே
இடுகாடாக மாறிப்போய்விடும். அதனால் அப்படியொரு கொடுமையான
சூழல் நம் வாழ்வில் வந்தால் முதலில் தற்கொலை
செய்துகொள்வோம் என்ற எண்ணத்தை தற்கொலை செய்து கொல்வோம்!
இந்த உலகிலேயே
விலைமதிக்கமுடியாதது உயிர் என்பதை உணர்வோம் உணர்த்துவோம்..
இன்று உலக தற்கொலை தடுப்புநாள்! (செப்டம்பர்10)
தொடர்புடைய இடுகைகள்.
1. நான் ஏன் வாழக்கூடாது?
2. தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்
Labels:
உன்னையறிந்தால்,
தன்னம்பிக்கை,
விழிப்புணர்வு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 9 செப்டம்பர், 2013
கல்கியின் பிறந்தநாள்.
வரலாற்றுப் புதினத்தின் தந்தை எனஅழைக்கப்பட்ட கல்கி அவர்களின் பிறந்தநாள் இன்று. தம் படைப்புகளால் சமகால சமூகநிலையைப் பிரதிபலித்ததோடு, வரலாற்றையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் கல்கி ஆவார்.
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
புதினங்கள்
- கள்வனின் காதலி (1937)
- தியாகபூமி (1938-1939)
- மகுடபதி (1942)
- அபலையின் கண்ணீர் (1947)
- சோலைமலை இளவரசி (1947)
- அலை ஓசை (1948)
- தேவகியின் கணவன் (1950)
- மோகினித்தீவு (1950)
- பொய்மான் கரடு (1951)
- புன்னைவனத்துப் புலி (1952)
- அமர தாரா (1954)
- பார்த்திபன் கனவு (1941 - 1943)
- சிவகாமியின் சபதம் (1944 – 1946)[1]
- பொன்னியின் செல்வன் (1951 – 1954)[2]
சிறுகதைகள்
- சுபத்திரையின் சகோதரன்
- ஒற்றை ரோஜா
- தீப்பிடித்த குடிசைகள்
- புது ஓவர்சியர்
- வஸ்தாது வேணு
- அமர வாழ்வு
- சுண்டுவின் சந்நியாசம்
- திருடன் மகன் திருடன்
- இமயமலை எங்கள் மலை
- பொங்குமாங்கடல்
- மாஸ்டர் மெதுவடை
- புஷ்பப் பல்லக்கு
- பிரபல நட்சத்திரம்
- பித்தளை ஒட்டியாணம்
- அருணாசலத்தின் அலுவல்
- பரிசல் துறை
- ஸுசீலா எம். ஏ.
- கமலாவின் கல்யாணம்
- தற்கொலை
- எஸ். எஸ். மேனகா
- சாரதையின் தந்திரம்
- கவர்னர் விஜயம்
- நம்பர்
- ஒன்பது குழி நிலம்
- புன்னைவனத்துப் புலி
- திருவழுந்தூர் சிவக்கொழுந்து
- ஜமீன்தார் மகன்
- மயிலைக் காளை
- ரங்கதுர்க்கம் ராஜா
- இடிந்த கோட்டை
- மயில்விழி மான்
- நாடகக்காரி
- "தப்பிலி கப்"
- கணையாழியின் கனவு
- கேதாரியின் தாயார்
- காந்திமதியின் காதலன்
- சிரஞ்சீவிக் கதை
- ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
- பாழடைந்த பங்களா
- சந்திரமதி
- போலீஸ் விருந்து
- கைதியின் பிரார்த்தனை
- காரிருளில் ஒரு மின்னல்
- தந்தையும் மகனும்
- பவானி, பி. ஏ, பி. எல்
- கடிதமும் கண்ணீரும்
- வைர மோதிரம்
- வீணை பவானி
- தூக்குத் தண்டனை
- என் தெய்வம்
- எஜமான விசுவாசம்
- இது என்ன சொர்க்கம்
- கைலாசமய்யர் காபரா
- லஞ்சம் வாங்காதவன்
- ஸினிமாக் கதை
- எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
- ரங்கூன் மாப்பிள்ளை
- தேவகியின் கணவன்
- பால ஜோசியர்
- மாடத்தேவன் சுனை
- காதறாக் கள்ளன்
- மாலதியின் தந்தை
- வீடு தேடும் படலம்
- நீண்ட முகவுரை
- பாங்கர் விநாயகராவ்
- தெய்வயானை
- கோவிந்தனும் வீரப்பனும்
- சின்னத்தம்பியும் திருடர்களும்
- விதூஷகன் சின்னுமுதலி
- அரசூர் பஞ்சாயத்து
- கவர்னர் வண்டி
- தண்டனை யாருக்கு?
- சுயநலம்
- புலி ராஜா
- விஷ மந்திரம்
(தரவுகளுக்கு நன்றி -தமிழ் விக்கிப்பீடியா)
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
2035ல் இயற்கை?
Labels:
இயற்கை,
ஒரு நொடி சிந்திக்க,
விழிப்புணர்வு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
உலக எழுத்தறிவு நாள்
எண்ணெழுத்து இகழேல் (கணிதத்தையும், அறநூல்களையும் இகழ்ந்து கற்காமல்
விட்டுவிடாதே!
ஓதுவது ஒழியேல் (நல்ல நூல்களைக் கற்பதை ஒருபோதும் விட்டுவிடாதே)
என்று அன்றே ஔவையார் எழுத்தறிவு குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தியிருக்கிறார்.
உலகில் சுமார் 781 மில்லியன்
வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக்
கல்வியான எழுத,
வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
கற்கை நன்றே; கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்பார் அதிவீரராமபாண்டியர்.
காலம் போகிற போக்கைப் பார்த்தால் பிச்சையெடுத்துத்தான் குழந்தைகளைக் கல்விச்சாலைகளில் சேர்க்கமுடியும் போல இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம்தான். ஆம் நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளின் திறமின்மையே இன்றைய கல்வி தனியாரிடம் சிக்கி வியாபாரப் பொருளாகிவிட்டதற்கு முழுமுதற் காரணமாகும்.
எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குத் தேவையான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு இதெல்லாம் பார்ப்போம் ஆனால் அரசியலுக்கு மட்டும் இப்படி எதுவுமே பார்ப்பதில்லை. துறைசார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் அமைச்சராகமுடியும் என்ற அவலம் இருக்கும் வரை கல்வியில் ஒரு சமூகம் தன்னிறைவடைவது என்பது வெறும் கனவுதான்.
எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குத் தேவையான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு இதெல்லாம் பார்ப்போம் ஆனால் அரசியலுக்கு மட்டும் இப்படி எதுவுமே பார்ப்பதில்லை. துறைசார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் அமைச்சராகமுடியும் என்ற அவலம் இருக்கும் வரை கல்வியில் ஒரு சமூகம் தன்னிறைவடைவது என்பது வெறும் கனவுதான்.
இனிமேலாவது இலவசங்களை மறுத்து நல்ல படித்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தேடுப்போம். இலவசமாக அரசிடமிருந்து நாம் எதுவும் வாங்குவதாக இருந்தால் அது கல்வியாக
மட்டுமே இருக்கட்டும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 7 செப்டம்பர், 2013
தமிழை மறந்ததால் இறந்த அம்மா,அப்பா!
இன்றைய சூழலில் அம்மாவும், அப்பாவும் வேலைக்குப் போகிறார்கள், தம் குழந்தைகளை மதிப்புமிக்க கல்விச்சாலையில் சேர்க்கவேண்டும் என்று...
அதனால் வளர்ந்தபிறகு குழந்தைகளும் வேலைக்குப் போகிறார்கள்,தம் பெற்றோரை மதிப்புமிக்க முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று...
இந்தக் காலத்தில்,
நம்மைப் பெற்ற தாய்க்குக் கொடுக்கவேண்டிய மதிப்பை
நாம் பெற்ற நம் தாய்மொழிக்கும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் உங்களில் பலருக்கும் சிரிப்பு வரலாம்..
ஆனால் கீழ்க்காணும் இரண்டு சிந்தனைகளைப் பார்த்து யாரும் சிரிக்கமாட்டீர்கள்! சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.
- பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி அன்று வீட்டு பாடங்களை செய்யவில்லை. ஆசிரியை அந்த சிறுமியிடம் ஏன் வீட்டு பாடங்களை செய்யவில்லை என்று கேட்டார் அதற்கு சிறுமி, வீட்டில் யாரும் இல்லை என்று சொன்னாள்.
- அதற்கு ஆசிரியை உன் அப்பா என்ன செய்கிறார்?என்று கேட்டார்
- சிறுமி எனக்கு அப்பா இல்லை என்று கூறினாள்.
- பிறகு அம்மா என்ன செய்கிறார் என்று கேட்டார்.
- அதற்கும் சிறுமி, எனக்கு அம்மா இல்லை என்று கூறினாள். ஆசிரியை, உன்னை தினமும் பள்ளிக்கு யார் தயார் செய்து அனுப்புவது என்று கேட்டார் அதற்கு சிறுமி கூறிய பதில் My Daddy and Mummy என்று கூறினாள்.........
இந்தக் சிறுமிக்கு அம்மா, அப்பா இருந்தும் இவள், யாரும் இல்லாதவளாகவே இருக்கிறாள். இந்தப் பெற்றோர் உயிரோடு இருந்தும் இல்லாதவர்களாகவே மதிக்கப்படுகின்றனர்.
இதே கருத்தை கொஞ்சம் கடுமையாகவும் அதேநேரம் நகைச்சுவையாகவும் முகநூல் ஒருவர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.

மொழிகளில் உயர்வு தாழ்வு இல்லை!
ஆனால் ஒவ்வொரு மொழிகளும் உயர்வானவையே!
அந்த மொழிகளின் உயர்வை முழுவதும் உணர்ந்துகொள்வதற்கு நமக்கு தாய்மொழி என்னும் அடித்தளம் முழுமையாக இருக்கவேண்டும். தாய்மொழி என்னும் அடித்தளத்தில் எத்தனை மொழிகளைவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கு தாய்மொழி அறிவை கல்விச்சாலைகளில் கொடுக்காவிட்டாலும் வீட்டிலாவது சொல்லித்தரலாமே என்பதே இவ்விடுகை வழி நான் சொல்லவிரும்பும் கருத்து..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






