பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வியாழன், 25 செப்டம்பர், 2014
ஊடகத்தில் பெண் - கருத்தரங்க அறிவிப்பு
Labels:
கருத்தரங்க அறிவிப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 24 செப்டம்பர், 2014
அரிதினும் அரிது கேள்...
பெரிதினும் பெரிது கேள் என்ற பாரதியின் புதிய
ஆத்திச்சூடியைப் படிக்கும்போதும் ஔவையின்,
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த
காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!
என்ற பாடலைப் படிக்கும்போதும்,
அரிதினும் அரிது எது? என்ற கேள்வி மனதில்
தோன்றியது.
தமிழ்மொழிக்கு மணிமகுடமாகத்
திகழும் திருக்குறளில் வள்ளுவர், தமிழ் என்ற சொல்லை ஒரு முறை கூடப்
பயன்படுத்தவில்லை. இருந்தாலும் சில சொற்களைப் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார்.
அரிது என்ற சொல்லை எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று
பார்த்தேன். 29 முறை வெவ்வேறு விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
அரிது என்ற சொல்லை இவர் ஏன் இத்தனை குறள்களில் பயன்படுத்தியிருக்கிறார்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு குறள்களையும் வாசிக்கும் போது, வள்ளுவர் சொல்லும் ஒவ்வொரு சிந்தனைகளும் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்புமிக்கன என்பது புரிகிறது.
மறக்கவேண்டியவற்றை நினைவுகொள்வதும்
நினைக்கவேண்டியவற்றை மறந்துவிடுவதும் தானே மனித இயல்பு!
மனித சமூகம் தெரிந்தும் சில மரபுகளைப் பின்பற்றத் தவறுகிறது என்பதை உணர்ந்தே வள்ளுவப் பெருந்தகை அரிது என்ற சொல்லை இத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றியது.
குறள்களைக் காண்போம்...
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 6 செப்டம்பர், 2014
தைப்பாவைக் காப்பு
Labels:
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
ஆசிரியர் தின சிறப்புக் கவிதை
ஆசிரியர்களைப் போற்றுவோம்..
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!
நீ..... உன் வாழ்நாளில்
வேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்!
வேடிக்கையாகப் பேசும் ஆசிரியர்கள்
உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல
உன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..
சிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்!
எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக அல்ல!
வாழ்நாளில் நீ
எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத்தான்.
சில ஆசிரியர்கள் சொன்னதையே
மீண்டும் மீண்டும் சொல்வது நீ
தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல!
நீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்!
இந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான
ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..
கவிதையை எழுதியவர்.
வ. கீர்த்தனா
முதலாமாண்டு கணிதவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
Labels:
ஆசிரியர்தினம்.,
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
தொழில்நுட்பத்தின் கையில் மனிதன்!
காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை அரிமா நோக்கில் பார்த்தால், புறா தூது, முரசறைந்து
செய்து சொல்லுதல், தூதுவர் இதன் வரிசையில், தந்தி, வானொலி, தொலைபேசி. அலைபேசி, திறன்பேசி, தொலைக்காட்சி, கணினி,
மின்னஞ்சல், இணையம் என காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த உலகைச் சுருக்கிவிட்டன என்பதை உணரமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுபரவிய உயிர்களை இணைக்கும் ஆற்றலாக இன்று தொழில்நுட்பங்கள்
மாறிட்டன. இச்சூழலில் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.
மனிதன் கையில்
தொழில்நுட்மா? தொழில்நுட்பத்தின் கையில் மனிதனா? என்பதே அது..
சில புள்ளிவிவரங்களைப்
பாருங்கள்..
Labels:
அன்றும் இன்றும்,
இணையதள தொழில்நுட்பம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
கணக்கில்லாக் கடவுள்கள் (கலீல் சிப்ரான்)
கிலாபிசு மாநகரின் கோயில் கோபுரத்தின் முன் நின்று ஒரு மதவாதி
– குதர்க்கவாதி – உலகில் உள்ள பல கடவுள்கள் பற்றி விக்கமாகப் பிரச்சாரம் செய்தார்.
அதைப் பல ஆயிரம் மக்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
பேருரை முடிந்தது. மக்கள், “எங்களுக்குத் தெரியாதா? இந்தக் கடவுள்களெல்லாம் எங்களுடன் வாழ்கின்றனர். நாங்கள் போகுமிடமெல்லாம் எங்களுடன் இக்கடவுள்கள் வருகின்றனர். என்று பேசிக்கொண்டே சென்றர்.
சில நாட்கள் கழிந்தபின் கடைத்தெருவின் சதுக்கத்திலே ஒரு நாத்திகன் மக்களிடையே சொற்பொழிவாற்றினான். “ கடவுள் ஓர் கற்பனை. மனிதன் இல்லாத கடவுளைக் கற்பனை செய்து அதற்கு இன்று அடிமையாகி அல்லல்படுகின்றான்.“ என்று கூறினான். மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆரவாரம்! ஏன் தெரியுமா? கடவுளுக்காகப் பயந்து நடுங்கவேண்டாமே!
சில மாதங்கள் ஓடின. மிகவும் திறமையான, சொல்நயம் மிளிரப் பேச்சாற்றல் மிக்க ஞானி பேசினார். “இந்த உலகில் இருப்பவர் ஒரே ஒரு கடவுள்தான். கடவுளின் தீர்ப்பு நாளில் நீங்களெல்லாம் உங்கள் செயலுக்கு விளக்கம் கூறவேண்டும். தீர்ப்பு நாளிலிருந்து தப்பமுடியாது.“ என்றார். இதைக் கேட்ட மக்களுக்கெல்லாம் ஒரே பயம். ஏற்பட்டது. அஞ்சி அஞ்சி செத்தனர். பல கடவுள்கள் என்றபோது பயப்படாதவர்கள் கூட “ஒரே கடவுள்“ என்று கேட்டபோது அஞ்சி நடுங்கினர்.
சில ஆண்டுகளில் வேறோர் அறிவாளி தோன்றினார். அவர் “உலகில் மூன்று கடவுள்கள் இருக்கின்றர். படைத்த, காத்தல், அழித்தல் இவர்கள் தொழில். இந்தக் கடவுள்கள் வானவெளியிலே வாழ்கின்றர்.” என்றார்.
அதுமட்டுமல்ல,
அவர் மேலும் கூறினார். “இந்தக் கடவுள்களுக்கு கருணைக் கடலான தாய் இருக்கின்றாள். இவர்களுக்கு
அண்ணன், தம்பி, அக்கா, தங்ககை, கணவன், மனைவி எல்லாம் குடும்பமாய் இருக்கிறார்கள்“ என்று
புகன்றார்.
இந்த விளக்கவுரையைக்
கேட்டவுடன் மக்களுக்கு மனதிலே ஒரு திருப்தி ஏற்பட்டது.
மூன்று கடவுள்கள் இருப்பதால் அவர்களுக்குள்ளே கருத்து வேற்றுமை ஏற்படும். குற்றம் குறைகள் இருக்கும். கடவுளின் தாய் கருணை மிக்கவர். அவருக்குக் கட்டாயம் நம் ஏழ்மையும் பலவீனமும் நன்றாகப் புரியும் இல்லையா? என்று திருப்தி அடைந்தனர்.
இந்நாள் வரை கிலாபிசு
நகரில் மட்டுமல்ல, இந்த நாடு முழுமையும் மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் வாதாடுகின்றர்.
சொற்போர் நடத்துகின்றனர். “கடவுள்கள் பலப்பல“ என்போர் சிலர். கடவுளே இல்லை என்போர்
கொஞ்சம் பேர். உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்கிறார்கள் சிலர். நம்மை மூன்று
கடவுள்கள் வாழ்விக்கின்றார்கள் என்பார்கள் சிலர். தாய் தந்தையுடன் பிள்ளை குட்டியுடன்
பெரிய குடும்பமே “கடவுள் குடும்பம்“ என்று கூறுகின்றவர்களோ மிகப் பலர்.
Labels:
அன்றும் இன்றும்,
கதை,
கலீல் சிப்ரான்.,
படித்ததில் பிடித்தது
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















