பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
சனி, 5 ஜூன், 2021
கணினியும் தமிழும் - ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வு அழைப்பிதழ்
சிவகாசி இராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் நிகழும் ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வில் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 3 ஜூன், 2021
இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான தமிழ்ப் பாடத்திட்டம் - UPSC - Tamil Optional
இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பாடங்களுள் ஒன்றான தமிழ் குறித்த
விளக்கங்களை இந்த தளத்திலும் எனது யூடியூப் பக்கத்திலும் தொடர்ந்து வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக தமிழ்ப் பாடத்திட்டத்தை இன்று வழங்கியுள்ளேன்.
இந்தியக் குடிமைப்
பணித்தேர்வு
(Union Public Service Commission)
CIVIL
SERVICES MAIN EXAMINATION
தமிழ்
விருப்பப்பாடம்
பாடத்திட்டம்
தமிழ் இலக்கியம் -
தாள் - I
பகுதி
-1:
தமிழ்மொழி வரலாறு
∙ முதன்மை இந்திய மொழிக் குடும்பங்கள்
∙பொதுவாக இந்திய மொழிகளிலும் குறிப்பாகத் திராவிட
மொழிகளிலும் தமிழ்மொழி
பெறுமிடம்
∙ திராவிட மொழிகளின் கணக்கீடும் வகைப்பாடும்
∙ சங்க இலக்கிய மொழி
∙ இடைக்காலத் தமிழ்: பல்லவர்காலம் மட்டும்
∙வரலாற்று முறை ஆய்வு: தமிழில் பெயர்கள், வினைகள், பெயரடைகள், வினையுரிச்சொற்கள், காலங்காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள்.
∙ பிறமொழிகளிலிருந்து தமிழுக்குக் கடன் வாங்கப்பட்ட சொற்கள்
∙ வட்டார, சமுதாயக் கிளை மொழிகள்
∙ எழுத்து மொழி, பேச்சு மொழிக்கிடையே உள்ள
வேறுபாடுகள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 24 மே, 2021
வாழ்க்கை பற்றிய 40 பொன்மொழிகள்
1. அறியாமையுடன் ஒருவன்
நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.
2. வாழ்க்கையில்
முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற
பொறுமையும், தன்னடக்கமும் தேவை.
-அரிஸ்டாட்டில்
3. வாழ்க்கை என்கிற
ஆடையில் நன்மை, தீமை
என்ற இரு நூல்களும்
இருக்கும். - ஷேக்ஸ்பியர்
4. பெரும் அறிவாளிகள்
புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்
5. நூலகம் என்பது
ஆடம்பரமல்ல. ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று- ஹென்றி வார்டு பீச்சர்
6. நேரத்தை வீணாக்காதே
அதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. -பெஞ்சமின்
7. வாழ்க்கை அனுபவமில்லாத
எவரும் கல்வி கற்றவராக முடியாது! -
பெர்னார்ட்ஷா
8. வாழ்வில் வெற்றிபெற
நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ
9. நீங்கள் தான் உங்கள்
வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் அதை, அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் -
ஹார்லி டேவிட்சன்
10. வாழ்க்கை ஒரு
போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்
- மகாவீரர்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 18 மே, 2021
கணித்தமிழ்ப் பயிலரங்க அழைப்பிதழ்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 8 மே, 2021
செலவு - சங்க இலக்கியச் சிறுகதை - 1
கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ
செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்கர்களிடமும் சொன்னது :
எறித்தரு
கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித்
தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட
சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு
ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ்
இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை 5
என்
மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்
உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார்
இருவரை காணிரோ பெரும?
வைணவத்
துறவி:
காணேம்
அல்லேம்! கண்டனம்! கடத்து இடை
ஆண்
எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய, 10
மாண்
இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!
பல
உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை
உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு
வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15
நீர்
உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்
புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ்
உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20
என, ஆங்கு
இறந்த
கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை
வழிபடீஇச் சென்றனள்,
அறம்
தலை பிரியா ஆறும் மற்று அதுவே.
என்ற பாடலை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.
செலவு
ஞாயிற்றுக் கிழமையென்பதால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் இனியன்.
வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா?
என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்களே!
என்ற அணியில் பேசிய கவிஞர் பரிதி “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று சும்மாவா நம் முன்னோர் சொல்லியிருக்காங்க நடுவரே!” ஆண்
குழந்தை என்றால் வரவு பெண் குழந்தை என்றால் செலவு என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாதது நடுவர் அவர்களே,
என்று பேசினார். தொடர்ந்து விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 22 மார்ச், 2021
தமிழில் திறந்த கல்வி வளங்கள் - Open Education Resources in Tamil
தமிழில்
திறந்த கல்வி வளங்கள்
Open Education Resources in Tamil
மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி.
மொழிகளுள் தமிழ் மொழி தனிச்சிறப்புடைதாகும்.
தொன்மையாலும் தொடர்ச்சியான இலக்கிய மரபுகளாலும் புகழ் பெற்ற தமிழ் இன்று கணினி உலகில்
புதிய புதிய நுட்பங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறது. குருகுலக் கல்வி,
திண்ணைப் பள்ளி, பள்ளிக்கூடங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என கற்பிக்கப்பட்ட தமிழ்
இன்று இணையதளங்கள் வழியாக உள்நாடுகளில் மட்டுமின்றி
உலக நாடுகளில் வாழும் மக்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது. இச்சூழலில் தமிழில் திறந்த கல்விவளங்களின்
தேவை நிறைந்துள்ளது.
திறந்த
கல்வி வளங்கள் (open educational
resources)
திறந்த கல்வி வளங்கள் என்பவை (OER) இலவசமாக அணுகக்கூடியவையாக அமைகின்றன, வெளிப்படையாக உரிமம் பெற்ற உரை, ஊடகம் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுபவை ஆகும். திறந்த கல்வி வளங்கள் எந்தவொரு பயனருக்கும் சில உரிமங்களின் கீழ் பயன்படுத்த, மீண்டும் கலக்க, மேம்படுத்த மற்றும் மறுபகிர்வு செய்ய பொதுவில் அணுகக்கூடிய பொருட்கள் மற்றும் வளங்களை வழங்குகிறது. இணையவழி படிப்புகள், விரிவுரைகள், பயிற்சிக்கட்டுரைகள், வினாடிவினா, கல்வி தொடர்பான கலந்துரையாடல், விளையாட்டு என இதன் உட்கூறுகள் பன்முகத்தன்மை கொண்டவையாகும். சான்றாக, கான் அகாதமி[i] காணொளி வடிவில் கல்விசார் உள்ளடக்கங்களை வழங்குகிறது, ஓபன்ஸ்டாக்ஸ்[ii] உயர்தர, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, வெளிப்படையாக உரிமம் பெற்ற பாடப்புத்தகங்களை வெளியிடுகிறது, அவை முற்றிலும் இலவச ஆன்லைன் மற்றும் குறைந்த செலவில் அச்சிடப்படுகின்றன. என்.பி.டெல்[iii] பொறியியல், அடிப்படை அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை யூடியூப் இணையம் வழியாக வழங்குகிறது. மேலும், சுவயம்[iv], சுவயம் பிரபா[v], ஈ பாதசாலா[vi], சோத்கங்கா[vii] ஆகியவற்றை இந்திய அரசு வழங்கும் திறந்த கல்வி வளங்களுக்கான தக்க சான்றுகளாக உரைக்கலாம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14






