வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

மெய்ப்பொருள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


அறிவுடைமை அதிகாரத்தில் திருவள்ளுவர்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.     ( 423)
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

என்றும்,

மெய்யுணர்தல் அதிகாரத்தில்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  (355)

எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே அறிவு

என்றும் உரைத்துள்ளார்.

இவ்விரு குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால் காண்பது ஆகிய இரண்டும் உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது.

“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
“

என்ற பாரதியார் பாடலும் மெய்ப்பொருள் குறித்த தேடலாகவே உள்ளது.

பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.

புதன், 6 ஆகஸ்ட், 2025

செல்வத்துள் செல்வம் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே  என்றும்,

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் எனவும் உரைத்தார் ஒளவையார்.

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்பது பழமொழி

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் என்றார் உலகநாதர்

செவி வாயாக நெஞ்சு களனாக

கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து

என்றார்  பவணந்தி முனிவர்.

அரசர்க்கு நல்லறிவுச் சிந்தனைகளைத் தரும் புறத்துறை செவி அறிவுறூஉ எனப்படும்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

எண்ணித் துணிக - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன், அதன் விளைவுகளைப் பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இது வெற்றிக்கான முதல்படி.

குழந்தைப் பருவத்தில் நாம் முதல் அடி எடுத்துவைத்ததிலிருந்து இந்த மணித்துளி வரை நம் சொல், செயல் இரண்டிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குள் இயல்பாகவே இருப்பது எண்ணுதல் மற்றும் துணிதல் ஆகிய பண்புகளே. இப்பண்புகளை மேலும் கூர்மைப்படுத்தும்போது நம் செயல் சிறப்பாக அமையும்.

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம் என்கிறது உலகநீதி.

(சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.      ( 664)

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்று திருவள்ளுவர் சொல்லுவது போல அரிய செயல்களைச் செய்பவர்களாக இருக்கிறோமா?

வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் சொல்வது போல இருக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உழைப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 



உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள் உண்டு.

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பாடல் உண்டு.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.

அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,

உழைப்பை இருவகைப்படுத்தலாம்..

அறிவு உழைப்பு - உடல் உழைப்பு

அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்

உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு

பலர் ஏன் உழைக்கிறோம்? எதற்காக உழைக்கிறோம்? எப்படி உழைக்கிறோம்?

என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

செவ்வாய், 17 ஜூன், 2025

கடல் - அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

 

கடல்

மணல், அலைகள்
ஊருக்கு கிழ‌க்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம்போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ, கல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்; வீழும்;
புரண்டிடும்; பாராய் தம்பி.

கீரியின் உடல் வண்ணத்தையும் கடற்கரையின் மணல் மெத்தையையும் ஒப்பிட்டு  உரைக்கிறார். கடல் அலை வந்து செல்வது கல்விநிலையத்துக்கு வரும் இளைஞர் போல என்றுரைக்கிறார். இவ்வாறு இயற்கையிடமிருந்து நாம் பெற்றதும் பெவேண்டியதும் நிறையவுள்ளன.

செவ்வாய், 25 மார்ச், 2025

மெய்ப்பாட்டியல் விளக்கம் (தொல்காப்பியம்)

 




உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. 

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில்  மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது

 

உணர்வுகளை ஆங்கிலத்தில் Emotion என்கிறோம்.

உடலசைவு மொழிகளை ஆங்கிலத்தில் Body language என்கிறோம்..

முகத்தில் தோன்றும் உணர்வுகளை Emoji என்ற குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தி வருகிறோம்..

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் என்பார் திருவள்ளுவர்.