வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

திருக்குறள் பெரிய மொழி மாதிரி நுண் பயிற்சி-Thirukkural Large Language Model (LLM) Fine-tuning

     


     நவில்தொறும் நயம் தரும் நூல் திருக்குறள். அதனால் கற்போரின் அறிவுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைத் தருகிறது. இன்றைய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால், பல வடிவங்களில் இணையத்தில் தரவுகளாக இந்நூல் கிடைக்கின்றது. திருக்குறளின் மூல பாடம், உரை தொடர்பான விளக்கங்களை உரை, ஒலி, காணொலி, குறுஞ்செயலி, சொல்லடைவு, தொடரடைவு வடிவிலும் பெறமுடிகிறது. திருக்குறள் ஏஐ என்ற தளம் ஒரு தேடுபொறிபோல செயல்படுகிறது.  சாட் ஜி.பி.டி, ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு உரையாடிகள் வழியாக குறள் விளக்கங்களைப் படங்களாகவும், காணொலிகளாகவும் உருவாக்கமுடிகிறது. என்றாலும் பதில்களின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது. இச்சூழலில் LLM என அழைக்கப்படும் பெரிய மொழி மாதிரிகளை திருக்குறளுக்கென நுட்பமாக வடிவமைத்தல் மற்றும் அவற்றுக்கான நுண்பயிற்சியளித்தல் காலத்தின் தேவையாகிறது.

திருக்குறள்- பெரிய மொழி மாதிரிகள், நுண்பயிற்சி

பொதுவான LLM மாதிரிகள், இணையத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தரவுகளைக் கொண்டு பயிற்சி பெற்றிருக்கும். சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற உரையாடிகள் இலவசம், கட்டணம் என இருநிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப தேடல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஜெமினி உரையாடி, ஜூலை 10-2025 தேதி வரையிலான தரவுகளைத் தமிழில் வைத்திருப்பதாக குறிப்பிடுகிறது. ஆனால், திருக்குறள் போன்ற ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த, ஆழமான அறவியல் கருத்துகளைக் கொண்ட ஒரு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து துல்லியமான பதில்களை உருவாக்கவும் இதுவரை உள்ள தரவுகள் போதுமானவை அல்ல.  LLM-கள் மனித மொழியைப் புரிந்துகொண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, உகந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்டவை. இவை Pretraining மற்றும் Fine-Tuning போன்ற செயல்முறைகள் மூலம் பயிற்சி பெறுகின்றன (என்கிறார் கணியம் தமிழரசன் (2025). அதனால் திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரிகளை உருவாக்கி ஜெமினி போன்ற உரையாடிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) செய்வதன் மூலம், இக்கருவிகள் வழியாக திருக்குறள் தொடர்பான துல்லியமான பதில்களைப் பெறமுடியும்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

மலையாளக் காற்று - சிற்பி

 


    சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிஞர்
, மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் என பன்முகத் திறன்கொண்டவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அக்கினி சாட்சி நாவலுக்காகவும், ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூலுக்காகவும் என இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, கபிலர் விருது, எனப் பல விருதுகள் பெற்றவர்.

பண்டைய சேரநாடே இன்றைய கேரளம். கேரளம், தமிழகத்துக்குப் பலவளங்களைத் தந்துள்ளது. தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான உறவை நினைவுகொள்வதாகவும், கேரளத்தின் கொடைகளைப் பட்டியலிடுவதாகவும் இக்கவிதை அமைகிறது. காற்றுக்கு ஏது மொழி. இங்கு மலையாளக் காற்று என்பது குறியீடாக அமைகிறது.

‘’காற்றே வா

மலையாளக் காற்றே வா

இளங்காலைப் போதில்

தெருவே மணக்கவரும் பூக்காரிபோல்

வாசனை நடைபோட்டு வா

இளம்காலைப் பொழுதில் தெருவே மணம் வீசும்படி பூக்களைச் சுமந்து வருகிற பூக்காரி போல  நல்ல வாசனையோடு நடைபோட்டு வா’ என்று மலையாள இலக்கியத்தை, நட்பை, வளத்தை வரவேற்கிறார்.

சனி, 9 ஆகஸ்ட், 2025

மனத்தூய்மை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்  என்கிறது உலகநீதி

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்றார் அகத்தியர்

சிந்தை தெளிவாக்கு என்று பாடிய பாரதி

பேயாய் உழலுஞ் சிறுமனமே!

பேணாய் என்சொல் இன்று முதல் நீயா ஒன்றும் நாடாதே

நினது தலைவன் யானேகாண் என்று பாடியுள்ளார்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வாய்ப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


வாய்ப்பு என்றவுடன் பலருக்கும் வேலை, வாய்ப்பு தொழில் வாய்ப்பு தான் நினைவுக்கு வரும் ஆனால் இவை இரண்டையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன…

காலையில் சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் பார்க்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். நிலவை, நட்சத்திரங்களை, வானவில்லை இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் காண்பதற்காகக் காத்திருப்பவர்கள் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்களில் சிலர் கவிஞராகலாம், ஓவியராகலாம், நிழற்படக்கலைஞராகலாம்.

பொழுதுபோக்குக்காக விளையாடுவோர் பலர். சிலர் விளையாட்டுதான் தம் வாழ்க்கை என்று அதில் உள்ள வாய்ப்பை உணர்ந்து விளையாட்டில் புகழ்பெறுகிறார்கள்.

பொருள் தேடுகிறேன், பிள்ளைகளின் கனவுகளுக்காக உழைக்கிறேன், அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்கிறேன் என்று பொருள் தேடுவோரில்

எத்தனை பேருக்கு பிள்ளைகளோடு நேரம் ஒதுக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு நம்மைச் சுற்றி பல வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக மனிதர்களை, வாய்ப்பில்லை என வாடுவோர், வாய்ப்புகளைத் தேடுவோர், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வோர் என மூன்று வகையாகப் பகுக்கலாம்.

 

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

மெய்ப்பொருள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


அறிவுடைமை அதிகாரத்தில் திருவள்ளுவர்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.     ( 423)
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

என்றும்,

மெய்யுணர்தல் அதிகாரத்தில்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  (355)

எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே அறிவு

என்றும் உரைத்துள்ளார்.

இவ்விரு குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால் காண்பது ஆகிய இரண்டும் உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

என்ற பாரதியார் பாடலும் மெய்ப்பொருள் குறித்த தேடலாகவே உள்ளது.

பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.

புதன், 6 ஆகஸ்ட், 2025

செல்வத்துள் செல்வம் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே  என்றும்,

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் எனவும் உரைத்தார் ஒளவையார்.

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்பது பழமொழி

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் என்றார் உலகநாதர்

செவி வாயாக நெஞ்சு களனாக

கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து

என்றார்  பவணந்தி முனிவர்.

அரசர்க்கு நல்லறிவுச் சிந்தனைகளைத் தரும் புறத்துறை செவி றிவுறூஉ எனப்படும்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

எண்ணித் துணிக - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன், அதன் விளைவுகளைப் பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இது வெற்றிக்கான முதல்படி.

குழந்தைப் பருவத்தில் நாம் முதல் அடி எடுத்துவைத்ததிலிருந்து இந்த மணித்துளி வரை நம் சொல், செயல் இரண்டிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குள் இயல்பாகவே இருப்பது எண்ணுதல் மற்றும் துணிதல் ஆகிய பண்புகளே. இப்பண்புகளை மேலும் கூர்மைப்படுத்தும்போது நம் செயல் சிறப்பாக அமையும்.

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம் என்கிறது உலகநீதி.

(சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.      ( 664)

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்று திருவள்ளுவர் சொல்லுவது போல அரிய செயல்களைச் செய்பவர்களாக இருக்கிறோமா?

வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் சொல்வது போல இருக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உழைப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 



உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள் உண்டு.

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பாடல் உண்டு.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.

அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,

உழைப்பை இருவகைப்படுத்தலாம்..

அறிவு உழைப்பு உடல் உழைப்பு

அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்

உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு

பலர் ஏன் உழைக்கிறோம்எதற்காக உழைக்கிறோம்எப்படி உழைக்கிறோம்?

என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.