வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது உங்கள் இடம்

இலக்கியத்துறை சார்ந்த எனக்கு கணினி - இணையம் இரண்டுமே ஆண்டுகளுக்கு முன்புவரை வியப்புக்குரியவொன்றாகவே இருந்தது.

கணினிக்குள் இணையத்தை எட்டிப்பார்த்த என்னைக் கட்டிப்போட்டது வலையுலகம்.
உலகம் - கிராமமானது...
கணினியே - உலகமானது...
நண்பர்கள் - உறவினரானார்கள்..

எனது எழுத்துக்கள் செதுக்கப்பட்டன..

வேர்களைத்தேடும் இவ்வலை நிழலில் தங்கிச் சென்றவர்கள் விட்டுச்சென்ற செல்வங்கள் கீழே கருத்துரையாக..

நீங்களும் விருப்பப்பட்டால் உங்கள் செல்வங்களை இங்கே கருத்துரையாகத் தொலைத்துச் செல்லாம்...

தினமணி நாளிதளில் வலையுலகம் பற்றி வந்த கட்டுரையில்,

”தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.“




○ தமிழரசி சொல்கிறார்….

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துக்கொள்ள முனைவர்.திரு.இரா.குணசீலன் இவர் உங்களில் பலரால் நன்கு அறியப்பட்டவர் இவர் பதிவாகிய
”வேர்களைத்தேடி” இதில் தமிழ்மொழி பற்றி பல அறிய தொன்மையான கருத்துக்கள் புத்தகவிவரங்கள் ஆய்வுகள் பல தமிழ் அறிஞர்கள் பற்றி அபூர்வ தகவல்கள் விளக்கங்கள் என பல தகவல்கள் இதில் பரிமாறப்படுகின்றது இதோடு அல்லாமல் நமக்கு தேவையான அனைத்து தகவல்கள் சந்தேகங்கள் என பலவும் இவர் பகர்கிறார்.
இதை நாம் நம் தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள அறியாதவற்றை தெரிந்துக்கொள்ள இவர் பதிவுகள் மிகவும் பயன்படும் இதில் என்னை தவிர நீங்கள் அனைவரும் தமிழில் நல்ல வளம் மிகுந்தவர்கள் என அறிவேன்...இருப்பினும் கற்றது கை அளவே அன்றோ....
ஆகையால் நண்பர்களே இனி நீங்கள் இவர் பதிவையும் படித்து பயன் அடையாளம்.... தமிழை மேலும் அறிந்து அளாவலாம்..... என் அன்பு நண்பர்களுக்கு இது என் வேண்டுகோள்...... முகம் தெரியாத மனிதர்களாய் இங்கு அறிமுகமாகி நட்பு சகோதரத்துவம் என நமக்குள் பல பரிமாண உறவுகளுடன் இந்த வலைதளத்தில் உலா வருகிறோம்....இங்கு இப்படித்தான் நம்மை நாம் வெளிப்படுத்திக்கொள்கிறோம்...

http://www.gunathamizh.blogspot.com/ இந்த இணைப்பில் அவசியம் அறிந்துக்கொள்ளுங்கள் இது வரை தமிழ்மொழி பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்களை அப்படியே நீங்கள் உங்கள் தமிழ் ஆர்வ நண்பர்களையும் அறிமுகப்படுத்துங்கள்...தமிழ் அறிவோம் அறிய வைப்போம்.....இது ஆசிரியருக்கு ஒரு மாணவியின் சமர்ப்பனம்.......




○ சந்ரு சொல்கிறார்….

முனைவர் இரா.குணசீலன் அவர்களுடைய வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவே என் கண்ணில் பட்டது. இந்த வலைப்பதிவிலே தமிழர் நம் இலக்கியம் தொடர்பாகவும். நமது புலவர்கள் தொடர்பாகவும். இனிய எளிய நடையிலே எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையிலே பதிவிட்டு இருக்கின்றார் முனைவர் இரா.குணசீலன் அவர்கள். அவரின் இந்த தமிழ் பணியினை ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்.

இவரது இந்த வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவிலே தமிழாய்வுகள் சங்ககால இலக்கிய ஆய்வுகள், சங்க இலக்கிய நுண்ணாய்வுகள், சங்ககால்புலவர்கள், சங்ககால இலக்கியங்கள்..... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவரது தமிழ் பணியின் முலமாக உயர் கல்வி கற்கின்ற பல மாணவர்கள் நன்மை அடைவர் என்பது உண்மை. இந்த வலைப்பதிவுக்கு வந்தால் தமிழ் இலக்கியம் தொடர்பான பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.




வலைச்சரத்தில் தமிழரசி சொல்கிறார்..

தாயின் மடியில் பிள்ளைகள் தவழ்வது இயல்பு...இங்கோ நேர் எதிர் மாறாய் தமிழ்த் தாய் இவர் நாவில் தவழ்ந்து விளையாடுகிறாள்..உவமை கூற எடுத்துக் காட்ட பதிவு சொல்ல என இவர் எதைத் தொட்டாலும் கையாள்வது தமிழைத் தான்..நீர் சிந்தும் வானத்தை சந்தோஷத்தின் மிகுதியில் தேன் சிந்துதே வானம் எனச் சொல்வோம் தேன் சிந்தும் தமிழை தான் சிந்துபவர்.இவரால் தமிழ் தழைத்தோங்கி மேலும் செழித்தோங்குகிறது என்றால் அது மிகையாகாது தமிழில் மட்டும் அல்ல கனிணி பற்றிய மென்ப்பொருள் நுட்பத்திலும் இவருக்கு நிகர் இவரே தமிழ் பேச தயங்கி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தற்கால இளைய சமுதாயத்தினர் மத்தியில் கற்கால தமிழை இக்காலம் வளரச் செய்வதில் இவர் பெரும் பங்காறறுகிறார்.இவரது படைப்புகள் பல பலத்தலங்களில் வெளிவந்துள்ளது.என்னை வியக்கச் செய்த பதிவர்களில் தமிழ் மேல் நான் கொண்ட ஈர்ப்பால் இவருக்கு தான் முதல் இடம்.இவர் படைப்புகளில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சிறந்தது என சொல்லமுடியாது.அத்தனையும் செந்தமிழின் தமிழரின் சிறப்பையும் வாழ்வியலையும் சொல்லும் பதிவுகளே. இவர் தான் வேர்களைத்தேடி.. குணா.வெறியாட்டு இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்


வெறியாட்டு

விட்ட குதிரையார்

புள்ளோப்புதல்


தேவா சொல்கிறார்...

இவருடையது அவருடையது என்று பிரித்தெடுக்க முடியாத தாய்த்தமிழை...என்னுடையது என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய சிறப்புக்குரிய முனைவர் குணசீலனை அறியாதவர் யாரும் இருக்க இயலாது. புற நானுறையும் அக நானுறையும், நன்னூலையும் என்னைப் போன்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து எம் தாய்த்தமிழின் இனிமையினை அகிலமெல்லாம் இருக்கும் நம் இனம் அறிய கதைக ளோடு...இலக்கணமும் சேர்த்து படிப்பிக்கும் இவர்... அனைவருக்கும் தமிழ் ஆசான். இந்த வலைப்பூவை சொடுக்குங்கள்…....தமிழன்னை உங்களைத் தாலாட்டுவாள்!



அமுதா சொல்கிறார்..

"வேர்களைத்தேடி" என்ற வலைப்பூவில் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் தமிழின் இனிமை கூறும் பதிவுகள் பல பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் மோகத்தில தள்ளாடும் வேளையில் , "விளையாட்டு என்பது பொழுது போக்கமட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வது என்று " பழந்தமிழர் விளையாட்டுக்களை நமக்கு நினைவுறுத்துகிறார். என் பெண்களுக்குப் பிடித்தது "பிசி நொடி விளையாட்டு". மேலும் தொல்காப்பியம், ஆற்றுப்படை, நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, புறாநானூறு என்று தமிழ்த்தேனை இவ்வலைப்பூவில் பருகலாம்.



○ க.ந.சாந்திலெட்சுமணன் சொல்கிறார்...

நெடுநல் வாடை,குறுந்தொகை,அகநானுறு இன்னும் பல சங்க இலக்கியங்களின் பாடல்கள் விளக்கங்களுடன் தரப்பட்டுள்ள ஒரு பயனுள்ள தளம் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்களின் வலை. http://gunathamizh.blogspot.com/




○ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொல்கிறார்..
○ என்ன ஒரு அருமையான பதிவு! ஒரு SCIENTIFIC FICTION ஓ அல்லது, தற்கால நடைமுறையில் ஏதோ ஒன்றைக் கூறி,அப்படியே வாசகனை
உள்வாங்கி, ’திடும்’ என்று ஒரு அக/புற
நானூறு பாடலை விளக்கி அசத்தி விட்டீர்கள்!! எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் இடுகையை ஆராய்ச்சி செய்து P.hd. வாங்கி விடுவேன்!
அவ்வளவு அழுத்தமான விஷயங்களை ஒரு சின்ன CAPSULEல் அடக்கி விடுகிறீர்கள். இராமாயண இதிகாசத்தில் நிகழ்வுகளையும், இடங்களையும் வைத்தே காண்டங்கள் அமைய,ஒரே ஒரு காண்டம் ஒரு ஜீவனுக்கு..அதாவது சுருக்கமாய் பேசி விரிவாய் விளங்க வைக்கும் சொல்லின் செல்வன் சுந்தரனுக்கு அர்ப்பணிக்கப் பட்டது ஞாபகம் வருகிறது.உங்களைப் படித்தவுடன் என்னுள் கோபமாய் ஒரு கேள்வி எழுந்தது அது இதோ:

மெல்லத் தமிழ் இனி சாகும் என்று யார் சொன்னது???




மாதவராஜ் சொல்கிறார்…

வலைப் பக்கங்களில் உங்கள் பதிவுகள் மிக முக்கியமானவை. இலக்கியத்தின் மூலம் காலத்தையறியும் காரியத்தைச் செய்கிறீர்கள். ப்ழந்தமிழ் இலக்கியத்தின் அழகையெல்லாம் இங்கு வந்து அள்ளிக் குடிக்க முடிகிறது.

பாராட்டுக்கள் நண்பரே!



ஜெரி ஈசானந்தன். சொல்கிறார்...

அறிவியலையும் தமிழையும் இணைக்கும் அந்த புள்ளியில் சொக்கிப்போகிறேன்.,,செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.




ஜிஎஸ்ஆர் சொல்கிறார்...
நண்பா அறிவியலையும் தமிழையும் இனைத்து எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள்




சசிக்குமார் சொல்கிறார்...


வேர்களைதேடி: முனைவர் இரா. குணசீலன்

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி" என்ற பெருமை பெற்ற நம் தமிழ் மொழியின் புகழை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் இவருடைய பணி மகத்தானது. என்ன புண்ணியம் செய்தனரோ இவருடைய மாணவர்கள் இவ்வளவு தமிழ் புலமை வாழ்ந்தவர் ஆசிரியராக கிடைப்பதற்கு. இவருக்கும் இந்த விருதை அளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

ஜோதிஜி சொல்கிறார்......


இவர் கிராமத்துவாசியாக வாழ்க்கையைத் தொடங்கி தொடர் உழைப்பினால் இன்றைய உச்சத்தை தொட்டுள்ளார். இவர் எழுதும் நடை என்பது சமகாலத்தில் எவரின் தளத்திலும் பார்க்காத ஒன்று. ஆர்ப்பாட்டம் இல்லாத அக்கறையான ஒவ்வொரு சிந்தனைகளும் ஏராளமான ஆச்சரியத்தை உருவாக்கும். அரசியல் முத்தமிழ் காவலர் அல்ல. மொழி வளர்க்கும் உண்மைத் தமிழன்.

தமிழ் படித்தால் சுய வாழ்க்கைக்கு சோறு போடுமா? இவருக்கு கற்ற தமிழே சோறும் போடுகிறது. மற்றவர்கள் உணர வேண்டிய அளவிற்கு சுய ஒழுக்கத் தையும் போதித்தும் உள்ளது. நான்கு தலைப்புகள் எழுதி விட்டு கூட்டமாய் வந்த ஈ மொய்க்கவில்லையே என்று கருதாமால் தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டுருப்பதற்கே முதல் வணக்கத்தை சொல்ல வேண்டும். சமகாலத்தில் ஆங்கிலத்தை நோக்கி படையெடுக்கும் அத்தனை மனிதர்களும் படிக்கப்பட வேண்டிய தளம் இது. கிராமத்தில் தொடங்கிய இவரின் பயணம் இன்றும் நம்மால் மறந்து போய்க் கொண்டுருக்கின்ற தமிழ் மொழியின் வேர்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார். தள வடிமைப்பு, எளிமை, சுருக்கம், நோக்கம் என்று எல்லா விதங்களிலும் முதன்மையான முக்கிய மனிதராகத் தெரிகிறார். வலை உலகம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் வரையிலும் இவரால் படைக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக் கடன் பட்டவர்கள்.




புலவன் புலிகேசி சொல்கிறார்....


நம்ம நண்பர் முனைவர். இரா.குணசீலன் அவர்கள்தான் இந்த வார பதிவர். தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவர் நடத்தும் "வேர்களைத்தேடி......" வலைப்பூ தமிழ் விளக்கங்களை எடுத்தியம்பி வருகிறது. தமிழின் சங்க கால இலக்கியங்களை சுவாரஸ்யமான விடயங்களுடன் ஒப்பிட்டு அழகான விளக்கங்களை கொடுத்து வருகிறார். இலக்கியத்தை கண்டால் தலை தெரிக்க ஓடுபவர்கள் கூட இவர் பதிவுகளை படித்தால் தமிழார்வம் கொண்டவர்களாக மாற்றம் பெறுவர்.

வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வித்தை தெரிந்தவர். நண்பரே வளர்க உமது தமிழ்ப் பணி.

இவரின் வலைப்பூ "வேர்களைத்தேடி......"



ஆதிரா சொல்கிறார்.

இன் சுவைச் சங்கச் சாறுடன் இக்கால பனிக்கூழையும் சேர்த்தெமக்குச் செம்மையாய வழங்கும் இக்கால நக்கண்ணையாரே.. வாழ்க உம் சேவை.. அதில் நிறையும் எம் தேவை.. உம்மால் சங்கம் அறிகிறோம். மிக்க நன்றி.


வலைச்சரத்தில் மகேந்திரன் சொல்கிறார்.

வலைப்பூக்களில் ஓர் வர்ணஜாலம். தமிழுக்காய் தன்னை முழுவதும் அர்பணித்து வேர்களைத் தேடி இவரிடும் ஒவ்வொரு பதிவுகளும் நமது மொழியின் சிறப்பினை எண்ணி மலைக்கும் வண்ணம் தலைசிறந்து நிற்கும். அன்புநிறை நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் தமிழ்ப்பணி வலைப்பக்கங்களிலும் இணையத்திலும் போற்றத்தக்க வணங்கத்தக்க ஒன்று. இதுதானென்று சொல்ல முடியா அளவுக்கு அத்தனை படைப்புகளும் நெஞ்சை வருடி தாலாட்டும் தமிழ்ப்புலமை. அங்கே மேற்கோள் காட்டிடப்படும் ஒரு சங்கப் பாடல் அதற்கான விளக்கம்.
இதோ இன்றைய பதிவு இரவலர் வாரா வைகல்.. சங்க காலத்தில் இரவலர் வராவிட்டால் வீட்டுப் பெண்கள் எவ்வளவு துன்பத்துக்கு ஆளானார்கள் என அவர் சொல்லும் விதமே அற்புதம் தான்.
அப்பப்பா.. முனைவரே. இங்கே நான் உம்மை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. உம்மின் பெயருடன் என் வலைச்சரப்பணியை நிறைவு செய்வதே என் நோக்கம். செய்தேன்.. பாக்கியம் பெற்றேன்..

இதோ அவருக்காக ..

தமிழின் பெருமையை
எம் ஆசான் உரைக்க
பொறியில் ஏற்றினேன்!
எழுத்துலகில் நுழைந்ததும்
விரல்களின் நுனியில்
ஊறிவந்த வார்த்தையெல்லாம்
கவியில் ஏற்றினேன்!
என்று உன் வலை கண்டேனோ
அன்றே தருவித்தேன்
அழகாய் ஓர் முடிவை!
நினைத்ததை எழுதாதே
அதில் சிறந்ததை எழுது!!