“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்” (திருக்குறள் 393)
புண்ணுடையர் கல்லா தவர்” (திருக்குறள் 393)
என்பார் வள்ளுவர்.
“சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணாமல் செல்லும்போது..
கண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..
சாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..
குற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.
கண்களிருந்தும் எழுத, படிக்கத் தெரியாதவர்களைக் காணும்போதும்..
மனது கேட்கிறது நமக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன?
இல்லாவிட்டால் என்ன? என்று..
உடல் திறன்குறைபாடு உடையவர்களை,
செவிடர், முடவர், நொண்டி, உடல் ஊனமுற்றவர், என்றெல்லாம் ஒருகாலத்தில் சொல்லிவந்தோம் இப்போதெல்லாம் ஊடகங்களும், பொதுமக்களும் கூட இவர்களை, Physically challenged person, மாற்றுத் திறனாளிகள் என்றுதான் அழைக்கின்றனர்.
எனக்கு நீண்ட நாட்களாகவே கண்பார்வையற்றோரையும் இவ்வாறு நேர்மறையான வார்த்தையில் அழைக்கலாமே என்ற எண்ணம் இருந்துவந்தது.
குருடர், கண் பார்வையற்றோர், விழியிழந்தோர், கண் தெரியாதவர்கள் போன்ற சொற்களை இன்றைய சூழலில் பலரும் பயன்படுத்தி வருகிறோம்.
இவர்களை நாம் ஏன் அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்ககூடாது?
இப்போதெல்லாம் கண்பார்வையற்றவர்களும் தம் நாவினால் பார்க்கலாம் என்றெல்லாம் அறிவியல் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால் தமிழ் உறவுகளே...
ஊடகங்களே....
இனிமேல் கண்பார்வையற்றவர்களை அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்கலாமே......
