வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, விருந்து எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
­        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு புதிதாக்கு (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் வசன கவிதைஎன்றும் பின்னர் சுயேச்சா கவிதைலகு கவிதைவிடுநிலைப்பாஎன்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். பாரதி வழியில் .பிச்சமூர்த்தி, கு..ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின

1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தனஇவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான .பிச்சமூர்த்தி, கு..ராசகோபாலன், .நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.

 2.. எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன..பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  .நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   

        சில புதுக்கவிதைச் சான்றுகள்

  நல்ல காலம் வருகுது                                                               உன் கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                 கடிகாரத்தின் கையில்
  தெருவிலே  நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           


முடிவுரை
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக் கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் நன்கு உணரலாம்.
மாதிரி வினாக்கள்

இரண்டு மதிப்பெண் வினா
1.        பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல எனக்கூறும் இலக்கண நூல் எது?
2.        புல்லின் இதழ்கள் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
3.        புதுக்கவிதைக்கான இலக்கண மரபுகள் யாவை?
4.        வானம்பாடிக் காலம் குறித்து எழுதுக.
பத்து மதிப்பெண் வினாக்கள்
5.        தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரைக.
6.        புதுக்கவிதையை வளர்த்த இதழ்களின் பணிகுறித்து எழுதுக.



தொடர்புடைய இடுகைகள்

20 கருத்துகள்:

  1. கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தாங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டிற்குரியது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. புதுக்கவிதையின் தோற்றத்துக்கு அடிப்படை காரணங்கள் உட்பட பல விளக்கங்கள் அருமை... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    சான்று புதுக்கவிதைகளும் அருமை...!

    பதிலளிநீக்கு
  3. இது மாணவர்க்கு மட்டுமில்லாது தமிழார்வம் கொண்ட அனைவருக்கும் பயன்படும் பகுதியாகும். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நிரஞ்சன் தம்பி.

      நீக்கு
  4. புதுக்கவிதையின் இலக்கணம் அறிந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு முனைவரே... தொடர்ந்து தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பதிவை வரவேற்கிறேன்.

    தங்கள் பள்ளி மாணவர்கள் படிக்க https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ என்ற இணைப்பைச் சொடுக்கினால் இதற்கு உதவும் பல நூல்கள் உண்டு. இவ்விணைப்பு இயங்காவிடின் http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ என்ற பக்கத்திற்குச் சென்று 'தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.' என்ற இணைப்பைச் சொடுக்கலாம்.

    அறிஞர் வல்லிக்கண்ணன் எழுதிய 'புதுக்கவிதையின் வரலாறு' என்ற நூலும் இத்தொகுப்பில் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பரே மிகவும் பயனுள்ள இணைப்பைத் தந்தீர்கள். கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

      நீக்கு
  7. புதுக்கவிதைக்கான களம் அமைத்துத்தந்த காலத்தையும் கவிஞர்களையும் பற்றி அறிந்துகொண்டேன். மிக்க நன்றி தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  8. என் இடுபணியை செவ்வனே சமர்பிக்க தங்களின் புதுக்கவிதைக்கான விளக்கங்கள் துணைநின்றன. மிக்க நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  9. அருமை தோழர் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள். புதுக்கவிதை வளர்ச்சி பற்றிய விளக்கம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு