பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வேடிக்கை மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேடிக்கை மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 6 மே, 2014
இன்றைய உண்மைகள்
Labels:
படித்ததில் பிடித்தது,
மனிதம்,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 1 மார்ச், 2013
காதலின் எதிரிகள்
பெற்றோர், அண்ணன், தம்பி, மாமன்,
மச்சான், சாதி, சமயம் எனக்
காலகாலமாகவே காதலுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் இருந்து
வருகின்றன. இவையெல்லாம்
உண்மையில் காதலுக்கு எதிரிகளே அல்ல காதலின் உண்மையான எதிரி
காதலர்கள் தான்.
பெற்றோர்களெல்லாம் காதலை ஏன்
எதிர்க்கிறார்கள்?
சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது..
என்பது பெற்றோரின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது.
குழந்தைப்
பருவத்திலிருந்து எப்பொழுது என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து
அவர்கள் கேட்காமலேயே
செய்துவைத்த தமக்குத் தெரியாதா இவர்களுக்கு ஏற்ற
வாழ்க்கைத் துணையை எப்போது,
எப்படித் தேடித்தருவது? என்று, என்பது பெற்றோரின் குரலாகவுள்ளது.
காதலுக்குக்
கண்கள் இல்லை!
நாங்கள் சாதி, மதம், உயர்வு, தாழ்வு எதுவும் பார்க்கமாட்டோம் ஆனால் எங்கள் பெற்றோர்
இவையெல்லாம் பார்க்கிறார்கள் என்பது பிள்ளைகளின் வாதமாகவுள்ளது.
எல்லாம்
உங்கள் எதிர்கால நலன் கருத்தித்தானே பார்க்கிறோம் என்பது பெற்றோரின் எண்ணமாகவுள்ளது.
கொடிய விலங்குக்கோ, கள்வர்களுக்கோ கூட அஞ்சாத காதலன்
பெற்றோரிடம் தம்
காதலைச் சொல்வதற்கு அஞ்சுகிறான். அது பெற்றோர் மீது இருக்கும்
அச்சமல்ல!
அவர்கள் செய்த நன்றியை
நாம் மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே காரணமாகும்!
காதலுக்காகப் பெற்றோரைத் தூக்கியெறியும் பிள்ளைகளில்
எத்தனைபேர் பெற்றோருக்காகக் காதலைத் தூக்கிப்போடுகின்றனர்?
தம் பிள்ளை நமக்காக காதலையே தூக்கிப்போட முடிவு செய்துவிட்டது என்பதை அறிந்துமா பெற்றோர் அவர்களைப் பிரித்துவைப்பார்கள்.
காதலிப்பதோ அவர்களையே திருமணம் செய்வதோ ஒன்றும் பெரிய
சாதனையல்ல!
பெற்றோரின் ஏற்போடு காதலரைக் கைபிடிப்பதே பெரிய
சாதனையாகும்.
பெற்றோரிடம் முறைப்படி சொன்னால், காத்திருந்தால் பெற்றோர் காதலுக்கு மரியாதை செய்வார்கள்.
காதலுக்கு மரியாதை செய்த பெற்றோரைப் பற்றிய சங்கப்பாடல் ஒன்றைக் காண்போம்..
(தலைவன் சான்றோரைத்
தலைவியின் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான்,
தன்பெற்றோர் மறுப்பாரோ என்று அஞ்சிய
தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை
பெற்றோர்
ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)
அம்ம
வாழி தோழி நம்மூர்ப்
|
|
பிரிந்தோர்ப்
புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
|
|
தண்டுடைக்
கையர் வெண்டலைச் சிதவலர்
|
|
நன்றுநன்
றென்னு மாக்களோ
|
குறுந்தொகை 146.
வெள்ளிவீதியார்.
தலைவி - தோழி நீ நீடு வாழ்க!
நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து
வைப்போர் உண்டா?
தோழி - தலைவன் சான்றோரை உன் பெற்றோரிடம் மணம்
பேசி வர அனுப்பினான், நம்
பெற்றோர் மறுப்பாரோ என்று நீ அஞ்சவேண்டிய
தேவையில்லை “தலைவன் வரைவை பெற்றோர்
ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக”
தலைவன் மணம்பேச அனுப்பிய சான்றோர்
எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
வயது முதிர்ந்தோர், அவர்களுக்குத்
தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, தலைப்பாகை அணிந்திருந்தனர், உடல்தளர்ச்சி நீங்க
கம்பு ஊன்றியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களோடு பேசிய நம் பெற்றோரும் மிக்க
மகிழ்வோடு நன்று நன்று என்று ஏற்றுக்கொண்டனர். நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து
வைப்போர் உண்டு என்று தோழி தலைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
- இப்போதெல்லாம் காதலர் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ விடுப்பு எடுத்துவிட்டு பூங்காக்களில் சில ஆண்களும், பெண்களும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று கூடுகிறார்கள். சில காதல் எதிர்பாளர்கள் அவர்களை உங்கள் காதல் உண்மை என்றால் இதோ தாலி இப்போதே கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களும் அப்போது தப்பி்க்க தாலிகட்டிக்கொண்டு போகும்போது அந்தத் தாலியை கீழே எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதுதான் தற்காலக் காதலின் நிலை. இந்தக் காதலர்களா காதலை வாழவைக்கிறார்கள்?
இந்தக் காதலர்கள் அல்லவா காதலின் முதல் எதிரிகள்??
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
எதிர்பாராத பதில்கள்
முல்லா என்பவரை அனைவரும் அறிவாளி என்று கூறுவர். ஆனால் அவரது இரு நண்பர்களும்,
முல்லா ஒரு முட்டாள், ஆனால் அனைவரும் அவரை அறிவாளி என்று கூறுகிறார்கள். அவரை ஒரு
சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று முயற்சி எடுத்து முல்லாவை மேடையில் பேச அழைத்தார்கள்.
முதலாவதாக முல்லா மேடையேறி
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத்
தெரியுமா? என்று கேட்டார். அனைவரும் தெரியாது என்று கூறினார்கள். நான் என்ன
பேசப்போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் எதற்காக உங்களிடம்
பேசவேண்டும்? என்று கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
இரண்டாவதாக, முல்லாவின் இரு நண்பர்களும் இப்படி முல்லா இறங்கிவிட்டாரே என
நினைத்துவிட்டு மறுபடியும் முயற்சியெடுத்து முல்லாவை மேடைக்கு அனுப்பினர்.
மேடையேறியவுடன் முல்லா,
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார்.
அனைவரும், போனதடவை தெரியாது என்று சொன்னதால் முல்லா மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
அதனால் இந்தமுறை அவரைப் பேசவைக்கவேண்டும் என்று சிந்தித்து அனைவரும் “தெரியும்“
என்று சொன்னார்கள். அதற்கு முல்லா, நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்கே
தெரியும் மறுபடியும் நான் ஏன் பேசவேண்டும் என்று மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
மறுபடியும் இவரைப் பேசவைக்கவேண்டும் என்று முயற்சித்து இரு நண்பர்களும்,
முல்லாவை மேடைக்கு அனுப்பினர். முல்லா முன்பு போலவே “நான் என்ன பேசப்போகிறேன்
என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். தெரியாது என்று சொன்னாலும்
தெரியும் என்று சொன்னாலும் இவர் மேடையைவிட்டு இறங்கிவிடுகிறார் என்று மக்களெல்லாம்
மிகவும் யோசித்துக்கொண்டிருந்தனர். அதனால் பாதிபேர் தெரியும் என்றும் பாதி பேர்
தெரியாது என்றும் கூறினார்கள்.
முல்லா சொன்னார்.
தெரியாதவர்களெல்லாம், தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு
மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
முல்லா அறிவாளி என்று ஏன் எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை இரண்டு நண்பர்களும்
இப்போது உணர்ந்தார்கள்.
பிடித்த கதையை எடுத்துச் சொன்னவர்.
பா. முத்துலெட்சுமி
இரண்டாமாண்டு வணிகவியல் (கணினிப் பயன்பாடு)
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.
Labels:
எதிர்பாராத பதில்கள்,
கதை,
பேச்சுக்கலை,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
காடும் நாடாகும்!
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 30 ஜனவரி, 2013
உங்கள் பள்ளிக்கால நிழற்படம்!
அன்பு நண்பர்களே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் உலவியபோது உங்கள் பள்ளிக்கால நிழற்படத்தைக் காணவேண்டுமா? என்றொரு அறிவிப்பு
நானும் ஆர்வத்தில் ஆமாம் என்று அந்த முகவரிக்குச் சென்றேன்.
எந்த நாடு?
எந்த ஊர்?
எந்த பள்ளி?
எந்த ஆண்டு?
எனப் பல வினாக்களைச் சரியாக நிறைவு செய்தேன். தேடுதல் முடிவுகளும் வந்தன.
நீங்கள் கொடுத்த தகவலின் படி தங்களுக்கு இரண்டு நிழற்படங்கள் வந்துள்ளன.
ஒன்று குழுபடம், இன்னொன்று தனிநபர் நிழற்படம் என்று அறிவிப்பு வந்தது.
மிக ஆவலோடு பார்த்தேன்.
நிழற்படங்களைப் பார்த்தவுடன் சிரிப்புதான் வந்தது.?
உங்கள் நிழற்படங்களைப் பார்த்து உங்களுக்கு அழுகை வந்தால் கோபம் வந்தால் இந்த இணைய முகவரியை உங்கள் நண்பரிடம் கொடுத்து உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் சொன்னர்கள்.
அந்த இணையதள முகவரி இன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணில் பட்டது.
நீங்களும் சிரிக்கவேண்டும் என்பதற்காக அந்த முகவரியைப் பரிந்துரைசெய்கிறேன்.
Labels:
அனுபவம்,
இணையதள தொழில்நுட்பம்,
நகைச்சுவை,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 21 ஜனவரி, 2013
எதிர்காலத்தில் கையெழுத்தும் – தலையெழுத்தும்!
“கையெழுத்து நல்லாயிருந்தா
தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று காலகாலமாகவே
சொல்லிவருகின்றனர்.
அதிவேகத்தில் செல்லும் பேருந்தில்
நின்றுகொண்டே தன் விவரக்குறிப்புகளை அழகான கையெழுத்தில் எழுதும் நடத்துனரையும்..
குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு கோழி
கிண்டியதுபோல கையெழுத்தில் எழுதும் மருத்துவரையும் பார்க்கும்போது இவர்கள் சொன்னது
உண்மைதான் என்று தோன்கிறது.
ஓலைச் சுவடி, மெய்கீர்த்தி, கல்வெட்டு,
செப்புப்பட்டையம் என்று கைவிரல்களால் எழுதிவந்த நாம் கணினி வந்தபிறகு நிறையவே
மாறிப்போனோம். கையால் எழுதுவது நிறையவே குறைந்துவிட்டது. தட்டச்சுசெய்ததும் போதும்
என்று, குரல் ஒலியை எழுத்தாக்கும் தொழில்நுட்பம் வரை வந்துவிட்டோம்.
இந்தக் காலத்திலும் தான் சொல்கிறார்கள் கையெழுத்து
நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று..
எதிர்காலத்தில் இப்படியொரு பழமொழிக்குப்
பொருள்கூடத் தெரியாது.
கையில் எழுதும் வழக்கம்கூட
ஒழிந்துபோகலாம், மறைந்துபோகலாம்...
எங்கும் கணினி! எதிலும் கணினி! என்ற
காலமாற்றத்தில் இதுகூட நடக்கலாம்.
·
அன்று படிக்காதவர்கள்
மட்டும்தான் கைநாட்டு வைத்தார்கள். இன்று படித்தவர்களும் கூட, பல நிறுவனங்களில்
கையெழுத்துப்போடுவதற்குப் பதிலாகத் தன் கைரேகையை வருகைப்பதிவுக் கருவியில்
வைத்துச்செல்வதைப் பார்க்கமுடிகிறது..
·
அன்று
உணவகங்களுக்குச் சென்றால் பணியாளர் வந்து ஐயா என்ன வேண்டும் என்றுகேட்பார். நாமும்
என்ன இருக்கிறது என்று கேட்போம். அவர் உணவுப்பட்டியலை மூச்சிறைக்கச் சொல்வார்.
பிறகு நாம் சொல்வதைக் குறித்துக்கொள்வார். இன்று மதிப்புமிக்க உணவகங்களில் ஒவ்வொரு
மேசையிலும் டேப்ளட் பிசி இருக்கிறதாம் அதில் படங்களுடன் தங்கள் உணவுகளையும்
விலைப்படியலையும் பார்த்து அதிலேயே நாம் நம் தேவைகளை பதிவுசெய்யலாமாம். பணியாளர்
உணவுகளைக் கொண்டுவருகிறாராம்.
·
தமிழக அரசும்
மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த கையோடு.மின்னூல் (இபுக்) தயாரிப்புப் பணியில்
ஈடுபட்டுவருகிறது. எதிர்கால மாணவர்கள் தாளில்லாக் கல்வி பெறவும் வாய்ப்பிருக்கிது.
இப்படி எதிர்காலத்தில் கையெழுத்து என்றால்
என்ன? என்றுகேட்கும் நிலைகூட வரலாம்.
கையெழுத்து எல்லோருக்கும் தெரியும்
தலையெழுத்து யாருக்குத் தெரியும். சோதிடரா? அவருக்கு அவர் தலையெழுத்தே தெரியாமல்
தான் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்.
இதுவரை சொல்லப்பட்ட தலையெழுத்து என்பது ஏதோ
விதி என்று புரிந்துகொண்டோம்.
எதிர்காலத்தில் தலையெழுத்து என்பது, பெற்றோம் தம் குழந்தை
எப்படியிருக்கவேண்டும் என்ன திறமைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து நம் மூளையில்
கணினியின் உதவியோடு எழுதிய நிரல் குறியீடுகளாக இருக்கலாம்.
எதிர்காலத் தொழில்நுட்பம்
இப்படியொரு இணையம் இருந்தால்..
தொடர்புடைய இடுகைகள்
எதிர்காலத் தொழில்நுட்பம்
இப்படியொரு இணையம் இருந்தால்..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 9 ஜனவரி, 2013
முகத்தின் அழகு நிறத்தில் இல்லை..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள் அன்று. இன்று பலருக்கு
முகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..
சிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக
இருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும்
ஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம்
பண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..
முகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..
சிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக
இருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும்
ஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம்
பண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 2 ஜனவரி, 2013
ஆயிரம் பொ(போ)ய் சொல்லித் திருமணம்.
ஆயிரம் பொய் சொல்லியும் திருமணம் செய்யலாம் என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. இதன் காரணம் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று என் மாணவர்களிடம் கேட்டேன். இதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா? என்று ஒரு மாணவர் எழுந்து சொன்னார். ஐயா எனக்குத் தெரியும் என்று..
நானும் மகிழ்வோடு சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார்.
ஐயா உண்மையைச் சொன்னால் யாருக்கும் கல்யாணம் நடக்காது அதுதான் நம் முன்னோர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று..
இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது நகைச்சுவையுணர்வைப் பாராட்டிவிட்டு அதன் பொருளை இவ்வாறு கூறினேன்.
“ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழி.. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
அதனால் ஆயிரம் முறை நம் உறவுகளுக்கும் சுற்றத்தினருக்கும் போய் சொல்லி அனைவரது அன்புநிறைந்த வாழ்த்துகளோடும் செய்துகொள்வதே திருமணம் என்று சொன்னேன்.
திருமணம் தோன்றிய சூழல்.
Labels:
நகைச்சுவை,
மாறிப்போன பழமொழிகள்,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 10 டிசம்பர், 2012
உங்கள் வீட்டுத் திறவுகோல்
·
வெள்ளையனே
வெளியேறு என்று அன்று காந்தியோடு
சேர்ந்து பலரும் போராடினார்கள்..
·
இன்று
வெ(கொ)ள்ளையனே கடைபோடு என்று இந்தியா சத்தம்போட்டு அழைக்கிறது.
·
விடுதலை
வாங்கிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும், நாம் இன்னும் மொழியால் (ஆங்கிலம்)
அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம்.
·
இந்தச்சூழலில்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என நம் மீண்டும் அடிமைப்படுகிறோமோ என்ற சிந்தனை
பாமர மக்களைக்கூட அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
·
இந்த
சூழலில் விடுதலைப்போராட்ட காலத்தில் பாலகங்காதர திலகர் அவர்கள் பேசிய வார்த்தைகள்
தான் நினைவுக்கு வருகிறது.
மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டலாம் வரலாம்..
அப்போதும் ஒரு திலகர் வரலாம்..
இப்படி உணர்ச்சிபொங்கப் பேசலாம்..
ஆனால் நமக்கு உணர்ச்சி வருமா?
என்பதுதான் ஐயப்பாடாகவுள்ளது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 5 டிசம்பர், 2012
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?
இலஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம்!
என்ற மனநிலைதான் எங்கும் காணப்படுகிறது.
ஆனால் இன்றைய சூழலில்,
கொடுக்கத்தெரிந்தவன் புத்திசாலி!
வாங்கத்தெரிந்தவன் பிழைக்கத்தெரிந்தவன்!
இயலாதவர்கள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?
என்ற மனநிலைதான் எங்கும் காணப்படுகிறது.
இலஞ்சம் வாங்காதே பிச்சையெடு என்று கொடுத்தவர்கள் கோபப்படுகிறார்கள்!
சும்மாவா கிடைச்சது இந்த வேலை? பிச்சையெடுத்துத்தான்டா இந்த வேலையே வாங்கினேன் என்று வாங்குபவர்கள் சொல்கிறார்கள்.
கொடுப்பவர்களையும், வாங்குபவர்களையும் போலவே சராசரி வாழ்க்கை வாழப் பழகிக்கொண்டார்கள் மக்கள்.
என்ன விதை போடுகிறோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.நம் முன்னோர் விதைத்துச் சென்ற இலஞ்சம் என்னும் விதையைத்தான் நாம் இப்போது அறுவடைசெய்கிறோம்.
நாமும் நம் குழந்தைகளுக்கு இலஞ்சம் என்னும் விதையை விதைத்தால் அவர்கள்
இலஞ்சம் என்னும் பயிரைத்தானே அறுவடை செய்வார்கள்.
குழந்தைகளிடம் இறைவனை வழிபடும் முறைபற்றிச்சொல்லும்போது..
இறைவனிடம் வேண்டினால் அவர் தருவார் என்றுதானே சொல்கிறோம்..
கொஞ்சம் சிந்திப்போம் இறைவனிடம் வேண்டினால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடாது.
நாம் வாழும் உலகம் தான் இலஞ்சம் நிறைந்ததாக இருக்கிறது. இளம் தலைமுறையினரிடமாவது சொல்வோம்.
உழைக்காமல் எதுவும் கிடைக்காது! அப்படிக் கிடைத்தால் அது நிலைக்காது!
உழைக்காவிட்டால் சாமி எதுவும் கொடுக்காது!
உழைத்துக் கிடைத்த ஊதியம்தான் உடலில் ஒட்டும்.
உழைப்புக்கு ஊதியம் பெறு, கொடு என்ற பண்பை நம் குழந்தைகளுக்காவது சொல்லித்தருவோம்.
பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடமுடியும்
அதை ஒரு அறிவாளியால் தான் பாதுகாக்கமுடியும்.
என்பதையும், இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் பாவம் என்பதையும் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவோம்.
தொடர்புடைய இடுகை
தேடிவந்த உணவு
நீங்க தீவிரவாதியா?
சும்மாவா கிடைச்சது இந்த வேலை? பிச்சையெடுத்துத்தான்டா இந்த வேலையே வாங்கினேன் என்று வாங்குபவர்கள் சொல்கிறார்கள்.
கொடுப்பவர்களையும், வாங்குபவர்களையும் போலவே சராசரி வாழ்க்கை வாழப் பழகிக்கொண்டார்கள் மக்கள்.
என்ன விதை போடுகிறோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.நம் முன்னோர் விதைத்துச் சென்ற இலஞ்சம் என்னும் விதையைத்தான் நாம் இப்போது அறுவடைசெய்கிறோம்.
நாமும் நம் குழந்தைகளுக்கு இலஞ்சம் என்னும் விதையை விதைத்தால் அவர்கள்
இலஞ்சம் என்னும் பயிரைத்தானே அறுவடை செய்வார்கள்.
குழந்தைகளிடம் இறைவனை வழிபடும் முறைபற்றிச்சொல்லும்போது..
இறைவனிடம் வேண்டினால் அவர் தருவார் என்றுதானே சொல்கிறோம்..
கொஞ்சம் சிந்திப்போம் இறைவனிடம் வேண்டினால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடாது.
உழைப்புதன் மெய்வருத்தக் கூலிதரும்.
ஆயிரம் கடவுள்களை வேண்டினாலும்
உன் மீது நீ நம்பிக்கை வைக்காவிட்டால்
நீ தான் பெரிய நாத்திகவாதி என்ற சிந்தனைகள
மனதில் வைத்து,
நாம் வாழும் உலகம் தான் இலஞ்சம் நிறைந்ததாக இருக்கிறது. இளம் தலைமுறையினரிடமாவது சொல்வோம்.
உழைக்காமல் எதுவும் கிடைக்காது! அப்படிக் கிடைத்தால் அது நிலைக்காது!
உழைக்காவிட்டால் சாமி எதுவும் கொடுக்காது!
உழைத்துக் கிடைத்த ஊதியம்தான் உடலில் ஒட்டும்.
உழைப்புக்கு ஊதியம் பெறு, கொடு என்ற பண்பை நம் குழந்தைகளுக்காவது சொல்லித்தருவோம்.
பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடமுடியும்
அதை ஒரு அறிவாளியால் தான் பாதுகாக்கமுடியும்.
என்பதையும், இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் பாவம் என்பதையும் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவோம்.
தொடர்புடைய இடுகை
தேடிவந்த உணவு
நீங்க தீவிரவாதியா?
Labels:
அன்றும் இன்றும்,
சமூகம்,
பழமொழி,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 28 நவம்பர், 2012
இந்த உலகம் ஒரு நாயின் வால்.
இந்த உலகில் யாரும் யாரையும் மாற்றமுடியாது.
நாமே நம்மை மாற்றிக்கொண்டால்தான் உண்டு.
நம்மாற்றமே இன்னொருவரின்
மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கும்
என்பதே உலகியல் உண்மை.
விவேகானந்தர் சொன்ன கதை..
எல்லாம் நிறைவேறும் எனக் கருதி ஒரு முனிவரை அணுகித் தொந்தரவு செய்ய அவரும்,''நான் உனக்கு அடிமையாய் ஒரு பூதம் தருகிறேன்,
ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன ஆற்றலால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் கட்டளைகளைச் சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.
ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன ஆற்றலால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் கட்டளைகளைச் சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.
இந்த உலகமும் நாயின் வால் போல் தான் உள்ளது.
அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும்
இன்னும் சரி செய்ய முடியவில்லை...
அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும்
இன்னும் சரி செய்ய முடியவில்லை...
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 27 நவம்பர், 2012
நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!
சுத்தமான காற்று!
சுகாதாரமான சுற்றுச்சூழல்!
ஆகிய இரண்டும் உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணமாக மனிதர்கள் வெளியேற்றும் குப்பைகளே அமைகின்றன.
நம் வீடு போலத்தானே நாடும்! என்ற எண்ணம் எப்போது ஒவ்வொருவருக்கும் உருவாகிறதோ அப்போது அந்த நாடு சுத்தமான நாடாகக் காட்சிதரும்.
சுகாதாரமான சூழல் கொண்ட உலகின் பல்வேறு நாடுகளைக் காணும்போது வியப்பாக உள்ளது.
எப்படி இவர்களால் மட்டும் தம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளமுடிகிறது?
இதற்கு யார் காரணம்?
அரசுமட்டுமா?
அரசு விதிக்கும் அபராதம் என்னும் அச்சுறுத்தல் தான் காரணமா?
என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.
ஆழ்ந்துநோக்கினால் மக்ககளின் பொதுநலன் குறித்த சிந்தனையும், தனிமனித ஒழுக்கமுமே ஒரு வீட்டையும், நாட்டையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளஉதவும் என்பது புரிகிறது.
நம்மைச்சுற்றி கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்.
நகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது? அதைப் பொதுமக்கள் எந்த அளவுக்கு மதித்து நடக்கிறார்கள்?
நேற்று காரைக்குடி சென்றேன் ஒரு தெருவில் குப்பை மேட்டின் மீது அமர்ந்து ஒருவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்..
என்ன என்று பார்த்தேன்..
அறிவு உள்ள எவரும்.. என்று மட்டும் எழுதியிருந்தார். என்னவாக இருக்கும்..? இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று எழுதுவாரோ என்று நினைத்துக்கொண்டே வந்தேன்..
நான் நினைத்ததுபோலவே அடுத்த தெருவில் “அறிவு உள்ள எவரும் இப்பகுதியில் குப்பை கொட்டவோ, அசுத்தம் செய்யவோ மாட்டார்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.
இதை செய்யென்றால் செய்யமாட்டோம்..
செய்யாதே என்றால் செய்வோம் இதுதானே நம் இயல்பு?
அழகாக எழுதப்பட்ட இந்தக் கருத்தைப் படிக்கத்தெரிந்தால் அவர் இங்கே குப்பை கொட்டுவாரா?
என்ற கேள்வி முதலில் நம் மனதில் எழும். இருந்தாலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் படித்தவர்களில் பெரும்பாலானவர்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள் என்ற உண்மை புலப்படும்.அதனால் சுத்தமான சுற்றுச் சூழல் நோய்நொடியற்ற வாழ்வு தரும் என்பதை உணர்ந்து நம் சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க உதவுவோம்.
- நீர்வளங்கள்
நீர் வளங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரிய கடன் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, நீர்வளங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போம்.
- இதைப் பார்த்தாவது திருந்துவோம்
- நாம மக்கு மனுசனா?
- இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.
எவ்வளவு பெரிய உண்மை??
இந்த பூமி எவ்வளவு அழகானது?
இதை இன்னும் அழகாக்காவிட்டாலும்- கொஞ்சம் அழுக்காக்காமால் விட்டுச்செல்வோமே!!
நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!
தொடர்புடைய இடுகை
Labels:
அனுபவம்,
இயற்கை,
விழிப்புணர்வு,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 15 செப்டம்பர், 2012
புதிய தொழில்நுட்பம்!
ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
பேருந்து கூட்டத்தால் நிரம்பிவழிந்தது.
அடுத்த நிறுத்தத்துக்கு கொஞ்ச தூரம் இருக்கும்போது ஒரு பெண்மணி
நிறுத்துங்க... என்று மெதுவாகச் சொன்னார்..
நான் நினைத்தேன் இவர் சொல்வது அருகே நிற்கும் நமக்கே மெதுவாகத்தானே கேட்கிறது நடத்துனருக்கு எப்படிக்கேட்கும் என்று..
நிறுத்தமும் வந்தது..
யாரும் இறங்கவேண்டுமா? என்று சத்தமாகக் கேட்டார் நடத்துனர்.
அப்போதும் அந்தப் பெண்மணி மூட்டைமுடிச்சுகளோடு..
ஆமா நிறுத்துங்க... என்று மெதுவாகச் சொன்னார்..
நானும் என்னடா இது இந்தம்மா இவ்வளவு மெதுவாச் சொல்றாங்க!வண்டிபோகும் வேகத்துக்கும், ஒலிக்கும் பாடலின் ஒலிக்கும் எப்படி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவார் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..
நான் எதிர்பார்த்ததுபோலவே பேருந்து அவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தைக் கடந்து நீண்டதூரம் வந்துவிட்டது..
அப்போதுதான் அந்தப் பெண்மணி ஐயோ நிறுத்துங்க நிறுத்துங்க நான் இறங்கவேண்டும் என்று கத்தினார்..
உடன்வந்த பயணிகளும் அந்தப் பெண்மணி பாவம் என்று எல்லோருமாகச் சேர்ந்து கத்தி வண்டியை நிறுத்தினர்.
அந்தப்பெண்மணியும் மூட்டைமுடிச்சுகளோடு கீழே இறங்கினார்.
பேருந்து கிளம்பியது..
கொஞ்சதூரத்தில் நெரிசல் காரணமாக பேருந்து நின்றது.
உடன் வந்தபயணிகள் பார்த்தீங்களாயா இந்த அம்மா எவ்வளவு விவரம்?
என்றார்கள். என்ன என்று நானும் திரும்பிப்பார்த்தேன்.
அந்த அம்மா அப்போது இறங்கிய இடம் தான் அவர் வீடு இருக்கிறது.
தன்வீட்டினருகே நிறுத்தச் சொன்னால் ஓட்டுனர் நிறுத்தமாட்டார் என்பதை அறிந்துதான் அந்தப் பெண்மணி இப்படி மெதுவாக...
நிறுத்துங்க... நிறுத்துங்க... என்று சொல்லிவிட்டுத் தன் நிறுத்தம் வந்ததும் சத்தமிட்டு நிறுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து வியந்துபோனேன்.
வேடிக்கை மனிதர்கள் என நினைத்துக்கொண்ட எனக்கு அப்போது மனதில் தோன்றியது..
இந்தப் பெண்மணி எவ்வளவு புத்திசாலி..!
இந்த நடத்துனர் எவ்வளவு பாவம்..
என்று.. இவர்களைப் போன்ற நடத்துனர்களின் நலனுக்காகவே வந்திருக்கிறது புதிய தொழில்நுட்பம்..
- நேற்று திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடுக்கு ஒரு தனியார் பேருந்தில் வந்தேன். பேருந்தில் திரையரங்கில் காண்பதுபோல அதிக ஒலியோடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஒலியைவிட அதிகமான ஒலியோடு தொடர்வண்டிநிலையத்தில் அறிவிப்பு செய்வதுபோல... டிங் டிங் டிங்... என மணியொலியோடு...
“பள்ளிப்பாளையத்தில் இறங்கும் பயணிகள்
இறங்குவதற்குத் தயாராகவும்..”
என்று ஒரு அறிவிப்பு தமிழ் மற்றும் இந்தி மொழியில் வந்தது. வியந்துபோனேன்.
அடுத்து கருங்கல்பாளையம் வந்தவுடன் அதே போல ஒரு அறிவிப்பு..
“கருங்கல் பாளையம் இறங்கும் பயனிகள் இறங்குவதற்குத் தயாராகவும்..” என்று..
ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன்...
“ஈரோடு பேருந்துநிலையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.” என்றொரு அறிவிப்பு வந்தது..
தமிழகத்தில், பயணிகளுக்கும் நடத்துனருக்கும் நாள்தோறும் நடக்கும் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இந்தத் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. இதே தொழில்நுட்பத்தை எல்லாப் பேருந்துகளிலும் பயன்படுத்தலாமே என்று நினைத்துக்கொண்டே வந்தேன்.
Labels:
அன்றும் இன்றும்,
அனுபவம்,
நகைச்சுவை,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 27 ஆகஸ்ட், 2012
தெரியுமா செய்தி..?
- பிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.
- அனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.
- ரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.
- உடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.
- ஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.
- திருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.
உண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்
பொய் உலகை மூன்று முறை
சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.
என்ன
சொன்னாலும் நம்புறாங்கப்பா..
கேப்பையில நெய் வடியுதுன்னா
கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?
என்பார்கள்
மூத்தவர்கள்.
படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..!
அந்தக்
காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10
நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10
நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு
வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப்
படையெடுத்தார்கள்.
இன்று இந்த
வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.
- அதனால் வதந்திகளை நம்பாதீர்கள்!
- குறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.
காலம்
மாறிப்போச்சு பாருங்க..
![]() |
| அன்று |
![]() |
| இன்று..
தொடர்புடைய இடுகைகள்
பக்கம் பார்த்துப் பேசு பெரிய பொய் |
அதனால்
தெரியுமா செய்தி..? என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..
நீங்கள்
சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்
Labels:
அன்றும் இன்றும்,
சமூகம்,
சிந்தனைகள்,
நகைச்சுவை,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 15 ஜூலை, 2012
இந்த மாணவர்களைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா?
- கதை கதையாக எழுதிக்கொண்டிருப்பார்கள்.
- எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
- வினாக்களையே பதிலாக எழுதிக்கொண்டிருப்பார்கள்
- நுழைவுச்சீட்டில் உள்ள அறிவுரைகளைப் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
- வினாக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு என்னென்ன நினைவிருக்கிறதோ அதையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
- அருகே இருக்கும் மாணவன் வேறு தேர்வு எழுதிக்கொண்டிருப்பான். அதைக்கூடப் பார்த்து எழுதுவார்கள்.
தேர்வறையில் சில மாணவர்களைப்
பார்த்தால் பாவமாக இருக்கும். படித்தவர்கள் நிமிர்ந்துகூடப் பார்க்காமல்
எழுதிக்கொண்டிருப்பார்கள். படிக்காதவர்களும் எழுதிக்கொண்டிருப்பார்கள். அருகே
சென்று பார்த்தால் தான் படித்தவர் யார்?படிக்காதவர் யார்?என்று தெரியும்.
படிக்காத சில
மாணவர்கள்.....
இவர்களின்
நிலையைப் பார்த்தால் ஒரு கிராமிக்கதை தான் நினைவுக்கு வரும்
இக்கதையில் வரும் மருகனுக்கு எழுதப்படிக்கவே தெரியாது. அந்தக் கிராமத்தில் யாரும் பள்ளிக்கூடப்பக்கமே சென்றதில்லை. இந்த மருமகன் மட்டும் ஒருநாள் பள்ளி சென்றிருந்தார் அதனால் இவரை “நாலெழுத்துப் படித்தவர்“ என்று ஊர்மக்கள் போற்றிவந்தனர். இவருக்கு வந்த சோதனையைப் பார்க்கலாம் வாங்க..
இக்கதையில் வரும் மருகனுக்கு எழுதப்படிக்கவே தெரியாது. அந்தக் கிராமத்தில் யாரும் பள்ளிக்கூடப்பக்கமே சென்றதில்லை. இந்த மருமகன் மட்டும் ஒருநாள் பள்ளி சென்றிருந்தார் அதனால் இவரை “நாலெழுத்துப் படித்தவர்“ என்று ஊர்மக்கள் போற்றிவந்தனர். இவருக்கு வந்த சோதனையைப் பார்க்கலாம் வாங்க..
படிப்பறிவில்லாத கிராமம். அங்கு ஒருவர் திருமணமாகி மருமகனாகச் சென்றார். ஊருக்குள் படித்தவர் இவர் ஒருவர்தான் என்பதால் மக்கள் இவருக்கு அளவுக்கு அதிகமாகவே மதிப்பளி்ததார்கள்.
ஒருநாள் ஊரிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. நம்ம
மருமகன்தான் படித்தவராச்சே!
என்று இவரிடம் கொடுத்துப் படிக்கச்
சொன்னார்கள்.
இவரும்
கடிதத்தை வாங்கி நீண்டநேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென என்ன நினைத்தாரோ
அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
வீட்டோடு
பதறித்தான் போனார்கள் ஏதோ துக்கமான செய்திதான் கடிதத்தில் வந்திருக்கிறது என்று.
“சும்மா
சொல்லுங்க மருமகனே.. கடிதத்தில் என்னதான் வந்திருக்கிறது?“
என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள்.
அவர்களின்
தேற்றுதலும்,கண்ணீரும் மருகனுக்கு மேலும் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.
இவர்களின்
ஆரவாரத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் இவர்களின் வீட்டில்
கூடிவிட்டார்கள். மருமகன் குடும்பத்தோடு அழுவதையும், கையில் கடிதம் இருப்பதையும்
பார்த்து வந்தவர்களும் பெருங்கூப்பாடு போட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
மருகனுக்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இவரும்
என்னதான் செய்வார் பாவம்!
இவரும்
ஒருகாலத்தில் பள்ளி சென்றவர் தான் அதுவும் ஒரே ஒருநாள்தான் சென்றார். அவருக்குப்
படிப்புவரவில்லை என்று அதற்குமேல் பள்ளிக்கே செல்லவில்லை. இருந்தாலும்
நாலெழுத்துப் படித்தவர் என்பதால் இவருக்கு இவ்வளவு மரியாதை கொடுத்தார்கள்
ஊர்மக்கள்.
இப்படியொரு
சூழல் வரும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.
சரி
சமாளிப்போம் என்று...
கடிதத்தை
பார்த்தார்.. ஒரு எழுத்துக்கூடவா நமக்குத் தெரியாமல் போய்விடும். அவர் பள்ளி
சென்றபோது ஆசிரியர் எழுத்துக்களைக் கரும்பலகையில் எழுதி நடத்திக் கொண்டிருந்தார்.
அதில் “மா“ என்ற எழுத்து மட்டும் தான் இவருக்கு இந்தச்சூழலில் நினைவுக்கு வந்தது.
சரி அந்த மா வாவது எங்காவது
கடிதத்தில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார். கண்டேபிடித்துவிட்டார்..
ஆம் அன்று
ஆசிரியர் சொல்லித்தந்த அதே மா
தான். இருந்தாலும் அவர் கரும்பலகையில் எழுதிக்காட்டியபோது மா பெரிய எழுத்தாக இருந்ததே.
கடிதத்தில் இப்போது நாம் பார்க்கும் மா சிறிய எழுத்தாக உள்ளதே என்று இவருக்குக்
குழப்பம் வந்துவிட்டது.
இருந்தாலும்
என்ன! தான் படித்ததைச் சொல்லியாகவேண்டுமே.
மருமகன்
இப்படிச் சொன்னார்...
சின்ன
மா இருக்கு,பெரியமா இல்லை. என்று..
இது போதாதா
கிராமத்துவாசிகளுக்கு. ஒப்பாரிவைத்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
என்ன?சின்னாம்மா இருக்காங்க..
பெரியம்மா
இல்லையா..?
பெரியம்மா
போயிட்டாங்களா..
ஆத்தா
போயிட்டியா...
என்று
எல்லோரும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
(இந்தக் கதை நகைச்சுவைக்காக மட்டுமல்ல நம் நாட்டுக் கல்விநிலைகுறித்து மதிப்பீடு செய்துகொள்வதற்காகவும் தான்)
தொடர்புடைய இடுகைகள்
Labels:
அன்றும் இன்றும்,
கதை,
மாணாக்கர் நகைச்சுவை,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













.gif)


