வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையதள தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையதள தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2026

கணினி அறிமுகம் -2 - தட்டச்சு, வலைப்பதிவு, குறுஞ்செயலி, வலைப்பதிவு

கணினி அறிமுகம் - 2
தமிழ்த்தட்டச்சு, விசைப்பலகை முறைகள், செயலிகள், வலைப்பதிவு & மின்னூல் பற்றிய 30 வினாக்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2026

திருக்குறள் – மருந்து அதிகாரம் நோட்புக் எல்.எம் வழி ஓர் ஆய்வு

   


(கோபி,பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 22.01.2026 அன்று நடைபெற்ற இலக்கியங்களில் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக்கட்டுரை)

Abstract

Thirukkural is a book full of wisdom. People gain knowledge by reading Thirukkural. Depending on the level of knowledge of the readers of this book, new ideas can be gained. This article explores the techniques of converting the subtle messages of Thiruvalluvar's medicinal power into media files suitable for learning and teaching using the Google Notebook LM tool.

குறிச்சொற்கள்

திருக்குறள், Google Notebook LM tool. செய்யறிவுக் கருவி, செயற்கை நுண்ணறிவு, மருந்து,

முன்னுரை

              நவில்தொறும் நயம்தரும் நூல் திருக்குறள். எல்லாப் பொருளும் இதன்பால் உள அதனால் தொட்டனைத் தூறும் மணற்கேணிபோல படிக்கப் படிக்க மனிதகுலம் திருக்குறளால் அறிவுபெறுகிறது. இந்நூலைப் படிப்பவர்களின் அறிவுநிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. திருவள்ளுவர் கூறும் மருந்து அதிகாரத்தின் நுட்பமான செய்திகளை கூகுள் நோட்புக் எல்.எம் என்ற செய்யறிவுக் கருவி வழி, கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற ஊடகக்கோப்புகளாக மாற்றும் நுட்பங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

திருக்குறள் பெரிய மொழி மாதிரி நுண் பயிற்சி-Thirukkural Large Language Model (LLM) Fine-tuning

     


     நவில்தொறும் நயம் தரும் நூல் திருக்குறள். அதனால் கற்போரின் அறிவுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைத் தருகிறது. இன்றைய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால், பல வடிவங்களில் இணையத்தில் தரவுகளாக இந்நூல் கிடைக்கின்றது. திருக்குறளின் மூல பாடம், உரை தொடர்பான விளக்கங்களை உரை, ஒலி, காணொலி, குறுஞ்செயலி, சொல்லடைவு, தொடரடைவு வடிவிலும் பெறமுடிகிறது. திருக்குறள் ஏஐ என்ற தளம் ஒரு தேடுபொறிபோல செயல்படுகிறது.  சாட் ஜி.பி.டி, ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு உரையாடிகள் வழியாக குறள் விளக்கங்களைப் படங்களாகவும், காணொலிகளாகவும் உருவாக்கமுடிகிறது. என்றாலும் பதில்களின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது. இச்சூழலில் LLM என அழைக்கப்படும் பெரிய மொழி மாதிரிகளை திருக்குறளுக்கென நுட்பமாக வடிவமைத்தல் மற்றும் அவற்றுக்கான நுண்பயிற்சியளித்தல் காலத்தின் தேவையாகிறது.

திருக்குறள்- பெரிய மொழி மாதிரிகள், நுண்பயிற்சி

பொதுவான LLM மாதிரிகள், இணையத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தரவுகளைக் கொண்டு பயிற்சி பெற்றிருக்கும். சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற உரையாடிகள் இலவசம், கட்டணம் என இருநிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப தேடல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஜெமினி உரையாடி, ஜூலை 10-2025 தேதி வரையிலான தரவுகளைத் தமிழில் வைத்திருப்பதாக குறிப்பிடுகிறது. ஆனால், திருக்குறள் போன்ற ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த, ஆழமான அறவியல் கருத்துகளைக் கொண்ட ஒரு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து துல்லியமான பதில்களை உருவாக்கவும் இதுவரை உள்ள தரவுகள் போதுமானவை அல்ல.  ”LLM-கள் மனித மொழியைப் புரிந்துகொண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, உகந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்டவை. இவை Pretraining மற்றும் Fine-Tuning போன்ற செயல்முறைகள் மூலம் பயிற்சி பெறுகின்றன” (என்கிறார் கணியம் தமிழரசன் (2025). அதனால் திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரிகளை உருவாக்கி ஜெமினி போன்ற உரையாடிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) செய்வதன் மூலம், இக்கருவிகள் வழியாக திருக்குறள் தொடர்பான துல்லியமான பதில்களைப் பெறமுடியும்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் - SEO




Search Engine Optimization for Tamil e-Contents

குறிச்சொற்கள்

          தமிழ் மின் உள்ளடக்கங்கள், தேடுபொறி உகப்பாக்கம், தேடுபொறி மேம்படுத்தல், வலைப்பதிவு, மின்னூல், வலையொளி, Tamil E-Contents, SEO, Search Engine Optimization, Blog, E-Book, Youtube


 கட்டுரைச் சுருக்கம்

          அறிவைப் பெறும் வாயில்களுள் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள். ஆசிரியர்களுக்கு இணையாக இன்று இணையதளங்கள் வளர்ந்துள்ளன. இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் செய்திகளுள் பயனர்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறத் தேடுபொறிகள் உதவுகின்றன. தேடுபொறிகளால் மனிதர்களின் அறிவுப் பரப்பு விரிவடைந்துள்ளது. மொழி எல்லைகளைக் கடந்து அவரவர் தாய்மொழியில் பல நுட்பங்களையும் அறிந்துகொள்ளத் தேடுபொறிகள் உதவுகின்றன. தமிழ் மின் உள்ளடக்கங்களைப் பலரும் உருவாக்கினாலும், தேடுபொறிகளுக்கு இணையத்தில் உள்ள பல்வேறு தமிழ் வளங்கள் தெரியவில்லை. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் குறித்து நுட்பமாக எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

 

தேடுபொறி

          தேடுபொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில்  உள்ள தரவுகளிலிருந்து பயனர்கள் தேடும் தரவுகளைத்  திரட்டி வழங்குகிறது. இத்தரவுகளின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, விரைந்து வழங்குதல் ஆகிய நிலைகளில் தேடுபொறிகளின் தரநிலை மாறுபடுகிறது. “ஆர்ச்சி (Archie) தேடுபொறி“[1]  1990 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறியாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து யாகூ, கூகுள், பிங், பைடு என பல தேடுபொறிகள் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

சனி, 10 ஆகஸ்ட், 2024

தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகள்


மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பே மின்னூல் ஆகும். மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் மின்னூல்களை உலகளாவிய மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். இலவசமாகக் கூட மின்னூல்களை உருவாக்கி அதன் வழி வருமானம் பெறவும் இயலும். தமிழ் மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்துடன் தமிழ் மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளையும் இக்கட்டுரை வழியாகக் காண்போம்.

வியாழன், 7 டிசம்பர், 2023

தமிழ்ப் பேழை

 


தமிழ்ப்பேழை என்பது தமிழ் மொழியை இணையத்தில் வலுப்படுத்த, வளப்படுத்த, செழுமையாக்க ஒரு திட்டமாகும். ஆங்கில விக்சனரியில் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்சனரியில் 3.57 இலட்சத்திற்கான தமிழ் சொற்பதிவுகளே உள்ளன. ஆங்கிலத்தின் அளவிற்கு சொற்பதிவுகளை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்று.

சனி, 25 நவம்பர், 2023

செயற்கை நுண்ணறிவு உரையாடிகளில் தமிழ்

(Tamil in Artificial Intelligence Chatbots)

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்


               மனிதர்களை விலங்குகளுடன் வேறுபடுத்திக்காட்டுவது அறிவு. விலங்குகளைவிட மனிதர்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வதற்கு கல்வியே அடித்தளமாக அமைகிறது. அதனால் தான் வள்ளுவர் கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்குமான வேறுபாடு, விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடு என்பார். மனிதர்களின் அறிவால் உருவாக்கப்பட்ட கணினி, இயந்திர வழி கற்றல் வழியாக செயற்கை நுண்ணறிவுள்ள கருவியாக உருமாறி வருகின்றது. கணினியின் நுட்பங்களுள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு உரையாடிகளில் (chatbots) தமிழின் தற்கால நிலையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

 

புதன், 18 அக்டோபர், 2023

தமிழ் மின் உள்ளடக்கங்களும் உருவாக்க நுட்பங்களும்

 Tamil Electrical Content and Developing Technologies

முனைவா் இரா.குணசீலன்/ Dr.R.GUNASEELAN[1]

Valluvar said that counting and writing are like eyes for the life we ​​live. Since we understand the connection between numbers 0,1 and the Tamil text, and providing the electrical content to understand the computer, Tamil has grown to many levels on the Internet today. This article deals with the e-content of Tamils ​​and the technologies that create them to adapt to the ever-changing technological changes such as websites, blogs, android apps, dictionaries, translator techniques, Optical Character Recognition, e-books, videos, audio books.

Keywords – Dr.R.Gunaseelan, Tamil E - Content, Tamil Electrical Content,

E-book, web, blog, apps, ocr, dictionaries, முனைவா் இரா.குணசீலன், தமிழ் மின் உள்ளடக்கங்கள், மின்னூல்கள், அகராதிகள், விக்கிப்பீடியா,

             எண்ணும், எழுத்தும் நாம் வாழும் வாழ்க்கைக்குக் கண்களைப் போன்றன என்றார் வள்ளுவர். 0,1 என்ற எண்களுக்கும், தமிழ் எழுத்துகளுக்குமான தொடர்பைப் புரிந்துகொண்டு, கணினிக்குப் புரியுமாறு மின் உள்ளடக்கங்களை வழங்கியதால் இன்று இணையப் பரப்பில் பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்சியடைந்துள்ளது. இணையதளங்கள், வலைப்பதிவுகள், குறுஞ்செயலிகள், அகராதிகள், மொழிமாற்றி நுட்பங்கள், எழுத்துணரி நுட்பங்கள், மின்னூல்கள், காணொளிகள், ஒலிநூல்கள் என நாள்தோறும் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தமிழில் உள்ள மின் உள்ளடக்கங்களையும், அவற்றை உருவாக்கும் நுட்பங்களையும் இக்கட்டுரை இயம்புகிறது.

இணையதளங்களில் தமிழ் மின் உள்ளடக்கங்கள்

        தமிழ் மொழிசார்ந்த பல்வேறு செய்திகள் இணையதளங்களில் எழுத்து வடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் மின் உள்ளடக்கங்களாகக் கிடைக்கின்றன. கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தனி மனிதர்களும்  இணையதளங்களை உருவாக்கி தமிழ் சார்ந்த செய்திகளை உள்ளீடு செய்ய முடியும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ் எழுத்துக்களைக் கற்பித்தல் தொடங்கி தமிழ் ஆராய்ச்சி வரை இன்று பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக தமிழம் நெட், தமிழ் அநிதம்[2] அடிப்படைத் தமிழ் கற்க இத்தளங்கள் உதவுகின்றன. தமிழ் இலக்கியத் தொடரடைவு[3] தமிழாய்வு மாணவர்களுக்கு உதவியாக உள்ளது. மேலும் பல்வேறு துறைசார்ந்த பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்கள் பல ஆய்வுதொடர்பான பல்வேறு சிந்தனைகளை மின் உள்ளடக்கங்களாகக் வழங்குகின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முதல் கணினித் தமிழ் ஆய்வுகள் வரை தமிழ் இணையக் கல்விக்கழகம் [4]இணையதளம் உதவியாக(3)  உள்ளது. பல்வேறு துறை கற்றலுக்கும் இன்று என்.பி.டெல், சுவயம், யுடிமி[5]  போன்ற இணையதளங்கள் பயன்படுகின்றன. என்றாலும் இந்த இணையதளங்களில் தமிழ் சார்ந்த படிப்புகளை மின் உள்ளடக்கங்களாக உருவாக்கவேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். ஆசிரியர்கள் தமிழ் சார்ந்த பாடங்களை உருவாக்குவதும், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது.

புதன், 11 அக்டோபர், 2023

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைகள்

 


தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைகள்

Copyrights for Tamil e-Content

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

முன்னுரை

திறன்பேசி, மடிகணினி, பலகைக் கணினி ஆகிய கருவிகளிலும் மென்பொருள், குறுஞ்செயலிகள் என பல நிலைகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றுள் மின் உள்ளடக்கங்கள் குறிப்பிடத்தக்கன. Electronic content என்ற சொல்லைத் தமிழில் மின்னணு உள்ளடக்கம் என்று மொழிபெயர்க்கலாம். e-book என்ற சொல்லைத் தமிழில் மின் புத்தகம் அல்லது மின்னூல் என்று அழைப்பதுபோல, மின்னணு உள்ளடக்கம் என்ற சொல்லை மின் உள்ளடக்கம் என்று அழைக்கிறோம். தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமை வகைப்பாடுகளையும், காப்புரிமைபெறும் வழிமுறைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

காப்புரிமை (Copyrights)

காப்புரிமை என்பது பலவகைப்படும், பதிப்புரிமை (copyright), வணிகச் சின்னம் (Trademark),படைப்புரிமம் (Patent), புவிசார் குறியீடு (Geographical Indication), வணிக இரகசியம் (Trade Secret) என இதை வகைப்படுத்தலாம். பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும்  காப்புரிமை பெறலாம்.

 

செவ்வாய், 19 அக்டோபர், 2021

தேடுபொறிகளும் செயற்கை நுண்ணறிவுத் தமிழும்


மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது  இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு துறைகளிலும் இன்று செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்ந்து வருகிறது. தேடுபொறிகளுக்குத் தேவையான தமிழ் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

சனி, 5 ஜூன், 2021

கணினியும் தமிழும் - ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வு அழைப்பிதழ்



 சிவகாசி இராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் நிகழும் ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வில் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

திங்கள், 22 மார்ச், 2021

தமிழில் திறந்த கல்வி வளங்கள் - Open Education Resources in Tamil

 

தமிழில் திறந்த கல்வி வளங்கள்

Open Education Resources in Tamil


       மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. மொழிகளுள் தமிழ் மொழி தனிச்சிறப்புடைதாகும். தொன்மையாலும் தொடர்ச்சியான இலக்கிய மரபுகளாலும் புகழ் பெற்ற தமிழ் இன்று கணினி உலகில் புதிய புதிய நுட்பங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறது. குருகுலக் கல்வி, திண்ணைப் பள்ளி, பள்ளிக்கூடங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என கற்பிக்கப்பட்ட தமிழ் இன்று இணையதளங்கள் வழியாக உள்நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் மக்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது. இச்சூழலில் தமிழில் திறந்த கல்விவளங்களின் தேவை நிறைந்துள்ளது.

திறந்த கல்வி வளங்கள்  (open educational resources)

திறந்த கல்வி வளங்கள் என்பவை (OER) இலவசமாக அணுகக்கூடியவையாக அமைகின்றன, வெளிப்படையாக உரிமம் பெற்ற உரை, ஊடகம் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும்                             கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுபவை ஆகும். திறந்த கல்வி வளங்கள் எந்தவொரு பயனருக்கும் சில உரிமங்களின் கீழ் பயன்படுத்த, மீண்டும் கலக்க, மேம்படுத்த மற்றும் மறுபகிர்வு செய்ய பொதுவில் அணுகக்கூடிய பொருட்கள் மற்றும் வளங்களை வழங்குகிறது. இணையவழி படிப்புகள், விரிவுரைகள், பயிற்சிக்கட்டுரைகள், வினாடிவினா, கல்வி தொடர்பான கலந்துரையாடல், விளையாட்டு என இதன் உட்கூறுகள் பன்முகத்தன்மை கொண்டவையாகும். சான்றாக, கான் அகாதமி[i] காணொளி வடிவில் கல்விசார் உள்ளடக்கங்களை வழங்குகிறது, ஓபன்ஸ்டாக்ஸ்[ii] உயர்தர, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, வெளிப்படையாக உரிமம் பெற்ற பாடப்புத்தகங்களை வெளியிடுகிறது, அவை முற்றிலும் இலவச ஆன்லைன் மற்றும் குறைந்த செலவில் அச்சிடப்படுகின்றன. என்.பி.டெல்[iii] பொறியியல், அடிப்படை அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை யூடியூப் இணையம் வழியாக வழங்குகிறது. மேலும், சுவயம்[iv], சுவயம் பிரபா[v], ஈ பாதசாலா[vi], சோத்கங்கா[vii] ஆகியவற்றை இந்திய அரசு வழங்கும் திறந்த கல்வி வளங்களுக்கான தக்க சான்றுகளாக உரைக்கலாம்.

புதன், 15 ஜூலை, 2020

ஆர்வத்தை ஏற்படுத்தும் வினாடி வினா முறை


இணையவழியிலான கற்பித்தலில் மாணவர்களின் புரிதலை அறிந்துகொள்ளப் பல்வேறு முறைகளைப் பின்பற்றி வருகிறோம். அவற்றுள் Quizizz என்ற இணையதளம் வழங்கும் நேரலை வடிவிலான வினாடி வினா முறையை உருவாக்கும் வழிமுறைகளை விளக்குவதாக இப்பதிவு அமைகிறது.

சனி, 11 ஜூலை, 2020

மூடுள் மின் வகுப்பறை - 4 - வினா வங்கி, வினாடி வினா உருவாக்கம் I moodle A...


1. மூடுள் வகுப்பறை உருவாக்கம்
2. மூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக்கட்டுரை வழங்குதல்

3. மூடுள் மின் வகுப்பறை - 3 - வலைப்பதிவில் பகிர்தல்

மூடுள் மின் வகுப்பறை மேலாண்மை குறித்த தொடர்பதிவின் வரிசையில் இந்தப் பதிவானது, Aiken format என்ற முறையில் மூடுள் வகுப்பறையில் எவ்வாறு வினா வங்கியைத் தமிழில் உள்ளீடு செய்வது என்பதை செயல்முறைவழியாக விளக்குவதாக அமைகிறது.

ஞாயிறு, 14 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை I இடுகை வெளியீடு, தளவமைப்பு, தீம் (BtoA P...


BTOA 2 என்ற பெயரில் வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை என்ற தொடர்பதிவின் வரிசையில் இரண்டாவது பதிவாக இப்பதிவு வெளியிடப்படுகிறது.

இப்பதிவில் வலைப்பதிவில் எவ்வாறு நாம் இடுகைகளை வெளியிடுவது, அதன் தளவமைப்பு மற்றும் தீம் பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

சனி, 13 ஜூன், 2020

கூகுள் ஆவணத்தில் குரல் வழியாகத் தமிழ் எழுத்தை உருவாக்க..


கூகுள் ஆவணத்தில் குரல் வழியாகத் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் வழிமுறையை இக்காணொளி விளக்குகிறது.

வியாழன், 11 ஜூன், 2020

தமிழ் எழுத்துணரி நுட்பங்கள் இரண்டு lTwo Tamil OCR Techniques


படங்களிலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்தாக்கம் செய்தல், மின்வருடப்பட்ட நூல்களிலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்தாக்கம் செய்தல் ஆகிய இரு நுட்பங்களை கூகுள் ஆவணத்தைப் பயன்படுத்தி எழுத்துணரியாக்கம் செய்யும் வழிமுறைகளை செயல்முறையாக விளக்கியுள்ளேன். 

செவ்வாய், 9 ஜூன், 2020

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும்





கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும் என்ற இப்பதிவானது வலைப்பதிவு, யூடியூப் ஆகிய இரு தளங்களிலும் ஆட்சென்சின் இன்றைய நிலையையும், புதிய பதிவர்களுக்கான ஆட்சென்சு குறித்த அறிமுகமாகவும் அமைகிறது.



புதன், 3 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)


            புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.   சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன. வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் கலந்துரையாடுவதற்குமான வழிமுறைகள், இணையதளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் இலவசமாகத் தம் கருத்துகளை தம் மொழியில் வெளியிட இவ்வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.

செவ்வாய், 2 ஜூன், 2020

ஆசிரியர்களுக்குத் தேவையான 5 குரோம் நீட்சிகள்


குரோம் வெப்சுடோரில் கிடைக்கும் நீட்சிகளுள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஐந்து நீட்சிகளை அறிமுகம் செய்வதாக இப்பதிவு அமைகிறது.
விளக்கப் பகுதிகள்