வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 அக்டோபர், 2012

மாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்கள்.

நான் பள்ளியில் படித்த காலத்தில், பள்ளியிலிருந்தே திரையரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு இயற்கை, அறிவியல், விழிப்புணர்வு தொடர்பான ஆவணப்படங்கள் காண்பிப்பார்கள்..

இப்போதும் இந்த வழக்கம் சில பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களைத் திரையரங்கத்துக்கு அழைத்துச்சென்று “எந்திரன்” போன்ற படங்களைக் காண்பிக்கிறார்கள்.

திரைப்படம் என்பது ஆற்றல் வாய்ந்த ஊடகமாக விளங்குகிறது. இன்றைய தலைமுறையினர் அதிகமாகவே திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். இந்நிலையில் என் பார்வையில் மாணவர்கள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய சில படங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.

  • கல்வித்துறை சார்ந்தவர்கள் மாணவர்களை திரையரங்கு அழைத்துச்சென்று தான் காண்பிக்கவேண்டும் என்றில்லை. இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களிலேயே எல்சிடி உள்ளிட்ட திரையரங்கு வசதிகள் வந்துவிட்டன. அதனால் மாணவர்களின் எதிர்கால நலம் கருதி இப்படங்களை மாணவர்கள் காண வழிவகை செய்தல் வேண்டும்.

  •  பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக நிறையவே செலவுசெய்கிறார்கள். கீழ்காணும் திரைப்படங்களை குறுவட்டு (டிவிடி) களாகவாவது தன் குழந்தைகளுக்கு வாங்கித்தந்து கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில், தொடர் நாடகம் பார்க்கும் நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து இந்தப் படங்களைக் காணலாம்.


  • வலையுலக உறவுகளே என் பார்வையில் சிறந்ததாகக் கருதும் சில படங்களை மொழிப்பாகுபாடின்றி பட்டியலிட்டிருக்கிறேன். இதுபோல தங்கள் பார்வையில் மாணவர்கள் காணவேண்டிய படங்களாத் தாங்கள் கருதும் படங்களைப் பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் கீ்ழ்காணும் படங்களில் தாங்கள் பார்த்த படங்கள் மனதில் பதிந்த சிந்தனைகளையும் தாங்கள் பதிவு செய்தால் இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இந்தப் படங்களைப் பற்றிய விமர்சனங்கள் நிறையவே இணையப்பரப்பில் எழுதப்பட்டதால் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் தங்கள் முன் வைக்கிறேன்.

அகிம்சை


கல்வி


சட்டம்


பகுத்தறிவு


விடுதலை


நட்பு


தமிழர் நம்பிக்கைகள்

தன்மானம்


தன்னம்பிக்கை

அன்பே கடவுள்

மாணவர் உலகம்


கல்வியா? விளையாட்டா?
இன்றைய கல்வியின் நிலை


நாட்டுப் பற்று

தன்னையறிதலே கல்வி