வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

கல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education

 1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர்  எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே

2.    கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம்

கற்பதை மறப்பது. -ஆவ்பரி 

  3. மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது 

 - எமர்சன்

  4.    பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே 

   கல்வியறிவு பயன்படவேண்டும்  - பிளாட்டோ

  5.     இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவன்  இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும்  இறந்தவன். 

   - யூரிபிடிஸ்

  6.      பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத    

   பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது

    - ராபர்ட் கிரீன் இங்கர்சால்.

  7.      எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தல் வளர்வது கல்வி. - ஜிவெனால்

  8.      சான்றோன் ஆக்காத கல்வி, சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்   - போலிங் புரூக்

  9.   கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர்

  10.    வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! - பெர்னார்ட்ஷா

  11.          கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், 

  அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது’. -அரிஸ்டாடில்

  12.         எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்

 மம்மர் அறுக்கும் மருந்து - நாலடியார்.

  13.        கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  14.        கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள். -சார்லஸ் எஃப் கெட்டரிங்

  15.        கல்வி என்பது வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல அது நெருப்பை பற்ற வைக்கும் விஷயம் போன்றது - வில்லியம் பட்லர் ஈட்ஸ்.

  16.        மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே,

உண்மையான கல்வி - காந்திஜி

  17.         கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று,

  அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!

-எட்மண்ட்பர்க்

  18.        நல்ல கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா 

  ஆகிய மூன்றையும் ஒருமித்து வளர்க்கவேண்டும்.-மகாத்மா காந்தி

  19.        அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக்கொள்ளப் 

  பயன்படும் கருவி கல்வி - யங்

  20.       பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது. 

  கல்வி ஆபரணமல்ல, ஆடை – போப்

  21.         பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல் கல்வியினால் 

  ஆன்மா சிறப்படைகின்றது- ஜோசப் அடிசன்

  22.      கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை.

 கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர் - மரேஷால்

  23.       நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய 

  அறியாமையைப்பற்றி அறிவான்- விக்டர் ஹியூகோ.

  24. எந்த சிறந்ததை நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள 

 வேண்டியிருந்ததோ அதையே கற்றுக்கொடுங்கள் - ரிச்சர்ட் பாக்.

  25.       கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் 

  என்ற கருத்தில் எனக்கு  நம்பிக்கை உண்டு - ஸ்டீபன் கோவே.

  26.       கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது. 

  ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர். -பிளேட்டோ.

  27. கல்வியின் பெரிய நோக்கம் அறிவு அல்ல, செயல். 

  -ஹெர்பர்ட் ஸ்பென்சர்

  28.       ஞானம் வயதிலிருந்து கிடைப்பதல்ல, கல்வி மற்றும் கற்றலிலிருந்து வருகிறது. - அன்டன் செக்கோவ்

  29.       கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல, கல்வியே வாழ்க்கையே. - ஜான் டீவி

  30.       சுதந்திரத்தின் தங்கக் கதவைத் திறக்க கல்வி முக்கியமாகும். - ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

  31.        கல்வியின் நோக்கம் வெற்று மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும் - மால்கம் ஃபோர்ப்ஸ்

  32.       கல்வி என்பது இருளில் இருந்து வெளிச்சத்திற்குச் செல்வதாகும்- ஆலன் ப்ளூம்

  33.       ஒரு விதத்தில் - பொது அறிவு இல்லாமல் கல்வி பெறுவதை விட கல்வி இல்லாமல் பொது அறிவு இருப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. ராபர்ட் ஜி. இங்கர்சால்

  34.       கல்வியின் மிக உயர்ந்த விளைவு சகிப்புத்தன்மை. - ஹெலன் கெல்லர்

  35.       எப்படிக் கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கையின் மிக 

  முக்கியமான திறமை.- டோனி புசன்

  36.       கற்றலை நிறுத்தும் எவரும் வயதானவராகிவிடுவார்கள், இருபது வயதானாலும் எண்பது வயதானாலும். கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயம். -  ஹென்றி ஃபோர்டு

  37.       குறைவான கற்றல் ஒரு ஆபத்தான விஷயம்  

  -  அலெக்சாண்டர் போப்

  38.       கற்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் தினமும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டால், உங்கள் போட்டியின் 99% ஐ நீங்கள் வெல்வீர்கள். - ஜோ கார்லோசோ

  39.       தொடர்ச்சியான கற்றல் என்பது எந்தவொரு துறையிலும் வெற்றிபெற குறைந்தபட்ச தேவை! - டெனிஸ் வெய்ட்லி

  40.      கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. பி.பி. கிங்

  41.        நாம் கற்கவில்லை, நாம் கற்றல் என்று அழைப்பது 

நினைவுகூரும் செயல் மட்டுமே. பிளேட்டோ

  42.       கற்றல் ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை. - விளாடிமிர் லெனின்

  43.       வெற்றிக்கு எந்த ரகசியங்களும் இல்லை. திட்டமிடல், 

  கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றல் ஆகியவற்றின் 

விளைவே வெற்றி. - கொலின் பவல்

  44.       நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும், நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்! - மூர்

  45.       கல்விச்சாலையொன்று திறப்பவன் 

  சிறைச்சாலையொன்று மூடுபவன். - விக்டர் ஹூகோ

  46.      முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்கவேண்டும். - எச். ஜி. வெல்ஸ்

  47.       ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி. -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

  48.       கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று. 

பட்டம் பதவிகளைக் குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை விளங்கச் செய்வது

- திரு. வி. கலியாணசுந்தரனார்

  49.      கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும்   திறன் - ராபர்ட் பிராஸ்ட்

  50.      நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை. - சுவாமி விவேகானந்தர்.

 


செவ்வாய், 26 மே, 2020

நிற்க அதற்குத் தக



  மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும் அடைப்படையாகிறது. உலக மொழிகளுள் தொன்மையானது, தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண மரபுடையது, காலத்திற்கேற்ப, தன்னைத் தகவமைத்துக்கொள்வது என பல்வேறு சிறப்புகளையுடைய தமிழ் மொழிக்கு, மேலும் பெருமை சேர்க்கும் தலைசிறந்த இலக்கியம் திருக்குறளாகும். உலகமே போற்றும் திருக்குறளை கற்பதும், கற்பிப்பதும் நமது கடமை மட்டுமின்றி காலத்தின் தேவையாகவும் அமைகிறது.

திருக்குறள் கற்றல்
      கற்க, கசடறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என்று கல்வி கற்கும் நுட்பம் குறித்து வள்ளுவர் கூறும் சிந்தனையை திருக்குறள் கற்கும் அடிப்படை நுட்பமாகவும் கொள்ள இயலும். வள்ளுவர் கூறும் நுட்பத்தை ஆழ்ந்து நோக்கினால், 1. அறிதல்  2. தெரிதல்  3. தெளிதல் 4. நிற்க அதற்குத் தக ஆகிய கருத்துக்களைக் கற்றல், கற்பித்தல் சார்ந்த நுட்பங்களாகவே காணமுடிகிறது.

வெள்ளி, 22 மே, 2020

வாத்தியார் பிள்ளை மக்கு!


வைத்தியன் பிள்ளை நோயாளி, வாத்தியார் பிள்ளை மக்கு என்ற பழமொழியைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வாத்தியார் பிள்ளை என்பதால் இந்தப் பழமொழி என்னை அதிகமாகவே சிந்திக்கவைத்திருக்கிறது. எனது அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தார், நான் கல்லூரியில் ஆசிரியராக உள்ளேன். என் மகள் வகுப்பில் முதன்மையான மாணவியாகவே படித்துவருகிறாள். அதனால் இந்தப் பழமொழியைக் கேட்கும்போதெல்லாம் மனம் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாகிறது.
இது போன்ற பழமொழிகள் சொல்லப்பட்ட காலம் அதன் நோக்கம், காலப்போக்கில் அதை மக்கள் தவறாகப் புரிந்துகொள்வது என்பது இயற்கையே.. 
வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான், திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான் என்பது வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான், போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று மாறியது போல, இந்தப் பழமொழியும் சொல்லபட்ட நோக்கமும் வழங்கப்படும் பொருளும் மாறியிருக்கலாம். எனது பார்வையில் இந்தப் பழமொழியின் இன்றைய பொருளையும் எனது கருத்தையும் பதிவுசெய்கிறேன்.

வியாழன், 21 மே, 2020

முதல் ஆசிரியரும், இரண்டாவது பெற்றோரும் அறிந்துகொள்ளவேண்டிய கல்விச்சிந்த...





பெற்றோரும், ஆசிரியரும் அறிந்துகொள்ளவேண்டிய

கல்விசார்ந்த 28 சிந்தனைகளின் தொகுப்பாக இப்பதிவு பகிரப்படுகிறது.

வியாழன், 28 செப்டம்பர், 2017

செவ்வாய், 28 மார்ச், 2017

ஓட்டுநருக்கும், ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?


ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் எஸ்.இராதகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரிம் ஒரு மாணவர் எழுந்து,
“Sir, what is the difference between a rail engine driver and teacher? என்று கேட்டார்.
தொடர்வண்டி ஓட்டுநருக்கும், ஆசிரியருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என யாவரும் ஆவலுடன் காத்திருந்தனர். யாரும் எதிர்பாரத பதிலை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்.
“The Driver minds the train and the teacher trains the mind” இந்த பதில் யாவரையும் சிந்திக்கவைத்தது.
இன்றைய சூழலில், மாணவர்களை மதிப்பெண் எடுக்கவைப்பதும், அவர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வழிமுறைகளைக் கூறுவதும் தான் ஆசிரியர்களின் பெரிய பணியாக மாறிவிட்டது,

மாணவர்கள் நாள்தோறும் சிந்திக்க பயிற்சியளிப்பதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி! இதை உணராததால் தான் பட்டதாரிகள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

சில ஆயிரம் அரசுப் பணிகளை அறிவித்தால் பல லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள்.

முதுநிலைப் படிப்பை முடித்த மாணவர்கள் கூட தனக்குள் இருக்கும் திறமை என்ன? என்று தெரியாமலேயே வெளியில் வருகின்றனர். காரணம் அவர்கள் மனப்பாடம் செய்யக் கற்ற அளவுக்கு, சிந்திக்கக் கற்கவில்லை.

பெற்றோரும் இன்றைய ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, தன் குழந்தை நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும்! நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்றுதான் எந்தப் பெற்றோரும் தம் குழந்தை சிந்திக்கப் பழகவேண்டும். என்று நினைப்பதில்லை.

ஆசிரியப் பணி என்பது பிற பணிகளிலிருந்து வேறுபட்டது. கலை, அறிவியல், வரலாறு என எல்லாப் பணியாளர்களையும் உருவாக்கும் அரிய பணிதான் ஆசிரியப்பணி. மாணவர்களின் மனங்களை வாசித்து அவர்களை சிந்திக்கப் பயிற்சியளிக்கும் சுதந்திரத்தை ஆசிரியருக்குக் கொடுத்தால் உலகமே போற்றும் சாதனையார்களை அவர்கள் உருவாக்குவார்கள்!

கல்விச் சாலைகள் அப்போதுதான் மாணவர்களின் விருப்பத்துக்குரிய இடமாகத் திகழும்!

இன்றைய நிலை தொடர்ந்தால் கல்விச்சாலைகள் மாணவர்களின் விபத்துக்குரிய இடமாகத்தான் அது திகழும்!

ஞாயிறு, 26 மார்ச், 2017

உலகின் மிகப் பெரிய நூலகம்

 
3.7 கோடிப் புத்தகங்கள்! மற்றும் அச்சுப் பிரதிகள்,
35 லட்சத்துக்கும் அதிகமான ஒலிப் பதிவு ஆவணங்கள்!
1.4 கோடிப் புகைப் படங்கள்!
55 லட்சம் வரைபடங்கள், ஓவியங்கள்
470 மொழிகளில்..
16 கோடி தொகுப்புகள்!
838 மைல் நீள நூலகத்தின் புத்தக அலமாரிகள்!
இந்நூலகத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, கெய்ரோ, ரியோ டி ஜெனிரோ போன்ற உலகின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.
என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட அமெரிக்காவின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்று  லைப்ரரி ஆப் காங்கிரஸ்!
நாடாளுமன்றத்துக்குப் பயனுள்ள புத்தகங் களை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 5,000 டாலரை ஒதுக் கினார் அப்போதைய அதிபர் ஜான் ஆடம்ஸ்.
1800 ஏப்ரல் 24-ல் இந்த நூலகம் தொடங்கப் பட்டது. 12 ஆண்டுகள் கழித்து, தலைநகர் வாஷிங்டனுக்குள் நுழைந்த பிரிட்டன் இராணுவம், நகரைத் தீக்கிரையாக்கியது. இதில் இந்த நூலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.
முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், தனது சொந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைத் தந்து நூலகத்தைப் புதுப்பிக்க உதவினார். அவர் நடத்திவந்த அவரது சொந்த நூலகம்தான் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா விலேயே மிகப் பெரிய நூலகம். 2 முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தை விரிவாக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் அவர்.
1851-ல் மீண்டும் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதில் நூலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நூல்கள் எரிந்து நாசமாயின. தாமஸ் ஜெபர்ஸன் கொடுத்த பல நூல்களும் தப்பவில்லை. இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவாகச் செயல்பட்டு புத்தகங்களைச் சேகரித்து மீண்டும் புதுப்பித்தது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் புத்தகங்கள் சேகரிக்கப் பட்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக் காவின் அறிவிக்கப்படாத தேசிய நூலக மாகவும், உலகின் மிகப் பெரிய நூலகமாகவும் விரிவடைந்திருந்தது ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம்.

நூலக இணையதள முகவரி  - https://www.loc.gov/

செவ்வாய், 29 ஜூலை, 2014

கேள்வி கேட்கவேண்டிய முறை (தென்கச்சியார்)



முன்னொரு காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டார்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அவர்களுக்கிடையில் விவாதம் எழுந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கூறினார்கள். இருந்தாலும் அவர்களுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்கள் தங்கள் சந்தேகத்தை உத்தாலக மகரிசியிடம் சென்று கேட்டனர்.
ஆனால் உத்தாலகரோ, “இதற்கு ஒருவரால்தான் விளக்கம் கொடுக்கமுடியும். அவர்தான் மன்னர் அசுவபதி. மகாஞானி அவர். எனவே நாம் அனைவரும்அவரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்கலாம்.”என்றார்.
அதன்படியே அனைவரும் அசுவபதி மன்னரிடம் சென்றனர்.
அசுவபதி எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவா்களுக்கு உயர்ந்த ஆசனம் கொடுத்து விதிமுறைப்படி வணங்கினார். பிறகு நல்ல உணவு பரிமாறி அவர்கள் அனைவரையும் சாப்பிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் ரிசிகள் யாரும் சாப்பிடாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

இதை அசுவபதி மன்னர் பார்த்தார்.அவர்  அவர்களை நோக்கி ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்? நான் கொடுத்த உணவு குற்றமுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமில்லை. என் ராச்சியதில் திருடர்கள் கிடையாது! குடிகாரர்கள் கிடையாது! ஆசாரமற்ற ஆண்கள் கிடையாது! அதனால் ஆசாரமற்ற பெண்களும் கிடையாது! என்றார்.

அதற்கு அந்த ரிசிகள்,  “ நாங்கள் இங்கே உங்களுடைய உணவை உட்கொள்வதற்காக வரவில்லை. ஜீ(சீ)வாத்மா, பரமாத்மா பற்றிய எங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவே உங்களிடம் வந்திருக்கிறோம். என்று தெரிவித்தார்.
உடனே அசுவபதி மகாராசா, ” இன்று உணவு அருந்துங்கள். நாளைக்கு அதைப்பற்றி யோசிக்கலாம்” என்று தெரிவித்தார். முனிவர்களும் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு உணவு அருந்தினார்கள்.
அதன்பிறகு அவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தங்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர்.
அப்போது முனிவர்களுள் ஒருவர், “அசுவபதி மன்னர் நாளைக்கு இதைப் பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர, பதில் சொல்கிறேன் என்று சொல்லவில்லையே!” என்றார் அவர் அவ்விதம் கூறியதும், மகாராசா இப்படிச் சொன்னதற்குக் காரணம் என்னவாக இருக்கும்!” என்று முனிவர் அனைவரும் தங்களுக்குள் யோசிக்க ஆரம்பித்தனர். அப்போது மகரிசி உத்தாலகருக்குப் பளிச்சென்று காரணம் புரிந்தது.
உடனே அவர் மற்ற முனிவர்களைப் பார்த்து, ”நாம் எல்லோரும் ரிசிகள். நன்றாக விவரம் தெரிந்தவர்கள். அப்படியிருந்தும் ஒரு விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றார். எந்த விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று மற்ற முனிவர்கள் வினவினார்கள்.

உத்தாலகர் விளக்கம் கூறினார் – நம்முடைய சந்தேகத்தை மன்னர் அசுவபதியிடம் கேட்கவேண்டிய முறையில் நாம் கேட்கவில்லை.நாம் உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு அவரிடம் விளக்கம் கேட்டது சரியில்லை” என்றார் உத்தாலகர்.
அவர் கூறியதைக் கேட்டபிறகுதான் முனிவர்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது. மறுநாள் முனிவர்கள் அனைவரும் அசுவபதியிடம் சென்றார்கள்.  ஒரு சீடன் எப்படி குருவை நாடிப் போகவேண்டுமோ, அந்த முறையில் பணிவோடு, முறைப்படி அசுவபதியை வணங்கி தங்கள் சந்தேகத்தைக் கேட்டார்கள்.  
அவரும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கொடுத்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எதையும் கேட்கவேண்டிய முறைப்படி கேட்கவேண்டும் என்பதுதான்!
ஒரு விசயத்தை எடுத்துச்சொல்பவர் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். கேட்டுத்தெரிந்துகொள்பவர் தாழ்ந்த இடத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் கேட்பர் அக்கறையாகக் கவனித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். இது கௌரவப் பிரச்சினை இல்லை.

( இன்று பாடம் கேட்பவர் அமர்ந்துகொண்டும், பாடம் சொல்லித்தருபவர் நின்றுகொண்டும் இருப்பதை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டுக் காணும்போது, பெரியவர்கள் ஏன் அடிக்கடி நான் அந்தக்காலத்துல படித்தவன் என்று சொல்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.)

தொடர்புடைய இடுகை

அந்தக் காலத்து எட்டாவது

வியாழன், 10 ஜூலை, 2014

கலித்தொகை சொல்லித்தரும் வாழ்க்கைப்பாடம்.


நாம் எந்தப் பொருள் வாங்கினாலும் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற செய்முறைக் குறிப்பேடு கிடைக்கிறது. ஆனால் நாம் பிறந்தபோது இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று அனுபக் குறிப்பேடுகளோடு பிறக்கவில்லை. இன்று பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித்தர திரும்பிய பக்கமெல்லாம் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித்தர பயிற்சி நிலையங்கள் பெரிதும் இல்லை. கற்றவர்கள் அறிவார்கள் நல்ல தமிழ் இலக்கியங்கள் நமக்கு வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கின்றன என்று..
கலித்தொகை சொல்லும் பாடம் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டியதாக உள்ளது.

தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளக் காலம் தாழ்த்தி வருகிறான். அப்போது தோழி அவனிடம் தலைவியின் ஆற்றாமையைக் கூறி “நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்” எனச் சொல்வதாக அமையும் அகப்பாடல் இது.
இப்பாடல் தரும் கருத்துக்களை உணர்ந்த யாரும் செய்நன்றி மறக்கக்கூடாது!, சொன்ன சொல்லைக் காப்பாற்றவேண்டும் என எண்ணுவர். இதுவே இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.
பாடலுக்குச் செல்வோம்.
கடலா? போர்க்களமா?
வரிசையாக உள்ள தோணிகள் களிறுகளாகவும், அவைகளின் ஒலி பறையாகவும், கரையைச் சேர்ந்த அழகிய சிறகுகளை உடைய பறவைகள் படையாகவும் கொண்டு அரசன் பகைவர் மேல் படையெடுத்துச் செல்லுவதைப்போல வலிமையான கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே! நான் சொல்வதைக் கேள்..
வாழ்க்கைப் பாடம்
தனக்குப் பாடம் கற்பித்த ஆசான், தன்னிடமிருந்து ஒன்றும் பெறாமல் மனம் வருந்தியபோது, தன்கைப் பொருளைப் பகுத்து கைமாறாகக் கொடுத்து உண்ணாதவனுடைய செல்வம்,
தான் கற்ற வித்தையைத் தவறான வழியில் பயன்படுத்துபவனுடைய செல்வம்,
தனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டபோது உதவியவர்களுக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டபோது உதவாதவனுடைய செல்வம் ஆகிய இவையெல்லாம் தாமாகவே தேய்ந்து அழிந்துபோகும். அதுமட்டுமன்றி, அவனுடைய செய்நன்றிக்கேடு, உடம்பினை ஒழித்து உயிர்போன போதும் அதை அனுபவிக்கமால் போகாது.
உறவினர்கள் மனம் வருந்தும் படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள்போலத் தாமாகவே தேய்ந்து அழியும்,
பிறர் நம்புமாறு சூளுரைத்தவன் தான் சொன்ன சொல்லைக் காக்காமல் பொய்த்துப் போனால் தானாகவே தேய்ந்து போவான். சூளுறவினைப் பொய்த்த தீவினை, மறுமைக்கண் வாளின்வாய்க் கூரிதாகவென்று சொர்க்கம் பெற்றானாயினும், அது அவனை அழிக்காமல் விடாது.
தலைவ!
செய்நன்றிக் கேடும், சூளுறவு பொய்த்தலும் ஆகியவற்றின் கேடுகள் யாம் முற்கூறிய அத்தன்மையின. நீ அத்தன்மைத்தாதலை நினைத்துப்பார்!
தன் பகைவனோடு சினந்த அரசன், பகை வேந்தன் கோட்டையின் புறத்தே வந்து முற்றுகை வினையான், தான் அடையும் வருத்தம் போல் இவள் வரைவு கடிதின் முடித்தற்கு, விரைந்து வரும் நெஞ்சமோடு பெரிதும் வருந்தினள். அவ்வருத்தம் நீங்க விரைந்து தலைவியை நீ திருமணம் செய்துகொள்வாய் எனத் தோழி தலைவனை வேண்டிக்கொள்கிறாள்!
பாடல் இதோ,
நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்

கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்

எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்

வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்துக் காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

தோழி தலைவனிடம் சொன்னது

கலித்தொகை -149
பாடலின் வழியே…
1.   செய்நன்றி மறத்தல் கூடாது, சொன்ன சொல்லைக் காக்கவேண்டும் என இருபெரும் வாழ்வியற் கடமைகளை இக்கலித்தொகைப் பாடல்  அழகுபட எடுத்துமொழிகிறது.