வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் இலக்கிய விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இலக்கிய விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜூலை, 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு -3

அன்பான தமிழ் உறவுகளே...




என்ற தொடரில் இந்த வாரம் உங்களோடு தமிழறிஞர்கள் குறித்த 

வினாக்களை முன்வைக்கிறேன்.

தாங்கள் நன்கறிந்த தமிழறிஞர்கள் இவர்கள்...

கீழ்க்காணும் பெயர்களில் தான் தமிழுலகம் அன்புடன் இவர்களை 

அழைத்துவருகிறது...

இவர்களின் இயற்பெயர் என்ன? என்பதுதான் இந்த வார இலக்கிய 

விளையாட்டுக்கான வினா..

உங்கள் தமிழறிவை தன்மதிப்பீடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே..

இக்கேள்விகளுக்கான சரியான பதிலை நாளை மாலை வெளியிடுகிறேன்.

வினாக்கள் இதோ..


17. பொய்யா மொழிப் புலவர்? 
18. தமிழ் மூதாட்டி?
19 மொழி ஞாயிறு?
20. தமிழ் மாணவர்? 
21. தமிழ்த் தாத்தா? 
22. தமிழ்த் தென்றல் 
23. தமிழ் நாடகத் தந்தை? 
24. தமிழ் வால்டர் ஸ்காட் 
25. தமிழா் தந்தை? 
26. தென்னாட்டு பெர்னாட்சா? 
27. தமிழ் மாப்பசான்? 
28. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை? 
29. முத்தமிழ்க் காவலர்? 
30. தமிழறிஞர் ?
31. மகா கவி? 
32. புரட்சிக் கவிஞர்? 
33. உவமைக் கவிஞர்? 
34. மு.வ? 
35. தமிழண்ணல்? 

தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பர்களே...

இதோ சரியான பதில்கள்..




17. பொய்யா மொழிப் புலவர் – திருவள்ளுவர்
18. தமிழ் மூதாட்டி – ஔவையார்
19 மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
20. தமிழ் மாணவர் – வீரமாமுனிவர்
21. தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாதய்யர்
22. தமிழ்த் தென்றல் – திரு.வி.க
23. தமிழ் நாடகத் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்.
24. தமிழ் வால்டர் ஸ்காட் – கல்கி
25. தமிழா் தந்தை – சி.பா.ஆதித்தனார்
26. தென்னாட்டு பெர்னாட்சா – அறிஞர் அண்ணா
27. தமிழ் மாப்பசான் – ஜெயகாந்தன்
28. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலையடிகள்
29. முத்தமிழ்க் காவலர் – கி.ஆ.பெ.விசுவநாதம்
30. தமிழறிஞர் – கி.வ. ஜகநாதன்
31. மகா கவி - பாரதியார்
32. புரட்சிக் கவிஞர் – பாரதிதாசன்
33. உவமைக் கவிஞர் - சுரதா
34. மு.வ – மு.வரதராசன்
35. தமிழண்ணல் – இராம பெரியகருப்பன்


செவ்வாய், 1 ஜூலை, 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு - 2

அன்பான தமிழ் உறவுகளே,

தமிழ் இலக்கிய விளையாட்டு -1 என்ற தொடருக்கு மறுமொழி வழியாகத் தாங்கள் தெரிவித்த பதில்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இத்தொடரில் வாரந்தோறும் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சுவையான பகுதிகளைக் காட்சிப்படுத்தவிருக்கிறேன். இந்த வாரத்துக்கான கேள்விகளை கீழே படங்களாகத் தந்துள்ளேன்.

இதற்கான சரியான பதில்களை நாளை மாலை வெளியிடுவேன். தங்கள் தமிழறிவைப் மதிப்பீடு சொல்வதாக இத்தொடர் அமையும் என நம்புகிறேன். நண்பர்களே தங்கள் மறுமொழிகள் வழியே கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள் பார்க்கலாம்..

07

---
08

---
 09
--- 
10

---
 11
---
 12
--- 
13

---
 14
---
 15

--- 
16


அன்பான தமிழ் உறவுகளே..
தங்கள் மதிப்புமிக்க மறுமொழிகளுக்கு முதலில் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். பலர் சரியான பதிலளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
கீழே படங்களுக்கான சரியான பதில்களை அளித்துள்ளேன். தங்கள் பதில்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

7. மனுநீதிச் சோழன்.

8. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
   உழந்தும் உழவே தலை – திருக்குறள் -1031

9. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
   அச்சாணி அன்னார் உடைத்து - திருக்குறள் -667

10. கான முயலெய்த அம்பினில் யானை
   பிழைத்தவேல் ஏந்தல் இனிது. - திருக்குறள் -772

11. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

12. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
    நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
(ஒரு வீட்டுக்கு இரவு நேரத்தில் திருடச் சென்ற திருடன் அங்கு இருந்த நாய் சிலையைக் கண்டு உண்மையான நாய்தான் என அஞ்சி ஓடும்போது கம்பிவேலிகளில் சிக்கிக்கொண்டான் காலையில் அவனை அதிலிருந்து மீட்ட ஊரார் அவனை அந்த வீட்டில் அந்த நாய் சிலைக்குக் கீழே கட்டிப்போட்டார்கள். அப்போதுதான் அந்தத் திருடன் அது நாய் அல்ல நாயினது சிலை என்பதை உணர்ந்தான். அவன் இரவு நாயாகப் பார்க்கும்போது அங்கு சிலை இல்லை. கல்லாகப் பார்க்கும்போது அங்கு நாய் இல்லை. இதைத்தான் இந்தப் பழமொழி கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என உணர்த்துகிறது.)

13. ஆயிரம் போய் சொல்லி கல்யாணம் செய்.
(ஆயிரம் பேருக்குப் போய் சொல்லிக் கல்யாணம் செய் என்பதில் போய் என்பதை பொய் என்று ஆக்கிவிட்டோம்)

14. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

15. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த சொல்லும் காலமெல்லாம் கூட வராது.

16. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்.

(அடி என்பது திருவடி என்றும் இரண்டடி(குறள்) நாலடி (நாலடியார்) என்றும் பொருள் கொள்வதுண்டு.)

ஞாயிறு, 22 ஜூன், 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு

தமிழ் இலக்கியங்களையும், தமிழர் பண்பாட்டையும் உலகுபரவி வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக, தமிழ் இலக்கிய விளையாட்டு என்ற தொடரை எழுதவிருக்கிறேன். இத்தொடரில் சில படங்களை வெளியிடுவேன். அந்தப் படம் ஏதோ ஒரு தமிழ் இலக்கியத்தையோ, அவ்விலக்கியத்தில் உள்ள பாடலையோ நினைவுபடுத்துவதாக அமையும். படத்தோடு தாங்கள் கண்டறிவதற்கான குறிப்பையும் வழங்குவேன். தாங்கள் அதைக் கண்டறிந்து மறுமொழியில் தெரிவிக்கவேண்டும். இடுகை வெளியிட்ட மறுநாள் அதன் சரியான பதிலை நான் தெரிவிப்பேன்.

நான் என் மாணவர்களுக்கு விளையாட்டாகப் பாடம் கற்பிக்க பயன்படுத்திய படங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே இத்தொடரை நான் தொடங்க அடிப்படையாக அமைந்தது. 

இன்று திருக்குறள் மற்றும் பழமொழி குறித்த தேடலாக விளையாட்டு அமைகிறது.


1.
2
3
4

5
6


அன்பான தமிழ் உறவுகளே எனது புதிய முயற்சிக்குத் தாங்கள் தந்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமொழி வழியே நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த பதில்கள் தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றையும், உங்கள் தமிழார்வத்தையும் எடுத்தியம்புவதாக அமைந்தது.

படங்களுக்கான பதில்கள்.



  1. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
  2. மழலைச்சொல் கேளா தவர்.
    குறள் 66: 

  3. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
  4. நாவினாற் சுட்ட வடு.
    குறள் 129: 

  5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
  6. உள்ளத் தனையது உயர்வு.
    குறள் 595:

  7. நுணலும் தன் வாயால் கெடும்

  8. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,

  9. மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்