பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 2 பிப்ரவரி, 2018
சங்கஇலக்கியப் பொன்மொழிகள்
Labels:
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 14 மார்ச், 2017
நாமும் நடிகர்களே!
Labels:
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்,
புறநானூறு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 20 பிப்ரவரி, 2017
நேரில் கண்ட சாட்சி வேண்டுமா ?
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது
தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த
கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக்
குறுகிய கரியில்லை – கலித்தொகை – 125
தாங்கள்
செய்யும் தீச்செயல்களை நேரடியாகப் பார்த்தவர்கள் இல்லை என்று நெஞ்சறியச் செய்த கொடிய
செயல்களை மற்றவர்களிடமிருந்து மறைத்துவைத்தாலும், செய்த அவர்கள் மனம் அதை நன்கறியுமாதலால்
அதனைக் காட்டிலும் வேறு சான்று தேவையில்லை!
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 18 பிப்ரவரி, 2017
ஈகை என்பது..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 23 ஜனவரி, 2017
நீதியும் மழையும்
Labels:
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
கடல் மணலும் - மனிதர் வாழ்வும்!
Labels:
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 20 அக்டோபர், 2014
இத்தனை அழகா இளவேனில்!
கடைசி தலைமுறை என்ற தலைப்பில்
முகநூலில் படித்ததில் பிடித்தது,
1.ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
1.ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
2.செல்போன்ல பட்டன பார்த்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
இப்படி
கணினியும், திறன்பேசியும் நம் உலகை நிறையவே மாற்றிவிட்டன. இன்றைய அறிவியலின்
குழந்தைகளாக வாழும் நாம்,
இயற்கையின்
குழந்தைகளாக வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை சங்கஇலக்கியங்கள் வழியாகக்
காணம்போது வியப்புதான் தோன்றுகிறது.
இதோ ஒரு
கலித்தொகை பாடல்,
தலைமக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு
பல தூதுப் பொருள்களையும் கேட்டிருப்போம் இளவேனிற் பருவமே தலைவனின் வரவைச் சொல்லும்
தூதாக வந்ததாக இப்பாடல் மொழிகிறது,
தலைவன் பிரிந்து சென்றுள்ளான்.
அவன் குறித்த இளவேனிற் காலம் வந்தது. அவன் இன்னும் வரவில்லையே என்று அப்பருவம் கண்டு
தலைவி ஆற்றாது வருந்தினாள். தோழி காலத்தை நோக்கி,
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
அறிவு கெட நின்ற வறுமை!
மக்கள்தொகைப்
பெருக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், தனியார்மயமான கல்வி என எல்லாவற்றுக்கும்
காரணமான அரசின் திறமையற்ற ஆட்சிமுறை யாவும் சேர்ந்து நம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில்
அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அதனால் படித்த குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
வறுமை
ஒரு மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.
நெருப்பில்கூட
ஒருவனால் தூங்கமுடியும் ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது
என்பார் வள்ளுவர். இதனை,
நெருப்பினுள்
துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும்
கண்பாடு அரிது
திருக்குறள்
– 1049
என்ற
குறள் சுட்டும்.
வறுமையைப்
போலத் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்
எனவும் உரைக்கிறார். இதனை,
இன்மையின்
இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே
இன்னா தது.
திருக்குறள்
– 1041
என்ற
குறள் வழி உணரலாம்.
வறுமை மனிதனின் அறிவைக் கெடுத்துவிடும் என்ற
உண்மையை உணர்த்தும் புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும்
பழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்?
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு
ஆகு என்னும் பூசல் போல
வல்லே களைமதி அத்தை – உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூா்மையே!
புறநானூறு 266
சோழன்
உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பெருங்குன்றூா்க் கிழார் பாடியது.
பயன்மிக்க
வான்மேகம் மழையைப் பொழியாது நீங்குதலால் நீர்நிலைகள் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும்
துளைபொருந்திய நீண்ட காம்பைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் கதிர்போன்ற கோட்டினைக்
கொண்ட சுழித்த முகத்தை உடைய நத்தையின் ஏற்றை செருக்கினால் பெண்ணாகிய இளைய சங்குடன்
பகற்காலத்தே கூடி மகிழும். இத்தகைய நீா்வளமிக்க வயல்களைக் கொண்ட நாட்டையும் வெற்றிச்சிறப்பையும்
உடையோய்!
வானளாவ
உயா்ந்த குடையையும், வலிமைமிக்க குதிரையினையும், உடைய சென்னி!
அறிவுமிக்க
சான்றோர் ஒருங்கிருந்த அவையில் சென்று ஒருவன் யானுற்ற துன்பத்துக்குத் துணையாய் நீவிர்
எனக்குப் பற்றாக வேண்டும். என்னும் முறையீட்டை அவா்கள் விரைந்து தீர்பார்கள். அதுபோல
என்னை நினைந்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்க்கு விருந்தளிக்க இயலாமல் ஒளியச் செய்யும்
நன்மை இல்லாத இல்வாழ்க்கையை உடையவன் நான். ஐம்புலன்களும் குறைவின்றிப் பொருந்திய என்
உடம்பில் அவற்றால் ஆகிய பயனை அடையமுடியாதபடி எனது அறிவு கெட நிலைபெற்ற வறுமையை விரைவாகதத்
தீர்பாயாக.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 23 ஜூலை, 2014
நன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா?
நன்றி நவில்தல் தமிழரின் சிறப்புடைய பண்பாடுகளுள் ஒன்றாகும். இப்போதெல்லாம் தேங்ஸ் என்று ஒரே வார்த்தையில் தன் நன்றி உணர்வை யாவரும் தெரிவித்துவிடுகின்றனர். நன்றியை வார்த்தைகளால் பலவழிகளில் நாம் வெளிப்படுத்தமுடியும். சிலர் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும், சொல்வதுண்டு.
வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும்
கலகலவென்று பூச்சொரியும்
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்
நனைத்ததற்கு நன்றியாம்
மரம் சொன்னது :
''இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''
என்பார் கவிஞர் வைரமுத்து.
கலித்தொகையில் ஒருபாடல் நன்றியைச் சொல்ல வார்த்தைகள் தேவையா? என்று கேட்கிறது.
அகன்ற ஆறுகள், பரந்த உலகிடத்து, உயிர்களெல்லாம் வாழும்படி எங்கும்
நீரைப் பரந்து ஊட்டிப் பாதுகாத்தன. அந்நீர் வற்றியபின் சிலவாகிய நீரோடு,
வாய்கால்களில் அறல் உண்டாகும்படி அழகுபெற்றுச் சென்றன.
முன்னர் தனக்கு உதவி செய்து முயன்றவர் பின்னொரு நாள் வாடி வருந்தும்போது, உதவியை
மீண்டும் செய்வார்கள் பெருமையுடையவர்கள். அவர்களைப்போல, ஆற்றில் வெள்ளம்
பெருகியபோது நீரை உண்ட மரங்கள் நீர் வற்றிய இளவேனிற் காலத்தில் சுரும்புகள் ஒலிக்க
வண்டுகள் ஆராவரிக்க, கொம்புகளினின்றும் பல மலர்கள் ஆற்றிலே உகும்படி இனிமை பொருந்தின
இளனேில் வந்துவிட்டது
மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று
பல் நீரால் பாய்புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல்வார, அகல் யாறு கவின்பெற
முன்ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளா் போல்
பல்மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன்அமா் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
கலித்தொகை -34 -1-7
நன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை!
நன்றியை நம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்!
Labels:
இயற்கை,
கலித்தொகை,
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்,
வைரமுத்து
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 10 ஜூலை, 2014
கலித்தொகை சொல்லித்தரும் வாழ்க்கைப்பாடம்.
நாம் எந்தப் பொருள்
வாங்கினாலும் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற செய்முறைக் குறிப்பேடு
கிடைக்கிறது. ஆனால் நாம் பிறந்தபோது இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று
அனுபக் குறிப்பேடுகளோடு பிறக்கவில்லை. இன்று பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைச்
சொல்லித்தர திரும்பிய பக்கமெல்லாம் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால் வாழ்க்கைப்
பாடத்தைச் சொல்லித்தர பயிற்சி நிலையங்கள் பெரிதும் இல்லை. கற்றவர்கள் அறிவார்கள்
நல்ல தமிழ் இலக்கியங்கள் நமக்கு வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கின்றன என்று..
கலித்தொகை சொல்லும் பாடம்
நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டியதாக உள்ளது.
தலைவியைத் தலைவன் திருமணம்
செய்துகொள்ளக் காலம் தாழ்த்தி வருகிறான். அப்போது தோழி அவனிடம் தலைவியின்
ஆற்றாமையைக் கூறி “நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்” எனச் சொல்வதாக அமையும்
அகப்பாடல் இது.
இப்பாடல் தரும்
கருத்துக்களை உணர்ந்த யாரும் செய்நன்றி மறக்கக்கூடாது!, சொன்ன சொல்லைக்
காப்பாற்றவேண்டும் என எண்ணுவர். இதுவே இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.
பாடலுக்குச் செல்வோம்.
கடலா? போர்க்களமா?
வரிசையாக உள்ள தோணிகள்
களிறுகளாகவும், அவைகளின் ஒலி பறையாகவும், கரையைச் சேர்ந்த அழகிய சிறகுகளை உடைய
பறவைகள் படையாகவும் கொண்டு அரசன் பகைவர் மேல் படையெடுத்துச் செல்லுவதைப்போல
வலிமையான கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே! நான் சொல்வதைக் கேள்..
வாழ்க்கைப் பாடம்
தனக்குப் பாடம் கற்பித்த ஆசான், தன்னிடமிருந்து ஒன்றும் பெறாமல்
மனம் வருந்தியபோது, தன்கைப் பொருளைப் பகுத்து கைமாறாகக் கொடுத்து உண்ணாதவனுடைய
செல்வம்,
தான் கற்ற வித்தையைத்
தவறான வழியில் பயன்படுத்துபவனுடைய செல்வம்,
தனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டபோது உதவியவர்களுக்கு ஒரு வருத்தம்
ஏற்பட்டபோது உதவாதவனுடைய செல்வம் ஆகிய இவையெல்லாம் தாமாகவே
தேய்ந்து அழிந்துபோகும். அதுமட்டுமன்றி, அவனுடைய செய்நன்றிக்கேடு, உடம்பினை ஒழித்து
உயிர்போன போதும் அதை அனுபவிக்கமால் போகாது.
உறவினர்கள் மனம்
வருந்தும் படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், முயற்சி
இல்லாத மன்னவனின் குடிகள்போலத் தாமாகவே தேய்ந்து அழியும்,
பிறர் நம்புமாறு சூளுரைத்தவன் தான் சொன்ன சொல்லைக் காக்காமல்
பொய்த்துப் போனால் தானாகவே தேய்ந்து போவான். சூளுறவினைப் பொய்த்த தீவினை,
மறுமைக்கண் வாளின்வாய்க் கூரிதாகவென்று சொர்க்கம் பெற்றானாயினும், அது அவனை அழிக்காமல்
விடாது.
தலைவ!
செய்நன்றிக் கேடும்,
சூளுறவு பொய்த்தலும் ஆகியவற்றின் கேடுகள் யாம் முற்கூறிய அத்தன்மையின. நீ
அத்தன்மைத்தாதலை நினைத்துப்பார்!
தன் பகைவனோடு சினந்த அரசன்,
பகை வேந்தன் கோட்டையின் புறத்தே வந்து முற்றுகை வினையான், தான் அடையும் வருத்தம்
போல் இவள் வரைவு கடிதின் முடித்தற்கு, விரைந்து வரும் நெஞ்சமோடு பெரிதும்
வருந்தினள். அவ்வருத்தம் நீங்க விரைந்து தலைவியை நீ திருமணம் செய்துகொள்வாய் எனத்
தோழி தலைவனை வேண்டிக்கொள்கிறாள்!
பாடல் இதோ,
நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்
கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்துக் காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே
தோழி தலைவனிடம் சொன்னது
கலித்தொகை -149
பாடலின் வழியே…
1.
செய்நன்றி மறத்தல்
கூடாது, சொன்ன சொல்லைக் காக்கவேண்டும் என இருபெரும் வாழ்வியற்
கடமைகளை இக்கலித்தொகைப் பாடல் அழகுபட
எடுத்துமொழிகிறது.
Labels:
கல்வி,
கலித்தொகை,
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 16 மே, 2014
வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்!
இன்றைய சமூகத்தில் பொய்சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம்
வாழத்தகுதியற்றவர்கள் என்று மதிப்பிடப்படுகிறார்கள்.
உண்மை மட்டுமே பேசுபவர்களை வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோலவே நாம்
பார்க்கிறோம்.
வாழத் தகுதியுள்ளன மட்டுமே வாழும்! அல்லன செத்துமடியும்! என்ற கோட்பாட்டின்படி,
இந்த உலகில் வாழத்தேவையான தகுதி, நடித்தல், பொய்சொல்லுதல். நான் வாழவும், என்னை நம்பியிருப்பவர்கள் வாழ்வதற்காகவும் தான், நான் பொய்சொல்கிறேன் என்று நாம் சொல்லும்
பொய்களுக்கு நாம் காரணம் சொல்லிக்கொள்கிறோம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










