Thursday, September 15, 2011

அடக்கம் செய்யவா அறிவியல்?செருப்புகளுக்காகக்
காலை வெட்டிக்கொள்ளலாமா?

பாலுக்குப் பூனையைக்
காவல் வைக்கலாமா?

குருவிக் கூட்டுக்குள்
அணுகுண்டுச் சோதனை நடத்தலாமா?

நெருப்பில் குளிர்காயலாம்
நெருப்புக்குள் குளிர்காயமுடியுமா?

நம் தேவைக்காகத்தானே அறிவியல்
அறிவியலின் சோதனைக்காகவா நாம்?

ஆண் பெண்
சிறியவர் பெரியவர்
ஏழை பணக்காரன்
படித்தவர் படிக்காதவர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர்

என எந்த பாகுபாடும் இன்றி
எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி..

அணுஉலை
மூச்சுக்காற்றா?
விச ஊற்றா?


எந்த திசை திரும்பினாலும் கேட்கும் ஒரே ஒலி..

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடவேண்டும்!!

“இத்தனை பேரும் இதுவரை எங்கு சென்றார்கள்“ என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...

“வருமுன்னே அறிவதற்கும், காப்பதற்கும்
மக்கள் என்ன தீர்க்கதரிசிகளா? கடவுளர்களா?“


அறிவாளிகளே இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..

அறிவியல் கொண்டு
ஆக்கம் செய்யலாம்!
அணு உலை கொண்டு மக்களை
அடக்கம் செய்யலாமா?

47 comments:

 1. கட்டாயம் வெற்றி கிடைக்கும் ....

  ReplyDelete
 2. பத்தாண்டு காலம் சும்மா இருந்ததற்காக - இனியும் பேசாமல் இருக்க வேண்டுமா? வெல்லட்டும் மக்களின் போராட்டம்.

  ReplyDelete
 3. //அறிவியல் கொண்டு
  ஆக்கம் செய்யலாம்!
  அணு உலை கொண்டு மக்களை
  அடக்கம் செய்யலாமா?//
  நல்ல கேள்வி.பதில் நல்லதாக இருக்கட்டும்!

  ReplyDelete
 4. தேவையான நேரத்தில் தேவையான
  பதிவு முனைவரே!
  மத்திய மாநில அரசுகள் செவி சாய்குமா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. இன்குலாப் ஜிந்தாபாத்

  ReplyDelete
 6. கவிதையின் கேள்விகள் முக்கியமானவை.புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்.

  ReplyDelete
 7. நல்ல கேள்விதான்...!!!

  ReplyDelete
 8. நம் தேவைக்காகத்தானே அறிவியல்
  அறிவியலின் சோதனைக்காகவா நாம்?//  சாட்டையடி கேள்வி, அரசாங்கத்தின் காதுக்கு கேட்குமா பார்ப்போம்...!!

  ReplyDelete
 9. குருவிக் கூட்டுக்குள்
  அணுகுண்டுச் சோதனை நடத்தலாமா//

  வணக்கம் நண்பா,
  அணு உலையின் தீமையினைச் சொல்லும் அற்புதமான கவிதை,
  இது நிச்சயம் மக்கள் மனங்களில் வேரூன்றி,அணு உலையினை மூடச் செய்யும் பிரச்சாரத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும்,

  காலத்திற்கேற்ற காத்திரமான கவிதை.

  ReplyDelete
 10. சிந்தித்துப்பார்க்க வெண்டிய கேள்விகள் தான். அருமை.

  ReplyDelete
 11. ''...செருப்புகளுக்காகக்
  காலை வெட்டிக்கொள்ளலாமா?

  பாலுக்குப் பூனையைக்
  காவல் வைக்கலாமா?

  குருவிக் கூட்டுக்குள்
  அணுகுண்டுச் சோதனை நடத்தலாமா?

  நெருப்பில் குளிர்காயலாம்
  நெருப்புக்குள் குளிர்காயமுடியுமா?

  நம் தேவைக்காகத்தானே அறிவியல்
  அறிவியலின் சோதனைக்காகவா நாம்?..''

  நியாயமான சீற்றத்தின் வெளிப்பாடு இது...
  நம் தேவைக்கான அறிவியல் என்று யாராவது புரிந்து கொள்வார்கள் எக்காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. அறியாயம் என்றும் வெல்லாது ஒரு இடத்தில் தோற்றுத் தானே ஆக வேண்டும். நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.
  நல்ல பதிவு, வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அணுவீச்சின் அபாயத்தை கொடூரத்தை
  இதைவிட தெளிவாகச் சொல்ல முடியாது
  அருமையான பதிவு
  நிச்சயம் இந்த போராட்டம் வெல்லும்

  ReplyDelete
 13. இதை அரசு சம்பந்த பட்டவர்கள் உணர வேண்டும்

  ReplyDelete
 14. நன்றி நண்பரே.இவ்வளவு ஆதரவு இருக்கும் போது நாம் ஏன் தோற்க்கபோகிறோம்.நிச்சயமாக வெல்வோம்

  அப்படியே இதையும் படித்து விடுங்கள் அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

  தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

  ReplyDelete
 15. அணுமின் நிலையத்திற்கு எதிரான தங்களின் கருத்துள்ள வரிகளுக்கு நன்றி நண்பா!

  //“இத்தனை பேரும் இதுவரை எங்கு சென்றார்கள்“ என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...//

  எனக்கு அப்படி தோன்றவில்லை நண்பா! ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, செமினாருக்காக தமிழ் ஆசிரியர் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி என்னை பாடம் எடுக்க சொன்ன போது தான் இதனை பற்றி நான் தெரிந்துக் கொண்டேன். அப்போதே போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். தற்போது ஜப்பான் சுனாமிக்கு பிறகு அணுமின் நிலையத்தின் ஆபத்து பற்றி பலர் தெரிந்துக் கொண்டதால் அந்த போராட்டம் வீரியம் அடைந்திருப்பதாக கருதுகிறேன்.

  ReplyDelete
 16. சமூக அக்கறையுடன் கூடிய கவிதை வரிகள் நண்பரே
  உங்கள் நோக்கம் மிக புனிதமானது
  உங்களின் சமூக கோபம் பிடித்திருக்கிறது

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 17. குணா,

  கவிதையாக்கம் அறிவை தூண்டும் விதமாக அற்புதமாய் வந்திருக்கிறது.

  நம் தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. ஒரு திட்டமிடலுடன், மாணவர்களுக்கு “கூடங்குளம்” அனு நிலையம் பற்றிய தீமைகளை விளக்கிக் கூறி,

  மாணவர்கள் கையில் உண்ணா போராட்டத்தை ஒப்படைக்கலாமே! - என்பது என் தனிப்பட்ட கருத்து.

  (கவனிக்க : தகுந்த திட்டத்துடனும், கண்காணிப்புடனும் நிகழ்த்த வேண்டும். அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பளிக்க கூடாது.)

  ReplyDelete
 18. கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடவேண்டும்...

  அணுமின்நிலையத்தீமையினைச் சொல்லும் அற்புதமான கவிதை...

  ReplyDelete
 19. //அறிவியல் கொண்டு
  ஆக்கம் செய்யலாம்!
  அணு உலை கொண்டு மக்களை
  அடக்கம் செய்யலாமா?//

  அணுமின்நிலையத்தின் ஆபத்தை அருமையாக கவிதை படுத்தியிருக்கிறீர்கள்

  போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. /அறிவியல் கொண்டு
  ஆக்கம் செய்யலாம்!
  அணு உலை கொண்டு மக்களை
  அடக்கம் செய்யலாமா?//

  பதில் சொல்ல யார் முன்வருவார்கள்?மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும். ஆதங்கம் தெறிக்கும் விழிப்புணர்வுக் கவிதைக்கு நன்றி.

  ReplyDelete
 21. //அறிவியல் கொண்டு
  ஆக்கம் செய்யலாம்!
  அணு உலை கொண்டு மக்களை
  அடக்கம் செய்யலாமா?//

  அறிவியலை ஆக்கத்திற்கு பயன்படுத்தினால் நல்லது.

  ReplyDelete
 22. “வருமுன்னே அறிவதற்கும், காப்பதற்கும்
  மக்கள் என்ன தீர்க்கதரிசிகளா? கடவுளர்களா?“
  //
  ஆம் நண்பரே!சாமான்ய மக்கள் அறிவதற்கு புரியாத விஷ(ய)ம் தான் இது.

  ReplyDelete
 23. என்ன சொல்ல சார்..

  எல்லாம் அரசியல் சார்..

  மாநில அரசை கேட்டால் மத்திய அரசு என்று பதில் வரும்..

  டாட்டா(TATA ) -க்கு பாடம் புகட்டிய மேற்குவங்க மக்கள் போலே இங்கும் கூட ஆலையை முற்றுகை இடுவோம்.. யார் உள்ளே சென்று பணி செய்கிறார்கள் பார்க்கலாம்
  சாட்டை எடுக்கும் வரை எவரும் கவனிக்க மாட்டார். காந்தியோடு செத்துப்போன உண்ணாவிரத போராட்டம் கைவிட்டு வேறு வழியில் ஆரம்பித்தால் எல்லாம் சரியாகும்.

  முடிவில்லா மழையோடு விளையாடும் எங்கள் கூட்டம்
  அடிவானின் நிறமெலாம் விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
  விடிகாலை நிலவோடு நம் புன்னகையின் மூட்டம்
  அடிநெஞ்சில் உற்சாகம் கற்பூரம் போலே பற்றட்டும்
  சீறிப்பாயும் வெள்ளம் இள உள்ளம் துள்ளி ஆடட்டும்
  காட்டுத்தீயின் பந்தாய் என் கால்கள் இங்கே ஓடட்டும்
  அடிவைத்தால் அதிரட்டும் வான்மீன்கள் உதிரட்டும்
  போராட்டம் மட்டும் வானம் எட்டி மேகம் முட்டி கொட்டட்டும்

  இது ஓர் திரைப்படப்பாடல் இங்கே இது பொருத்தம்..

  ReplyDelete
 24. அறிவியல் அழிவிற்கா????
  அழகிய கவிதை படித்தீர் முனைவரே....

  கூடிநிற்போம்
  கூக்குரலிடுவோம்...
  கூடங்குளம் மூடும்வரை......

  ReplyDelete
 25. உண்மைதான். அறிவியலை நாம் பயன்படுத்தும் விதம்தான் அதனை சிறப்பிக்கிறது. இந்தியா போன்ற நாட்டிற்கு அணுசக்திதான் ஒரே மூலாதரம் என்று கொள்ளத்தேவையில்லை. இனியாவது நமக்காக போராட வேண்டும்.

  ReplyDelete
 26. அடக்கம் செய்யவா அறிவியல்..?
  தலைப்பே விளக்கம் சொல்கிறது

  ReplyDelete
 27. உண்மை நிலையை வலியுருத்தும் வரிகள்...
  கவிதை மிக அருமை...
  கண்டிப்பாக வெற்றி பெருவோம்...

  ReplyDelete
 28. அன்பின் உறவுகளே

  தங்கள்
  வருகைக்கும்
  புரிதலுக்கும்
  அறிவுறுத்தலுக்கும்
  கருத்துரைக்கும்

  நன்றிகள்!!

  ReplyDelete
 29. கண்டிப்பாக ஜெயம் பெறுவோம்.

  ReplyDelete
 30. "அறிவியல் கொண்டு
  ஆக்கம் செய்யலாம்!
  அணு உலை கொண்டு மக்களை
  அடக்கம் செய்யலாமா?"

  சிந்திக்க வேண்டிய வரிகள்..

  ReplyDelete
 31. நண்பரே இன்றைய பதிவில் இப்பதிவின் லின்க் இணைத்துள்ளேன்

  ReplyDelete
 32. வருகைக்கு நன்றி மாயஉலகம்
  நன்றி வழக்குரைஞரே
  மகிழ்ச்சி சம்பத்.

  ReplyDelete
 33. அணுஉலை
  மூச்சுக்காற்றா?
  விச ஊற்றா?

  எச்சரிக்கை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 34. மிகச்சரியான கருத்துக்கவிதை முனைவரே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. கூடங்குளம் பற்றிய எனது கருத்தை 22 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன். இது தாங்கள் அறிந்ததே! தங்களின் வாசகர்களும் அறியும் பொருட்டு அதன் இணைப்பை இங்கு கொடுக்கிறேன்.
  http://ragasiyasnegithiye.blogspot.com/2011/11/blog-post_04.html

  ReplyDelete
 36. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் இணைப்பளித்தமைக்கும் நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 37. நல்ல கருத்து !
  முன்னாலே அறிய நாம என்ன
  தீர்க்கதரிசிகளா!
  உங்களை போன்ற சிந்தனையாளர் களால்,
  காலம்!ஒரு நாள்!

  ReplyDelete
 38. @Seeni தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றி சீனி.

  ReplyDelete
 39. //அறிவியல் கொண்டு
  ஆக்கம் செய்யலாம்!
  அணு உலை கொண்டு மக்களை
  அடக்கம் செய்யலாமா?//

  நல்ல கேள்வி ஐயா...
  ஆனால், என்னைக் கேட்டால் முன்பே இதனை உணர்ந்து போராட்டம் நடத்தியவர்களை "தங்கள் பிழைப்பைக் கெடுக்க வந்தவர்கள்" போல சில மக்கள் விரட்டி விட்டது தான் பரிதாபம். அன்றே விழித்திருந்தால்--?

  ReplyDelete
 40. பட்ட பின்பு ஞானி என்பது சரியாகத் தான் இருக்கிறது நண்பா.

  ReplyDelete