Monday, October 24, 2011

கூடங்குளம் – சில தவறான புரிதல்கள்..இன்று நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரின் பேச்சினைப் பற்றி சொன்னார்...

நல்லதொரு ஆன்மீகச் சொற்பொழிவாளரான அவர் நன்றாகத் தான் பேசிக்கொண்டிருந்தார்..
உரைவீச்சில் இயல்பாக்க் கூடங்குளம் பற்றி பேசினார்...

“ஒரு குடும்பம் நல்லா இருக்கனும்னா
அந்தக் குடும்பத்தில ஒருத்தர் இறந்தால் பரவாயில்லை..
ஒரு ஊரு நல்லா இருக்கனும்னா
ஒரு குடும்பம் அழிஞ்சாப் பரவாயில்லை..
ஒரு நாடு நல்லாயிருக்கனும்னா
ஒரு ஊரே அழிஞ்சாப் பரவாயில்லை..

அதுபோல இன்று நம் நாட்டின் அடிப்டைத் தேவை மின்சாரம்..
அதற்கு ஒரு கூடங்குளம் அழிஞ்சா என்ன? குறைஞ்சா போயிடும்
என்று..“

என்னவொரு அறியாமை நிறைந்த பேச்சு..

இந்த ஆன்மீக ஞானியின் பிதற்றலுக்கும்.. 
மத்திய, மாநில அரசின் புரிதலுக்கும் எனக்கொன்றும் பெரிய வேறுபாடு தெரியவில்லை..

அறிவியல் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது..
அணுமின் நிலையங்களுக்கு மாற்றாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்....
வெளிநாடுகளில் ப்ளும்பாக்சு என்று என்னென்னவோ புதிய புதிய நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்..

நாம் இன்னும்....


தொடர்புடைய இடுகைகள்


52 comments:

 1. //என்னவொரு அறியாமை நிறைந்த பேச்சு..//


  அறியாமை பேச்சல்ல.. ஆணவப் பேச்சு! இப்படி சொல்பவர்கள் கூடங்குளத்தில் தங்க தயாரா?

  தங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 2. சுயநலத்தின் உச்சகட்ட பேச்சாக இருக்கிறது... அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டதற்கு உங்களிடம் சரியான காரணம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... அவர் நல்லா இருக்கட்டும்...

  ReplyDelete
 3. ஒரே குழப்பம் அப்பா !!

  ReplyDelete
 4. ஆன்மீகக் கருத்துக்கள் பலவும் பொய்யும் புரட்டும் தான். ஆனாலும் அணு உலை குறித்து உண்மையான புரிதல் உணர்வு இன்றி இது போன்று அறிந்தோ அல்லது அறியாமலோ பரப்பப்படுவது விஷமமானது.

  ReplyDelete
 5. தயவு செய்து சொல்லுங்கள், யாரந்த கேடு கேட்ட ஆன்மீக சொற்பொழிவாளன்?

  ReplyDelete
 6. சில ஆன்மீக வாதிகள், சிலநேரங்களில் சில மனிதர்கள்
  என்பது போல தங்களை ஒரு அரசியல் வாதிபோல
  காட்டிக் கொள்வார்கள் அதன் விளைவே இது!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. இப்பிரச்சனை விரைவில் தீரவேண்டும் அதுவே தற்போதைய வேண்டுதல்...

  ReplyDelete
 8. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 9. ஒருத்தரை கொன்று புதைத்து அதன் மீது நடப்படும் மரத்தின் கனி
  நிச்சயம் இனிக்காது!

  ReplyDelete
 10. அடுத்தவனைக் கொன்று தான் வாழ நினைப்பவர்கள் நர மாமிசம் தின்பவர்களுக்கு ஒப்பானவர்கள் ..(:

  ReplyDelete
 11. அணு உலைகள் என்றால் ஏதோ நாட்டிற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்பது போன்ற தவறான மாயை சிலரிடம் உள்ளது .இருந்தாலும் இந்த ஆன்மீகவாதி மிகவும் மோசம் ...

  ReplyDelete
 12. வாய்ப்பேச்சில் வீரர்கள்
  உன்னத நிலையை அறியாத மூடர்கள்..
  உணர்ந்தும் ஜால்ரா அடிக்கும் அடிவருடிகள்..
  போகட்டும் பிழைத்துப்போகட்டும்..
  நமக்குத் தேவை அணுவுலை மூடவேண்டும் என்பதே....

  ReplyDelete
 13. தன் உயிர் துறக்க நேரும் சந்தர்ப்பத்திலும், ஒரு சிறு உயிருக்கு கூட தீங்கு நினைக்காதவர்கள் தான் ஞானிகள்...

  ஒரு ஊரே அழிஞ்சாப் பரவாயில்லை.. என்கிறார் இவர் ஞானியே அல்ல...

  ReplyDelete
 14. ஆமாம்! அவன் வீட்டுக்கு மின்சாரம் வேண்டுமே, அதனால் அவன் அப்படித்தான் பேசுவான்.

  ReplyDelete
 15. என்ன பேச்சு பேசறாங்க.,

  ReplyDelete
 16. எந்த மதத்தை சேர்ந்த தலைவர் இப்படி பேசி இருந்தாலும் அதற்க்கு நான் எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் . அது அவர் அறியாமல் தான் பேசியிருக்க வேண்டும் . ஏன் எனில் அணுமின் நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானது .., அப்படியிருக்க அவர் இப்படி பேசி இருப்பது அவரின் அறியாமையை காட்டி உள்ளது

  ReplyDelete
 17. சில பழமொழிகள்போல ஏதாவது வேறு கருத்து இருக்குமோ !

  ReplyDelete
 18. BloomBox was invented by a tamilan "KR Sridhar".

  ReplyDelete
 19. சார்,

  அணுஉலை அமைப்பதை ஆதரித்து பேசும் அனைவருக்கும் அதானால் வரும் ஆபத்து தெரியும். ஆனால், அவர்கள் நேரில் பாதிக்க படாத வரை இது போல நொள்ள தனமாக பேசுவார்கள். பார்லிமெண்டின் அருகில் ஒரு அணுஉலை அமைத்து வட இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்தால் என்ன? மேலும், இதில் வரும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு என்ற நினைகிறீர்கள்? இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தான் போகபோகுது. இப்போவே, நெய்வேலியின் மின்சாரத்தில் பெரும்பகுதி வேறு மாநிலங்களுக்குதான் செல்கிறது (அனால் அந்த மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தர மாட்டார்கள்).

  ReplyDelete
 20. @Abdul Basith எல்லாம் சுயநலத்தின் அடையாளம் நண்பரே.

  ReplyDelete
 21. @suryajeeva அவர் கருத்தின் மீது தான் எனக்குக் கோபம் நண்பரே...

  அவர் பெயரின் மீது அல்ல..
  அதனால் தான் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை..

  தங்கள் புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 22. @நெல்லி. மூர்த்தி ஆம் நண்பா விசத்தை முறிக்கும் மருந்தாக நம் எழுத்துக்கள் இருக்கட்டும்..

  ReplyDelete
 23. @வித்யாசாகரன் (Vidyasakaran) தவறான கருத்தை எதிர்ப்போம் கருத்தாளரை விட்டுவிடுவோம் என்பது என் கொள்கை நண்பா...

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 24. @கவிதை வீதி... // சௌந்தர் // அனைவரின் எதிர்பார்ப்பும் இதுதான் நண்பா..

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 25. @கோகுல் மிக அழகாக சொன்னீங்க கோகுல்.

  ReplyDelete
 26. ஒன்னுமில்லை அவன் தலையில நம்ம அடுப்புல வைக்கிற உலைய வச்சா போதும் திருந்திடுவான்.

  ReplyDelete
 27. இந்த கூடங்குளம் பிரச்சினையில் ஆளாளுக்கு குழப்பிக்கிட்டு இருக்காங்க.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 28. @மகேந்திரன் உண்மைதான் நண்பா வாய்ப்பேச்சில் வீரர்கள்தான் இவர்கள்..

  ReplyDelete
 29. @ராஜா MVS ஆனால் இவர்களையும்தான் மக்கள் நம்புகிறார்களே..

  ReplyDelete
 30. @சத்ரியன்சுயநலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது பாருங்க நண்பா..

  ReplyDelete
 31. @!* வேடந்தாங்கல் - கருன் *! பேசிப் பேசியே நாட்டைப் பிடிச்சவங்கதானே நண்பா நம் தலைவர்கள்..

  ReplyDelete
 32. @இருதயம் இயற்கைச் சீற்றங்களின் முன்னர் எத்தகைய பாதுகாப்பானாலும் கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும் நண்பா...

  வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 33. @ஹேமா நேரடியாகச் சொன்ன கூற்றுதான் ஹேமா ..


  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 34. @Ramesh தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்..

  ReplyDelete
 35. @Sankar Gurusamy வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 36. தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 37. "நிர்பந்தமே கண்டுபிடிப்புகளுக்கான தாய்" என ஒரு சொலவடை உண்டு. ப்ளூம் பெட்டி போல இன்னும் அதிக, அரிய, உலகை உய்விக்கும் படியான கண்டுபிடிப்புகள் வர வேண்டும். வரும்.

  ReplyDelete
 38. காத்திருப்போம் இரசிகன்

  ReplyDelete