Sunday, September 18, 2011

சொரணை (காசியானந்தன் கதை)
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தம் கவிதைகளால் உலகத்தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராவார். இவர் கவிதைகளில் உள்ள வேகம் சற்றும் குறையாமல் கதையும் சொல்லும் திறன் கொண்டவராவார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று இன்றைய சிந்தனைக்காக...

சொரனை

நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம்
தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.

“மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே – பார்... பார்... அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள் என்றது அறுகம்புல்.

நெருஞ்சி சூடானது.

“என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம்
நான் தாங்கி்க் கொள்ளவேண்டுமாக்கும்..“

நெருஞ்சிப்புல் சொன்னது..

“வதைபடுவதை விட
புதைபடுவது மேல்“


தொடர்புடைய இடுகை.

அஃறிணை பேசுகிறேன்!

32 comments:

 1. ”நறுக்”-குனு குத்துது.

  பகிர்விற்கு நன்றிங்க குணா.

  ReplyDelete
 2. சபாஷ்... உங்கள் அக்றிணை உயர்திணை பதிவுக்கு இங்கே இணைப்பு கொடுத்தால் அருமையாக இருக்கும்...

  ReplyDelete
 3. வாழ்வியல் தத்துவத்தை
  சிறு குப்பியில் அடக்கி
  கொடுத்தது போல

  அருமையாக இருந்தது முனைவரே....

  ReplyDelete
 4. //“வதைபடுவதை விட
  புதைபடுவது மேல்“//

  அருமையான வரிகள்

  ReplyDelete
 5. காசியாந்தன் கவிதைகளும் கதைகளும் அருமையே. அதனை வாழ்த்தலாம். எனது ஊரிலே வாழ்ந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். அவர் பற்றி நன்கு அறிந்திருக்கின்றேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. சார் ,பகிர்ந்து கொள்ள கூகுள் பிளஸ் ,பேஸ் புக் ,டுவிட்டர் பட்டனலாம் காணோம் ...

  நன்றி ...

  ReplyDelete
 7. மிக அருமையான வரிகள்... எனக்கு இப்போதைக்கு தேவையான வரிகள்... எத்தனை வதைப்பட்டாலும் சரி முணுக்கென்று ஒரு கோபம் கூட காட்டாது இன்முகம் காட்டிட நினைக்கவைக்கும் வரிகள்..... இனி நானும் இப்படி இருக்க முயல்கிறேன் குணசீலா...

  அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

  ReplyDelete
 8. வதைபடுவதை விட புதைபடுவது மேல்! வாய்மூடி மெளனியாயிருந்து அடிமைகளைப்போல் ஆண்டுகள் பல வாழ்வதிலும், எதிர்த்துப் போராடி ஒரு நாள் வாழ்வதே பெருமை என்னும் உயரிய சிந்தனையை நெருஞ்சி மூலம் நன்றாகவே மனம் தைக்கும்படி உரைத்துள்ளார் ஆசிரியர். கவிஞர் காசியானந்தன் அவர்களுக்கும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. //“வதைபடுவதை விட
  புதைபடுவது மேல்“//
  சிறப்பான வரிகள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. கடைசி வரிகள் அழுத்தமானவை .. அற்புதம்

  ReplyDelete
 11. கவிதையை விட மிக ஆழமாக
  மனதை பாதித்துப் போகும் கதை
  அறியத் தந்தமைக்கு நன்றி
  த.ம 9

  ReplyDelete
 12. கதையல்ல முனைவரே!
  இதும் உணர்ச்சிக் கவிதையே
  அடுத்தவர் திறமையை கடுத்துக்காட்டும் உங்களின் மனப்பாங்கு போற்றத் தக்கது
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. “வதைபடுவதை விட
  புதைபடுவது மேல்“

  கஷ்டப்பட தேவையில்லையே

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 14. ’நெருஞ்சி முள்’னுதான் இதுவரை கேள்விப்பட்டிருக்கேன்.நெருஞ்சிபுல்னு இப்பதான் படிக்கிறேன்.கதையின் கருத்து அருமை

  ReplyDelete
 15. மனதைக் கவர்ந்த பதிவு.

  ReplyDelete
 16. நாலு வார்த்தை நருக்கென்று...

  பதிவு அருமை.. நண்பரே..

  ReplyDelete
 17. “வதைபடுவதை விட
  புதைபடுவது மேல்“


  அருமை நண்பரே!

  ReplyDelete
 18. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
  வணக்கம். நான் தற்சமயம் தான் உங்களுடைய பதிவில் இணைந்துள்ளேன். உங்களுடைய அனைத்துப் பதிவுகளும் மிக அருமை.

  ReplyDelete
 19. 'வதைபடுவதைவிட புதைபடுவது மேல்' அருமை.
  நல்ல கதை.
  நெருஞ்சி முள் என்றுதான் சொல்லுவோம்... நெருஞ்சிப் புல் என்பது புதிய வார்த்தை.

  ReplyDelete
 20. நல்ல பகிர்வு. . . அடிமைத்தனத்தை எதிர்க்கும் வரிகள் அருமை. . .

  ReplyDelete
 21. புரிதலுக்கு நன்றி சத்ரியன்
  வருகைக்கு நன்றி சசி
  நன்றி இராஜா

  ReplyDelete
 22. தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி சூர்ய ஜீவா.

  இதோ கொடுத்துவிட்டேன்..

  ReplyDelete
 23. வருகைக்கு நன்றி மகேந்திரன்
  நன்றி சம்பத்.
  நன்றி நண்டு.
  மகிழ்ச்சி சந்திர கௌரி.

  ReplyDelete
 24. வருகைக்கு நன்றி ஸ்டாலின். அதையெல்லாம் முகப்புத்தகத்திலேயே தானாக இற்றைப்படுத்தும் நுட்பங்களைக் கையாண்டுள்ளேன்.

  ReplyDelete
 25. புரிதலுக்கு நன்றி மஞ்சு
  நன்றி கீதா
  நன்றி சென்னைப் பித்தன் ஐயா
  நன்றி இராம்வி
  நன்றி உங்கள் நண்பன்
  நன்றி இரமணி ஐயா

  ReplyDelete
 26. உண்மைதான் புலவரே
  நன்றி எம்ஆர்

  புல் இனம் சார்ந்த தாவரம் என்பதால்அவ்வாறு சொல்லியிருக்கிறார் திருமதி ஸ்ரீதர்.

  மகிழ்ச்சி சண்முகவேல்

  நன்றி சதீஷ்
  நன்றி இராஜா
  மகிழ்ச்சி மரியம்மாள்
  நன்றி மாயஉலகம்
  நன்றி பிரணவன்
  நன்றி குமார்.

  ReplyDelete